மகாத்மா ஜோதிராவ் பூலே (கி.பி. 1827-1890)
மறைக்கப்பட்ட மாமனிதர்களில் இவர் முதன்மையானவர். காரணம் திட்டமிட்டே இவரை இருட்டடிப்புச் செய்தனர் ஆரிய பார்ப்பனர்கள்.
ஆரியர்களின் சாஸ்திரங்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதி
மக்களைச் சுரண்டவே உருவாக்கப்பட்டன என்பதைஇவர் தீவிரமாக எடுத்துரைத்தார்.
புரோகிதத்திற்கும் ஜாதி அமைப்புகளுக்கும் எதிராக இவர் போர்த் தொடுத்தார்.
சாதாரண மனிதர்கள், தொழிலாளர்கள், புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட
மக்கள், பெண்கள் போன்றவர்களுக்காக உரிமைக் குரலை உரக்க எழுப்பினார்.
தீண்டத்தகாதவர்களுக்கும் பெண்களுக்கும் மகாராட்டிரத்தில் பள்ளிகளைத் துவக்கிய முதல் இந்தியர் இவர்.
சூத்திரர்கள், ஆதிசூத்திரர்கள், பெண்கள் மத்தியில் நிலவி வந்த
அறியாமையையும், மூட நம்பிக்கைகளையும் அகற்றியும், அவர்களை
அடிமைத்தளையிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும் இவர் பணியாற்றினார்.
இவை அனைத்தும் ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான செயல்கள்
அல்லவா? மனித நேயத்திற்குரிய, சமதர்மத்திற்கு உகந்த செயல்கள்
இவையென்றாலும், ஆரியப் பார்ப்பன சாஸ்திரத்திற்கும், அவர்களின்
சுயநலத்திற்கும் எதிரான செயல் இவை என்பதால், இவரை இருட்டடிப்புச் செய்தனர்.
இவரைப் பற்றியும், இவர் செய்த புரட்சிகள் பற்றியும் வெளியில் தெரியாமல்
மறைத்தனர். இவருடைய சிந்தனைகளும், சீர்திருத்தங்களும், கொள்கை
முழக்கங்களும், புரட்சிச் செயல்பாடுகளும் வெளியில் பரவினால், பார்ப்பன
ஆதிக்கம் தகர்ந்து வீழும் என்பதால் இவரை, இவர் கொள்கைகளை, புரட்சிகளை
மறைத்தனர்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பூலேயின் வரலாற்றை எழுத நினைத்து அதை
1954இல் தனஞ்செய்கீர் என்ற எழுத்தாளரிடம் கூறியும் உள்ளார். இந்தியாவின்
மிகப் பெரிய சீர்திருத்தவாதியாக இவரை அம்பேத்கர் மதித்தார்.
ஆனால், அம்பேத்கரின் உடல்நிலை மிகவும் மோசம் அடையவே அவரது இவ்விருப்பம்
நிறைவேறாமலே போயிற்று. எனவே, அவர் விருப்பத்தை நேராகக் கேட்டறிந்த
தனஞ்செய்கீர் (னுயயேதேயலமநநச) தமது அரும்பெரும் முயற்சியால் பூலேவின்
வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாக எழுதினார்.
இது ஒரு தனிமனித வரலாறு அல்ல. பூலே வாழ்ந்த காலத்தில் நிலவி வந்த, ஆரிய
ஆதிக்கத்தின், அதன் கோரப் பிடியின் கொடுமைகளின், தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட
மக்கள் அடைந்த இழிவுகளின் இன்னல்களின் விளக்க வரலாறாகவே இது அமைகிறது.
மேலும் இந்தியப் பெண்கள் ஏற்ற அவலங்கள், அடக்கு முறைகள், வாழ்க்கைச்
சிக்கல்கள், வேதனைகள் போன்ற பல்வேறு சமூகச் சீர்கேடுகளையும் அதற்கு எதிரான
போர்களைப் பற்றியும் தெரிவிக்கும் ஓர் ஒப்பற்ற காவியமாகவே இவர் வாழ்க்கை
வரலாறு அமைகிறது என்றால் அது மிகையல்ல.
இந்திய விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களுக்காக இவர் மேற்கொண்ட
நடவடிக்கைகளும், போராட்டங்களுமே பிற்காலத்திய தொழிலாளர் இயக்கங்களின்
தோற்றத்திற்கே வழிவகுத்தன என்பது மறுக்க இயலாத உண்மை.
தமிழகத்தில் எப்படி பெரியாரை விட்டு விலகி எந்த ஓர் ஆட்சியாளரும்
நிலைகொள்ள முடியாதோ அதேபோல், மராட்டியத்தில் பூலேயின் தத்துவப் போரைப்
பின்பற்றாத எந்தவோர் ஆட்சியாளரும் நிலைகொள்ள இயலாது; நீடிக்க இயலாது என்பதே
இன்றைய யதார்த்த நிலை.
இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் அனைவரும் பூலேயின் வாழ்க்கை வரலாற்றை,
சிந்தனைகளை, அவர் நிறைவேற்ற முனைந்த சமூகப் புரட்சிகளை முன்னெடுத்துச்
செல்லாமல் இந்தியாவில் தாங்கள் விரும்பும் எந்தவொரு முன்னேற்றத்தையும்
எவரும் பெற இயலாது.
காரணம், தந்தை பெரியார். பூலே போன்றவர்கள் கற்பித்தது போல், சமூக
சமத்துவத்தை நிலைநாட்டாமல், பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்ட முற்படுவது
பொருளற்ற, நடைமுறைக்கு ஒவ்வாத, உண்மையறியா முயற்சியாகவே அமையும்.
எனவே, இந்தியாவில் எழுச்சிக்கும், மீட்சிக்கும், வளர்ச்சிக்கும்
அடிப்படையான செய்திகளை, நிகழ்வுகளை, கொள்கைகளை, போராட்டங்களை உள்ளடக்கிய
பூலேயின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை நுட்பமாகவும், திட்பமாகவும் இனி
காண்போம்.
பிறப்பு
ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்க ஒழிப்பிற்கான அதிதீவிரமான செயல்பாடு,
பூலேயின் தாத்தாவாலே தொடங்கப்பட்டு விட்ட நிகழ்வுதான் வரலாற்றில்
வியப்பிற்குரியதாகும்.
ஜோதிராவ் பூலேயின் தாத்தா கிராமத்தின் கடைநிலை ஊழியராகப் பணியாற்றியவர்.
சதாராவிற்கு இருபத்தைந்து மைல்களுக்கு அப்பாலிருந்து காட்கன் என்ற ஊரில்
அவர் வேலை செய்தார். கிராம அதிகாரியின் வேலையாளாக இவர் பணிபுரிந்தார்.
நிலவரி வசூல் செய்வதால் அதிகாரியுடன் செல்லல், பயிர் செய்யப்பட்டதை பதிவு
செய்வதில் உதவுதல் போன்ற பணிகள் இவருடையது.
இவர் பணியாற்றிய கிராம அதிகாரியான (குல்கர்னி) ஆரியப் பார்ப்பனரின்
செயல்பாடுகள், தொல்லைகள், கொடுமைகள் பூலேயின் தாத்தாவைக் கொதிப்படையச்
செய்தன. எனவே, அந்த ஆரியப் பார்ப்பனரைக் கொன்றுவிட்டு, பூனா மாவட்டம்
புரந்தர் வட்டத்தில் உள்ள கான்வாடி கிராமத்தில் குடிபுகுந்தார். அங்கு
வாழும்போது அவருக்கு ஓர் ஆண்குழந்தை பிறக்க, அதற்கு சேதிபா என்று
பெயரிட்டார்.
ஏழ்மை நிலையிலிருந்த பூலேயின் தாத்தாவிற்கு மெல்ல மெல்ல வசதி கூடியது.
தன் ஒரே மகனான சேதிபாவை அவர் செல்லமாக வளர்க்க, செல்வத் திளைப்பில் சேதிபா
ஊதாரியானான். விளைவு பொருட்களை இழந்து வறுமையில் வாட நேர்ந்தது.
எனவே, பிழைப்பு தேடி பூனாவிற்குச் சென்றார் சேதிபா. சேதிபாவிற்கு ரனோஜி,
கிருஷ்ணா, கோவிந்த் என்று மூன்று மகன்கள். தந்தையின் ஊதாரித்தனத்தை
வெறுத்த இம்மூவரும், வறுமையிலிருந்து மீள, பிழைப்பை நடத்த ஆடுகள்
மேய்த்தனர்.
இவர்களின் நற்செயல்களைக் கண்ட இவர்களது முதலாளியான பூ வியாபாரி ஒருவர்,
இவர்களுக்கு பூ வியாபார நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தார். நேர்மையாகவும்,
நாணயமாகவும் தொழில் செய்து முன்னேற அவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியைப் பயன்படுத்தி, இம்மூன்று சிறுவர்களும், பூ வியாபாரத்தில்
சிறப்பான பெயர் எடுத்தனர். இதைக் கண்ட பேஷ்வா (ஞநளாறய) தன் வேலைகளுக்கு
இவர்களைப் பயன்படுத்தினார்.
பேஷ்வாவின் பயன்பாட்டிற்கென மலர் மெத்தைகள், தலையணைகள், மாலைகள்
போன்றவற்றை இவர்கள் செய்து தந்தனர். இவர்களின் செயல்களால் கவரப்பெற்ற
பேஷ்வா, முப்பத்தைந்து ஏக்கர் நிலத்தை இம்மூவருக்கும் கொடுத்து உதவினார்.
இதைப் பயன்படுத்தி இம்மூவரும் புகழ்பெற்ற பூ வணிகர்களாக மாறினர்.
ஜோதிராவின் தாத்தா மாலி ஜாதியைச் சேர்ந்தவர். இவர்களின் குடும்பப் பெயர்
கோர்கி (ழுடிசபாந) என்பது. ஆனால், தற்போது இவர்கள் பூ வியாபாரத்தில்
புகழ்பெற்று விளங்கியதால், இவர்கள் குடும்பம் பூலே என்ற பெயரைச் சூட்டிக்
கொண்டது. அதுவே அதன்பின் நிலைத்துவிட்டது.
தனது மகன்கள் மூவரும் வியாபாரத்தில் சிறப்புற விளங்குவதைக் கண்ட சேதிபா பூலே மகிழ்வடைந்தார். அந்த மகிழ்வுடனே மரணமும் அடைந்தார்.
அவரது முதல் மகனான ரனோஜி சுயநலம் மிக்கவர் பேஷ்வா அன்பளிப்பாகக் கொடுத்த
35 ஏக்கர் நிலத்தையும் வஞ்சகமாகத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
தந்தையின் மரணத்திற்குப் பின் தாய்மாமன் சகாடேயின் வீட்டில் தம்பிகளுடன்
தங்கியிருந்த ரனோஜி, தன் தம்பிகளை அங்கிருந்து விரட்டிவிட்டு, தாய்மாமன்
சொத்துக்களையும் அபகரிக்க முயற்சி செய்தார்.
இதையறிந்த தம்பியர் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, கடுமையாக உழைத்து வாழ வேண்டிய நிலைக்கு வந்தனர்.
இறுதியில் இளையவரான கோவிந்த்ராவ் பூனாவில் காய்கறி கடை வைத்து பிழைப்பு
நடத்தினார். தேவையான வருவாய் அமைதியான வாழ்க்கை அவருக்கு அமைந்தது.
இந்நிலையில் பூனாவிற்கு அருகிலுள்ள காவடே கிராமத்தைச் சேர்ந்த ஜகாடே
பட்டேல் என்பவரின் மகள் சிம்னாபாய் என்ற பெண்ணைத் திருமணம் செய்து
கொண்டார்.
இவர்கள் இல்வாழ்வு நடத்தியதன் விளைவாய் இரு ஆண் பிள்ளைகளைப்
பெற்றெடுத்தனர். மூத்த மகன் பெயர் ராஜாராம். இளைய மகன் பெயர் ஜோதி.
இளையமகன் ஜோதிதான், ஜோதிராவ் பூலே என்ற வரலாற்று மாமனிதர். ஜோதிராவ்
1827இல் பிறந்தார்.
ஜோதிராவ் பிறந்த நேரத்தில், மராத்தியப் பேரரசு சீர்குலைந்து நலிந்து
நாசமாகி நின்றது. ஒழுக்கக் கேடு, விபசாரம், தீய நடத்தைகள் என சமுதாயம்
நாற்றமடித்தது. மராத்தியர்கள் தங்கள் சுதந்திர வாழ்வை இழந்து நின்றனர்.
மராத்திய தலைவர்கள் அனைவரும் ஒழுக்கக் கேட்டில் புழுத்துப் புரையோடி
நின்றனர். அவர்களுக்கு உலகப் போக்குகளும் புரியவில்லை. நாட்டின் நலனிலும்
அக்கறையில்லை. பதவிகள் வாரிசு வழியே வழங்கப்பட்டன. இதன் மூலம்
ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டனர்; ஒடுக்கப்பட்டனர்.
முதன்மையான பதவிகள் அனைத்திலும் ஆரியப் பார்ப்பனர்களே ஆதிக்கம்
செலுத்தினர். அதுவும் சித்பவன் பார்ப்பனர்கள் அமர்த்தப்பட்டனர். மற்ற
ஜாதியினர் எவ்வளவு திறமைசாலிகளாக இருப்பினும், அறிவாளிகளாக இருப்பினும்
அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர் அல்லது பதவியிலிருந்து அகற்றப்பட்டனர்.
இரண்டாம் பாஜிராவை கிருஷ்ணனின் அவதாரம் என்று ஆரியப் பார்ப்பனர்கள்
துதிபாடி, அளவிற்கு அதிகமாய் புகழ்ந்து, தங்களுக்குரிய வசதி வாய்ப்புகளை,
பதவிகளைப் பெற்றுக் கொண்டனர். சிவாஜியின் ஆட்சியில் இந்த அளவிற்கு ஆதிக்கம்
செலுத்த முடியாத ஆரியப் பார்ப்பனர்கள், பாஜிராவின் பலவீனத்தைப்
பயன்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை வாய்ப்புகளை, வசதிகளைப் பெருக்கிக்
கொண்டனர். மற்ற ஜாதியினர் செலுத்திய நிலவரியில் பாதி வரியையே பார்ப்பனர்கள்
செலுத்தினர். கொடுங் குற்றம் செய்த பார்ப்பனக் குற்றவாளிகள்,
தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டனர்.
தன்னைத் துதிபாடிய காரணத்திற்காக அரசன் பாஜிராவ் நாற்பதாயிரம்
பார்ப்பனக் குடும்பங்களைத் தன் சொந்தப் பொறுப்பில் தண்டச் செலவில்
பராமரித்து வந்தான். பஞ்ச காலங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உதவி
வழங்கப்பட்டது. மாறாக பஞ்ச காலங்களில் வரி செலுத்த இயலாத ஏழை விவசாயிகளின்,
தொழிலாளர்களின் குழந்தைகள்மீது கொதிக்கும் வாணலியில் உள்ள எண்ணெயை
ஊற்றினான் அம்ருத்ராவ் என்ற பாஜிராவின் அதிகாரி. ஏழை விவசாயிகளின் முதுகில்
பாறைகளைச் சுமத்தித் தண்டித்தனர். விவசாயிகளைக் குனிய வைத்துச் சவுக்கால்
அடித்தனர்.
தங்களின் ஆட்சிக்கும், குடும்பங்களுக்கும் அடிமை வேலை செய்யவும்,
உழைக்கவும், பயிரிடவும், துணி நெய்யவும், ஏவல் புரியவுமே அடித்தட்டு மக்கள்
பிறந்திருக்கிறார்கள் என்று ஆட்சியாளர்களும் ஆரியப் பார்ப்பனர்களும்
எண்ணினர்; கூறினர்.
கடனைத் திருப்பித் தர இயலாதவர்களின் பிள்ளைகளைப் பத்திரங்கள் மூலம்
அடிமைகளாக்கிக் கொண்டனர். இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டவர்களின்
தலைமுறையினரும் அடிமைப் படுத்தப்பட்டனர்.
பெண்களும் இவர்களின் கொடுமைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். காமவெறி
பிடித்த ஒழுக்கமற்ற இரண்டாம் பாஜிராவ் தங்கள் பகுதிக்கு வருவது தெரிந்தாலே,
தங்கள் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல, நிர்வாணமாக நின்று கடவுளை வணங்கும்
சக்தா (ளுயமவய) வழிபாடு பரவி நின்று மூடநம்பிக்கையின் முடைநாற்றம்
வீசியது.
1818இல் மராத்திய பேரரசு வீழ்ச்சியடைந்தபோதுதான் (இரண்டாம் பாஜிராவ்
வீழ்ச்சியினால்) மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அரசர்களைத்
துதிபாடி ஆதிக்கம் செலுத்திய ஆரியப் பார்ப்பனக் கூட்டம், சராசரி மனிதர்களாக
மாற்றப்பட்டதால் நிலைகுலைந்து நின்றனர். யார் மீதும் ஆதிக்கம் செலுத்த
இயலாமல் தவித்தனர். ஆரியப் பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கும் மரண தண்டனை
என்ற மாற்றம் வந்தது.
எங்குமே தங்கள் ஆட்சியை நிறுவ முடியாத ஆரியப் பார்ப்பனர்களுக்கு மராட்டியத்தில் மட்டும் அந்த வாய்ப்புக் கிடைத்தது.
சிவாஜியால் நிறுவப்பட்ட மராட்டிய ஆட்சி, பேஷ்வாக்களால் ஆரியப் பார்ப்பன
ஆட்சியாக மாற்றப்பட்டு பாஜிராவால் விரிவு படுத்தப்பட்டு, நூறாண்டு காலம்,
ஆரியப் பார்ப்பனர்கள் ஆண்டனர். முதல் நான்கு பார்ப்பன பேஷ்வாக்களின்
திறமையான ஆட்சியால் வலிமைபெற்று நின்ற ஆரிய ஆட்சி, கடைசி பேஷ்வாக்களின் 40
ஆண்டு கால ஆட்சியில் சீர்குலைந்து சிதைந்து போனது.
ஜோதிராவுக்கு ஒரு வயதானபோது அவரது அம்மா சின்னாபாய் இறந்துபோக, இவரது
தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்குப் பதில், பாலூட்டும் செவிலித்
தாயை (றயவ - ரேசளந) அமர்த்திக் கொண்டார். அச்செவிலித் தாயின் அன்புமிக்க
அணைப்பில் ஜோதிராவ் சிறப்பாக வளர்ந்தார்.
படிப்பு
ஜோதிராவுக்கு அய்ந்து வயதானபோது, நல்ல அழகும், நலமும், அறிவும் பெற்று
விளங்கினார். அவர் தந்தை தன் தலைமுறையில் யாரும் கல்வி கற்காததால்,
ஜோதிராவை நன்றாகக் கல்வி கற்கும்படி செய்தார். ஏழாவது வயதில் மராத்தியப்
பள்ளி ஒன்றில் அடிப்படைக் கல்வி கற்கச் சேர்க்கப்பட்டார்.
அக்காலத்தில் கல்வி, அடித்தட்டு மக்களின் எட்டாக் கனியாகவே இருந்தது.
மேல்ஜாதியினர் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளில் மட்டும், சில தனி
நபர்களால் பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டன. அப்பள்ளிகளில் சமஸ்கிருதம்,
இலக்கணம், தர்க்கவியல், தத்துவம், சட்டம் ஆகியவை பண்டிதர்களால் கற்றுத்
தரப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்கவும் இல்லை. அதைப் பற்றி
அவர்கள் அறியவும் இல்லை. ஆரியப் பார்ப்பனர்கள் நகரி எழுத்துக்களையும்
(சூயபயச ளுஉசயீவ) மற்றவர்கள் மோடி (ஆடின) மொழியையும் கற்றனர். வரலாறு
புவியியல் அக்காலத்தில் கற்றுத் தரப்படவில்லை. அனைத்துப் புத்தகங்களும்
கையெழுத்துப் படிகளாகவே இருந்தன. அவை அனைத்தும் கடவுள் பற்றிய புராணக்
கதைகளாகவே இருந்தன. கல்வி என்பதே கடவுளர்க் கதையைப் படிப்பது என்று
இருந்ததே தவிர, மனித வரலாற்றைப் படிப்பதாய் அமையவில்லை. பாடங்கள்
படிக்கும்போது மாணவர்கள் ஒன்று சேர உரத்தக் குரலில் படிப்பது
வழக்கத்திலிருந்தது. மூத்த மாணவர்கள் புதிய மாணவர்களுக்குக் கற்பிப்பது
வழக்கத்தில் இருந்தது. வகுப்புகள் பெரும்பாலும் ஆசிரியருடைய வீட்டில்
அல்லது கோயிலில் நடத்தப்பட்டன.
1836இல் கிராமப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1862இல் இத்திட்டம்
கைவிடப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்குமுன், கல்வியானது அரசின் கடமைகளுள்
ஒன்றாக இருக்கவில்லை. அது தனியார் விருப்பிலும் பொறுப்பிலும் இருந்தது.
மராட்டியத்தில் ஆரிய ஆதிக்கத்திலே கல்வி இருந்தது. வேதப் புத்தகங்களைப்
படிக்கவும், அவற்றை ஓதவும் அவர்களுக்கு மட்டுமே உரிமை அளிக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்டவர்கள் வேதங்களைப் படித்தால் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான் ஜோதிராவ் 1834இல் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
அக்காலத்தில் சுதேசிப் பள்ளிகள் வெகுதூரத்திற்கு ஒன்றுதான் இருந்தது.
பண்டோஜிகள் என்னும் ஆசிரியர்களால் இப்பள்ளிகள் நடத்தப்பட்டன. கொங்கண்
பகுதியில் செனாலி (ளுநயேஎளை) ஜாதியினர் ஆசிரியர்களாய் இருந்தனர். 1835
மார்ச் 7இல் வில்லியம் பெண்டிங் அரசு, இந்திய மக்களுக்கு அய்ரோப்பிய
இலக்கியங்களையும், அறிவியலையும் கற்றுத் தருவது அரசாங்கத்தின் முதன்மை
நோக்கமாக இருக்க வேண்டும் என்ற முடிவு செய்தது.
1840இல் அரசாங்கம் கல்வி வாரியம் ஒன்றை (க்ஷடியசன டிக நுனரஉயவடி) அமைத்தது.
ஜோதிராவ் கல்வி கற்ற காலத்தில் தீட்டுக் கழிப்பு வழக்கம் நடப்பிலிருந்தது.
தோலினால் புத்தகங்கள் கட்டப்பட்டு (க்ஷனேபே) இருந்ததால் அதைத் தொடுவது
தீட்டு என்று கருதினர். மை (ஐமே) யும் தீட்டாகக் கருதப்பட்டது. ஆந்தை என்ற
சொல்லை வீட்டில் சொல்லக்கூடாது என்று வற்புறுத்தப்பட்டது. வெளியில் கற்றால்
அதுவும் தீட்டாகக் கொள்ளப்பட்டது. மேலும், கீழ்ஜாதியினரைத் தீண்டுவதும்
தீட்டாகக் கொள்ளப்பட்டது.
பள்ளியிலிருந்து குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும், இத்தீட்டுகளை யெல்லாம்
கழிக்கும் வகையில், புத்தகப் பையை ஒரு மூலையில் வைத்துவிட்டுக்
குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குள் வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.
ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வது தீட்டு என்றும், ஆரியப் பார்ப்பனத்
தன்மையை அது கெடுத்துவிடும் என்றும் அவர்கள் கருதினர். ஆனால், இன்றைக்கு
அச்சாத்திரத்திற்கு விரோதமாக, ஆங்கிலத்தை உச்சி மேல் தூக்கிப் பிடித்து,
ஒவ்வொருவரும் கற்று, கடல் தாண்டக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் கடந்து,
உலகமெங்கும் ஓடி உல்லாச வாழ்வு வாழ்கின்றனர். ஆலயங்களில் மட்டும் ஆசாரம்,
சாஸ்திரம் என்று அடாவடித்தனம் செய்யும் இந்த ஆரியப் பார்ப்பனர்கள், சுயநலம்
என்று வந்ததும் தூக்கியெறிகிறார்கள் சாத்திரத்தை!
அறிவுக்கூர்மையும், ஆர்வமும் மிக்க ஜோதிராவ் படிப்பில் முன்னணி
மாணவனாகத் திகழ்ந்தார். இதைப் பொறுக்காத ஆரியப் பார்ப்பனர்கள், ஜோதிராவின்
தந்தையின் சிந்தையைக் கலைத்து, அவர் கல்விக்குத் தடை போட முயன்றனர். இந்தக்
கல்வியால் உன் மகனுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? கற்பதன் மூலம்
விவசாய வேலைக்குத் தகுதியற்றவனாகி விடுகிறான். மேலும், கல்வி கற்பதனால்
சிந்தனை வளர்ந்து மதவிரோதியாகிவிடுகிறான். அதன் மூலம் கலகக்காரனாகிறான்
என்று ஜோதிராவின் கல்வியைத் தடுக்கும் வகையில் ஆலோசனை கூறினர்.
ஜோதிராவ் பள்ளிக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டு, வயல்வேலைக்கு
அனுப்பப்பட்டார். ஜோதிராவிற்கு 13 வயது ஆனபோது, பூனா அருகிலுள்ள காவடி என்ற
ஊரைச் சேர்ந்த 8 வயது பெண்ணை அவருக்கு மணம் முடித்தனர். குடும்ப வாழ்வைப்
பற்றி எதுவும் அறியாத நிலையில் அவர்களின் திருமணம் நடந்தது. விவசாய
வேலைகளைச் செய்து கொண்டு, புத்தகங்களைத் தொடர்ந்து படித்தார். அவரது
ஆர்வத்தைக் கண்ட தந்தை மீண்டும் அவரைப் பள்ளியில் சேர்த்தார்.
தாமஸ் பெயின் எழுதிய மனிதனின் உரிமைகள்! என்ற நூல் ஜோதிராவின் சிந்தனையை வெகுவாகக் கிளறியது.
அறியாமையில் உழன்று கிடந்த தங்களின் குடிமக்களை முன்னேற்றவும்,
மூடநம்பிக்கையில், மதப்பிடியில் மாட்டிக் கொண்டு அடிமைகளாய், ஊமைகளாய்,
கூனிக்குறுகி நின்ற அவர்களை எழுச்சி கொள்ளச் செய்யவும், இவர் முடிவு
செய்தார்.
கல்வியறிவு பெறுவது போலவே, உடற்பயிற்சியும் பெற்று, அறிவும் ஆற்றலும்
பெற முனைந்தார். சண்டைப் பயிற்சியில் புகழ் பெற்று விளங்கிய, வல்லுநராகத்
திகழ்ந்த மங் என்ற தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த, லகுஜிபுவா என்பவரிடம்,
இவர் சண்டைப் பயிற்சி பெற்றார். இவரிடம் பயிற்சி பெற்ற வாசுதேவ் பல்வந்த்
என்ற இளைஞர்தான் 1879இல் மராட்டியத்தில் ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் புரட்சி
செய்தவர். ஜோதிராவ் இதில் தேர்ச்சியும், சிறப்புத் தகுதியும் பெற்றார்.
இவரைப் பற்றிய பெருமை அந்நகரம் முழுக்கப் பரவியது. பயிற்சிக்கேற்ற தோற்றப்
பொலிவும் அவரிடம் மிகுந்து காணப்பட்டது.
1847-இல் மிஷினரி பள்ளியில் சேர்க்கப்பட்ட ஜோதிராவ் தன் படிப்பு முடிகின்ற வரை ஆங்கிலப் பள்ளியிலே படித்து வந்தார்.
1847-இல் ஜோதிராவ் தம் படிப்பை முடித்தார். அமெரிக்க விடுதலைப்
போராட்டம் இவர் உள்ளத்தில் பல உணர்வலைகளை, உந்துதலை, சிந்தனைக்
கிளர்ச்சியை, போராட்ட உணர்வை உருவாக்கியது.
மனித சமத்துவம், மனித உரிமைகள், மனிதர் விடுதலை, ஆதிக்க ஒழிப்பு, ஜாதி
ஒழிப்பு, ஏற்றத் தாழ்வற்ற உயரிய நிலை போன்ற எண்ணங்கள், ஒவ்வொரு நாளும் இவர்
உள்ளத்தில் உயர்ந்து ஓங்கி வந்தன.
ஆங்கில இராணுவ வீரர்களின் அகம்பாவம், திமிர்த்தனம், இவரை
ஆத்திரப்படுத்தியது. ஒருமுறை அவர்களுடன் சண்டையிட்டு, இரண்டு இராணுவ
வீரர்களை நன்றாக உதைத்துப் புரட்டியெடுத்தார். இந்தியாவிலிருந்து
ஆங்கிலேயர்களை விரட்ட வேண்டும் என்று அந்த நேரத்தில் உறுதி கொண்டார்.
சமுதாயத் தொண்டு
தனக்கு முன் ஆங்கில ஆட்சியை விரட்ட முற்பட்டவர்கள் தனித் தனியே போராடி
அழிந்துபோன வரலாறுகளை நினைத்துப் பார்த்தார். சிமன்ஜி யாதவ்,
இராமச்சந்திரகோர் இருவரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியபோது
போராட்டம் அடக்கப்பட்டு, இராமச்சந்திரகோர் தூக்கிலிடப்பட்டார். 1848-ஆம்
ஆண்டு மே 2ஆம் நாள் ரங்கோஜிபங்கிரி தூக்கிலிடப்பட்டார். நாட்டுப்பற்றும்,
தியாக உணர்வும் கொண்ட இவர்கள் தனித் தனியே போராடியதால், போராட்டம்
தோற்றதோடு, அவர்களும் அழிக்கப்பட்டனர். எனவே, ஆங்கில ஆட்சியை அகற்ற,
ஆங்கிலேயர்களை அகற்ற தம் நண்பர்களுடன் இணைந்து திட்டமிட்டார்.
இவர் ஆரியப் பார்ப்பன நண்பர்களையும் அதிகம் பெற்றிருந்தார். ஒரு ஆரியப்
பார்ப்பன நண்பரின் திருமணத்திற்குச் சென்றிருந்தார். மணமகள் வீட்டை நோக்கி
மணமகன் ஊர்வலம் சென்று கொண்டு இருந்தது. ஊர்வலத்தில் பார்ப்பன ஆண்களும்,
பெண்களும், குழந்தைகளும் மட்டுமே கலந்து கொண்டனர். மற்ற ஜாதியினர் யாரும்
இல்லாதபோது, இவர் மட்டுமே வேறு ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தார்.
உயர்நிலையில் வாழ்ந்த சில வைதீகப் பார்ப்பனர்கள் இவரை அடையாளம் கண்டனர்.
இந்த மண்ணுலகின் கடவுளாக மதிக்கப்படும் ஆரியப் பார்ப்பனர்களான தங்களுடன்
சமமாக, சூத்திர ஜாதியைச் சேர்ந்த மாலி இளைஞன் நடந்து வருவதைக் கண்டு,
ஆத்திரமும், ஆவேசமும் கொண்டனர்.
ஏய், சூத்திரப்பயலே, உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் எங்களுடன் சமமாக
வருவாய்? ஜாதி மரபுகளை நீ மீறிவிட்டு, ஆணவமாய் வருகிறாய்! ஆங்கில
ஆட்சியினால் உனக்கெல்லாம் அகம்பாவம் கூடிவிட்டது! தூரத்தில் சென்று
பின்னால் வா அல்லது ஓடிவிடு! என்று கோபத்துடன் பாய்ந்தனர். ஜோதிராவ்
அதிர்ச்சி அடைந்து திக்குமுக்காடி திகைத்து நின்றார்.
பின் உடனடியாகச் சமாளித்துக் கொண்டு, தான் பெரிதும்
அவமானப்படுத்தப்பட்டுவிட்டதாக ஆத்திரப்பட்டார். அவருள்ளே ஆயிரமாயிரம் ஆவேச
உணர்வுகள் எழுந்து அலைமோதின. உச்சி முதல் உள்ளங்கால் வரை உணர்வுப் பிழம்பான
ஜோதிராவ், அந்த உணர்வு சிறிதும் குறையாமலே, வீட்டிற்கு வந்தார்.
தமக்கு நேர்ந்த அவமானத்தைத் தம் தந்தையிடம் கூறினார். உணர்ச்சி வசப்பட்டு அழுதார். ஆவேசமாகப் புடைத்து நின்றார்.
ஆனால், சாத்திரங்களிலும், மரபு வழி வழக்கங்களிலும் மதிப்பு கொண்ட இவரது
தந்தை, நீ செய்ததுதான் தவறு! உன்னை அடிக்காமல் அனுப்பி வைத்ததே அவர்கள்
காட்டிய கருணை! நீ செய்த தவறுகளைச் செய்த மற்றவர்களுக்கு கடுந்தண்டனைகளை
இங்கு வழங்கியிருக்கிறார்கள். நீ தப்பித்து வந்தது புண்ணியம் ஆகும் என்று
மகனை அனுபவத்தைச் சொல்லி, அறிவுரை சொல்லி அமைதிப்படுத்தினார்.
ஆரியப் பார்ப்பனர்கள் ஆட்சி செய்த மகாராட்டிரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள்
அடைந்த இன்னல்களுக்கும், அனுபவித்த கொடுமைகளுக்கும் அளவே இல்லை. வீதிகளில்
நடக்கும் தாழ்த்தப் பட்டவர்கள் தங்கள் இடுப்பில் இலைகளைக் கட்டிக் கொள்ள
வேண்டும். கழுத்தில் ஒரு சட்டியைத் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும்.
அச்சட்டியில்தான் அவர்கள் தங்கள் எச்சிலைத் துப்பிக் கொள்ள வேண்டும்,
தரையில் துப்பக்கூடாது.
அவ்வாறு வீதியில் செல்லக்கூட காலையிலும் மாலையிலும் அனுமதியில்லை.
காரணம் அவ்வாறு சென்றால் அவர்கள் நிழல் உயர்ஜாதிக்காரர்கள்மீது பட்டுவிடும்
என்பதால். தாழ்த்தப்பட்டவன் நிழல் தன்மீது பட்டாலே தாம் தீட்டாகி விடுவோம்
என்று எண்ணும் அளவிற்கு ஆரியப் பார்ப்பனர்களின் ஜாதி வெறி, ஜாதி ஆதிக்கம்
தலைதூக்கி நின்றது.
அன்றிரவு ஜோதிராவ் உறங்காமல் வேதனைப்பட்டார். மனிதர்க்குள் இத்தனை
இழிவா? இதைப் போக்க என்ன வழி? என்பன போன்ற சிந்தனைகளுடனே அன்றைய இரவு
கழிந்தது. தமக்கு அவமானம் நேர்ந்தது என்று அவர் பெரிதும் கவலை கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட ஒட்டுமொத்த சமூக இழிவு நீடிக்கலாமா? நீடிக்க விடலாமா?
என்பதைப் பற்றியே அவர் அதிகம் கவலை கொண்டார்.
இந்தச் சமூக அவலங்களுக்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்றும்,
ஜாதி முறையும், அடிமைத்தனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், ஆரியப்
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழித்து, சாத்திர அநீதிகளை முற்றாக ஒழித்து,
மூட நம்பிக்கைகளை முழுவதும் அகற்றி, பகுத்தறிவும், தன் மதிப்பும் கொண்ட,
சமத்துவ, சம உரிமைச் சமுதாயத்தைச் சமைக்க வேண்டும் என்றும் உறுதி கொண்டார்.
இலட்சியங்களே மனிதனை உருவாக்குகின்றது என்ற உண்மைக்கு ஏற்ப, இவரது இந்த
இலட்சியங்கள் இவரை ஓர் உணர்வு கொண்ட ஆற்றல் கொண்ட, ஆவேசங் கொண்ட, ஆளுமை
கொண்ட ஒரு போர்த் தளபதியாக உருப்பெறச் செய்தன.
அப்போது அவருள் எழுந்த இந்த உணர்வுகளும் உறுதிப்பாடுகளும், உந்துதலுமே
பிற்காலத்தில் இவர் செய்த சாதனைகளுக்கெல்லாம் அடித்தளமாய் அமைந்தன.
அநீதிக்கு எதிரான, ஆதிக்கத்திற்கு எதிரான, சாஸ்திர சம்பிரதாயக்
கொடுமைகளுக்கு எதிரான, ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரானத் திட்டங்களை
வகுத்துக்கொண்டு, தனக்கென ஒரு பாதையையும் வகுத்துப் புரட்சிப் போரில்
இறங்கினார் ஜோதிராவ்.
அரசில் அடிமைத்தனத்தைவிட, சமூக அடிமைத்தனம் மிக மிக மோசமானது
கொடுமையானது என்பதை நன்கு உணர்ந்த ஜோதிராவ், நான் நன்கு படித்தவன்! நல்லது
கெட்டது அறிந்தவன். ஆரியப் பார்ப்பனர்களின் மதமே என் மதம். பின் எதை வைத்து
அவர்கள் என்னைத் தாழ்ந்தவன் என்று கூறுகிறார்கள்? அவர்கள் மதம் அவர்களை
இப்படிச் செயல்பட வைக்கிறதா? அல்லது மதத் தலைமை தங்களிடம் இருக்கிறது
என்பதால் இப்படிச் செய்கிறார்களா? ஜாதி அமைப்பின் தலைவர்கள் என்ற ஆணவத்தில்
இப்படி நடந்து கொள்கிறார்களா? மதம் என்பது மனிதனுக்கும் கடவுளுக்கும்
உறவுப் பாலம் என்றால், மதத்தின் பெயரால் இத்தனைக் கொடுமைகள் எங்கிருந்து
வந்தன? சமூகக் கூட்டு வாழ்க்கைக்கு எதிராக நிற்கும் ஜாதீய முறை
தகர்த்தெறியப்பட வேண்டாமா? இவை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்றால்,
பிறப்பு வழி ஜாதி (ழநசநனவைல) என்ற சமூக அவலம் ஒழிக்கப்படுவது ஒன்றே வழி!
என்று தனக்குத்தானே கேள்விகளையும் எழுப்பி, விடையும் கண்டார்.
ஆனால், ஜாதி அமைப்பு முறை உறுதியானது, உடைபடாதது, நீடித்து வருவது.
காரணம், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியறிவு அற்றவர்கள்.
கல்வியறிவு இல்லாததால், சாத்திரங்களை ஏற்று, தங்கள் இழிவு தங்கள் பிறப்பால்
வந்தது, கடவுள் தந்தது. அதை மாற்றவோ மறுக்கவோ கூடாது என்று அவர்கள்
எண்ணுகின்றனர். எனவே, அவர்களுக்கு முதலில் விழிப்பைக் கொடுக்க வேண்டும்.
அதற்கு உடனடியாகக் கல்வியைக் கொடுக்க வேண்டும்.
கல்வியறிவைக் கொடுப்பதன் மூலம், அவர்களின் அறியாமையை அகற்றி, விழிப்பு
உண்டாக்குவதன் மூலம் வேகத்தை உருவாக்கி, அதன் மூலம் தங்கள் உரிமைக்கும்,
உயர்விற்கும், மதிப்பிற்கும், மகிழ்விற்கும், மானத்திற்கும்,
வாய்ப்பிற்கும் அவர்களைப் போராடச் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டார்.
தனக்கு ஏற்பட்ட அவமானம் ஒரு வகையில் நன்மைக்கே! அந்த அவமதிப்பு
ஏற்பட்டதால்தான், இத்தனை எழுச்சியும், வேகமும் என்னுள் எழுந்தன! என்று
தனக்குத்தானே தெம்பேற்றிக் கொண்டு, தகுந்த போராட்டத்திற்குத் தயாரானார்.
1848-ஆம் ஆண்டு உலகமெங்கும் ஆதிக்கத்திற்கு எதிரான ஆவேசங் கொண்டு
போராடிய ஆண்டாய் அமைந்தது. இந்த ஆண்டில்தான் கார்ல்மார்க்ஸ் முதலாளித்துவ
கொடுமைகளுக்கு, ஆதிக்கத்திற்கு எதிராய் பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டார்.
அமெரிக்காவில் பெண்கள் விடுதலைக்காக ஓர் எழுச்சி மிகு இயக்கம்
தொடங்கப்பட்டது. ஆம். 1848இல் நியூயார்க்கில் செனிகா அருவிக்கருகில்,
வெஸ்லியன் மாதா கோயிலில் முதல் பெண்ணுரிமை மாநாடு நடைபெற்றது. அமெரிக்கப்
பெண்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். (ஆனால் இந்தியாவில் அப்போது,
ஆமையாய், ஊமையாய், அடிமையாய் பெண்கள் மரபு வழி மடமையில் மயங்கிக்
கிடந்தனர்). அந்த ஆண்டில்தான் ஆங்கிலேயர்கள் மகாராஷ்டிராவில் சத்ராவின்
ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வந்தனர். ஆங்கில ஆட்சி ஏற்பட்டது. பழைய
முறைகள், ஆதிக்கங்கள், செயல்முறைகள், சட்ட திட்டங்கள் மெல்ல மெல்ல சரியத்
தொடங்கின. கற்ற, சீர்மை கொண்ட, விடுதலை உணர்வு பெற்ற தலைமைகள் உருவாகின.
அப்படிப்பட்ட தலைவர்களுள் பாலசாஸ்திரி ஜம்பேகர் முதன்மையானவர். இராஜபூர்
வட்டத்தைச் சேர்ந்த பூம்பர்லி என்ற இடத்தில் ஒரு கர்கடா பார்ப்பன
குடும்பத்தில் பிறந்தவர். அறிவுக்கூர்மையும், ஆற்றலும், சமூக நலனில்
அக்கறையும் கொண்டவர். இன்னொருவர் பாயுமகாஜன். இவர் படிப்பில் மிகவும்
வல்லவர் 1841-இல் பிரபாகர் என்ற மராத்திய வார இதழைத் தொடங்கியவர்.
பாலசாஸ்திரி, பாயுமகாஜன் இருவரும் இந்துக்களின் பிற்போக்குத்
தனங்களையும், அறியாமையையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். சமூகச்
சீர்த்திருத்தத்தில் நாட்டம் கொண்டு உழைப்பவர்கள் ஒன்று சேர அழைப்பு
விடுத்தனர். விதவைத் திருமணத்தைத் தீவிரமாக ஆதரித்தனர்.
தாதாபா பாண்டுரங்தர் காட்கர் (வைசியர்) (1814-1882) என்பவர் இன்னொரு
முக்கியமான தலைவர். ஏழ்மையில் பிறந்தாலும் அறிவுக்கூர்மை உடையவர். சமுதாயத்
தடைகளையும், ஜாதி அமைப்பையும் தகர்த்தெறிய பரமஹன்ச சபை என்ற பெயரில்
இரகசிய சபை ஒன்றை உருவாக்கினார்.
அதேபோல், நானா சங்கர் சேத்தின் (1803-1865) என்பவர் புரட்சிகர
சிந்தனைகளைக் கூறி, சமுதாய மாற்றத்திற்கு, சமத்துவத்திற்கு வித்திட்டார்.
இதே காலக்கட்டத்தில் மகாராஷ்டிரத்தின் பழைய தலைநகரான புனாவைச் சேர்ந்த
கோபால் ஹரி தேஷ்முக் என்ற இளைஞர் முற்போக்குச் சிந்தனைகளை முழங்கினார்.
இவர் சிர்தர் (ளுனையச) குடும்பத்தைச் சேர்ந்தவர். லோகித்வாடி என்ற பெயரால்
இவர் பெரிதும் அறியப்பட்டார். லோகித்வாடி என்றால் மக்கள் நலனில் அக்கறை
கொண்டவர் என்று பொருள். இவர் 1848இல் பிரபாகர் இதழில் புரட்சியும்,
எழுச்சியும் மிக்கக் கட்டுரைகளை எழுதினார். பார்ப்பனர்களின் பழைமைப்
பிடிப்புகளைத் தகர்த்தார். அவர்களின் மனித விரோதச் செயல்களைக் கண்டித்தார்.
மேலை நாடுகளில் வளர்ந்து வரும் முற்போக்குச் சிந்தனைகளைப் பின்பற்ற
வேண்டும் என்று வற்புறுத்தினார்.
இப்படிப்பட்ட தலைவர்கள் அனைவரும் எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள்
என்பதால், தானும் இச்சமுதாயத்திற்காக நிறைய செய்ய முடியும் என்று ஜோதிராவ்
நம்பினார். இவர்களின் வாழ்க்கை வரலாறுகள், செயல்பாடுகள், ஜோதிராவிற்கு
ஊக்கத்தையும், உந்துதலையும் அளித்தன.
இப்படிப்பட்ட சமூக நோக்கும், சமத்துவ இலக்கும், ஜாதி ஒழிப்பு,
மூடநம்பிக்கை ஒழிப்பு இவற்றில் முனைப்பும் கொண்ட, தியாக மனப்பான்மையுமுடைய
இளைஞர்களை இவர் ஒன்று திரட்டினார். இதுபோன்ற எண்ணம் உடைய இளைஞர்களும்,
ஜோதிராவின் செயல்பாடுகளால் கவரப்பட்டு, அவருடன் இணைந்து செயல்பட ஆர்வம்
காட்டினர்.
எனவே, மகாராஷ்டிரத்தில் சமூகச் சீர்திருத்தத்திற்கான முரசொலிக்கத்
தொடங்கினார் ஜோதிராவ். ஜோதிராவை அவரது நண்பர்களும், மக்களும்
மரியாதையோடும், பாசத்தோடும் ஜோதிபா என்றே அழைத்தனர்.
பண்கல்வியும் பெண்கள் பள்ளியும்
பண்டைய அடிமைத்தளையிலிருந்தும், அறியாமை இருட்டிலிருந்தும் பெண்களை
மீட்டெடுக்க வேண்டும் என்று இவர் உறுதி கொண்டார். சூத்திரர்கள், பெண்கள்
இருதரப்பாரும் கல்வி அறவே மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு
ஒடுக்கப்பட்டிருந்தமை ஜோதிபா பூலேவை வெகுவாக வாட்டியது. எப்படியேனும்
இவர்களை மீட்டு, எழுச்சியூட்டி, விழிப்பூட்டி, சமவாய்ப்பும் சம உரிமையும்
பெற்றவர்களாக ஆக்க வேண்டும் என்று அரும்பாடுபட்டார்.
அறியாமை என்பது இருள்; கல்வி என்பது ஒளி. எனவே, கல்வி ஒளியைக் கொடுத்தே அறியாமை இருளை அகற்ற முடியும் என்று உறுதியாய் நம்பினார்.
கல்வி கொடுத்துவிட்டால் ஏன், எதற்கு? என்ற ஆய்வு தானே எழும். அதன் மூலம்
அவர்களே விழிப்பும், வேகமும் பெறுவர் என்ற உண்மையான அடிப்படையை ஜோதிபா
பூலே உணர்ந்து கொண்டார்.
பெண்களுக்குக் கொடுக்கப்படும் கல்வியும் விழிப்பும் அடுத்து வரும்
தலைமுறைக்குப் பெரிதும் பயன்படும். அதன் மூலம் சமுதாய எழுச்சியை,
மேம்பாட்டை, சமத்துவத்தை எளிதில் எட்ட முடியும் என்றும் நம்பினார். எனவே,
பெண்களுக்கென்று ஒரு பள்ளியைத் திறக்க முடிவு செய்து, அகமத் நகரில் இருந்த
நண்பர் சதாசிவ கேவந்தேயைச் சந்தித்து, முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்க
விரும்புவது பற்றித் தெரிவித்தார். மகர், மங், சேம்பர் போன்ற தாழ்த்தப்பட்ட
ஜாதியினரே நம் மக்கள் தொகையில் அதிகம் உள்ளனர். இவர்கள் அறிமையாமையில்
உழலுகின்றனர். கல்வி அளிப்பதன் மூலமே இவர்கள் நிலையை உயர்த்த முடியும்
என்று கூறினார்.
மேலும், இரண்டாது வயதிலும் மூன்றாவது வயதிலும் உள்ள குழந்தைகளுக்கு,
அறிவு ஊட்டி வளர்க்க வேண்டியவர்கள் தாய்மார்களேயாவர். எனவே, பெண்களுக்குக்
கல்வியளிப்பதன் மூலமே பிள்ளைகளின் அறிவை, திறமையை வளர்க்க முடியும்.
ஆகையால், ஆண் கல்வியைவிட பெண்கல்வியே கட்டாயமானது என்று ஜோதிபா பூலே
எடுத்துக் கூறினார். எனவே இருவரும் சேர்ந்து முதல் முயற்சியாக, அகமது
நகரில் இதே நோக்கத்துடன் திருமதி பெரர் (குநசசநச) என்பவர் நடத்தி வரும்
அமெரிக்கன் மிஷினரி பள்ளிகளைப் பார்வையிட்டனர்.
அப்போது, இவர்கள் இருவரிடமும், இந்திய நாட்டுப் பெண்கள்
புறக்கணிக்கப்படுவது பற்றிய தமது வருத்தத்தை திருமதி பெரர்
வெளிப்படுத்தினார். இந்திய நாட்டின் முன்னேற்றத்தில் அயல்நாட்டவர்
கொண்டுள்ள ஆர்வத்தைக் கண்டு இவர்கள் இருவரும் நெகிழ்ந்து போயினர். நம்
நாட்டவர்கள் இதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதோடு, பெண்களை
அடிமைப்படுத்துவதிலே ஆர்வமாக இருப்பதை எண்ணி வெட்கமும் வேதனையும்
அடைந்தனர்.
இந்தப் பெண்மணியின் தூண்டுதல் பூலேயின் உள்ளத்தில் பெரும் உகந்துதலை
ஏற்படுத்தியது. பூனா திரும்பியவுடன் முதல் வேலையாக தாழ்த்தப்பட்ட
பெண்களுக்கான பள்ளியைத் திறந்தார். அதில் பெண்களும் விருப்பப்படும்
சிறுவர்களும் (ஆண்களும்) சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இப்பள்ளியில் எளிய கணக்குகள், அடிப்படை இலக்கணங்கள் கற்றுத் தரப்பட்டன.
முதன் முதலில் புத்வர் பேத் என்ற இடத்தில் ஒரு தனியார் வீட்டில்தான்
இப்பள்ளியை பூலே நடத்தி வந்தார். இவரது நண்பர்களான, கோவிந்த் சேத்தும்,
சதாசிவபலால் கோவந்தேயும் பள்ளியை நடத்துவதில் இவருக்குப் பெருந்துணையாய்
இருந்தனர்.
ஆரியப் பார்ப்பனர் அல்லாத ஒருவரால், அதிலும் குறிப்பாக ஒரு சூத்திரரால்,
சூத்திரப் பெண்களுக்கு, அதுவும் ஆதி சூத்திரப் பெண்களுக்கு ஒரு பள்ளி
திறப்பதும், அதை நடத்துவதும் அக்காலக் கட்டத்தில் நினைத்துக்கூடப் பார்க்க
முடியாத ஒன்றாகும். அதைச் செய்து காட்டினார் பூலே.
வைதிகப் பார்ப்பனக் கோட்டையில் ஓர் ஓட்டை விழுந்ததாக எண்ணி ஒதுங்கி
எதிர்ப்புக் குரல் எழுப்பினர் ஆதிக்கப் பார்ப்பனர்கள். இது சாத்திரத்திற்கு
ஒவ்வாதது; ஆசாரக் கேடானது; சம்பிரதாயத்திற்கு எதிரானது என்று புலம்பினர்.
சாஸ்திர விதிகளின்படி கல்வி கற்கும் உரிமை சூத்திரர்களுக்கு கிடையாது.
கடவுளுக்கு இது அடுக்காது! மதத்திற்கும் அதன் தர்மத்திற்கும் இது முரணானது.
பெண்களுக்குக் கல்வி தருவது ஒரு பாவச் செயல் என்று ஆத்திரத்தைக்
கொட்டினர்.
ஆனால், பூலே எவ்விதத்திலும் கலங்கவில்லை. எதிர்ப்பு எழ எழ எஃகுபோல
நின்றார். பெண்களுக்குக் கல்வி அளிப்பதில் மிகவும் தீவிரம் காட்டினார்.
காரணம், பெண் பலவீனமானவள்; நம்ப முடியாதவள்; மயக்கக்காரி; முட்டாள்;
காமவெறி கொண்டவள்; கல்வி கற்று விழிப்பு வந்தால் யாருடனாவது ஓடிவிடுவாள்;
எளிதில் தவறு செய்யக்கூடியவள்; பெண் கல்வி கற்றால் அவள் கணவன் விரைவில்,
உரிய காலத்திற்கு முன்பே இறந்துவிடுவான்; பெரியவர்கள் முன் பெண்
அமர்ந்திருப்பது குற்றமானது. பெண் கல்வி கற்றால் ஒழுக்கம் கெட்டுப் போவாள்.
சிறு வயதிலே அவளுக்கு மணம் முடித்து மாமனார் வீட்டில் தள்ளிவிட வேண்டும்.
மாமனார் வீட்டில் மற்றக் குழந்தைகளைப் பராமரித்து அடிமையாய் வாழ
வேண்டும்... என்று பெண்ணை இழித்துப் பழித்து, இம்சித்த ஆரிய ஆதிக்கக்
கூட்டத்திற்கு, பெண் கல்வி பெறுகிறாள் என்றவுடன் பொறுத்துக் கொள்ள,
ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
ஆனால், ஜோதிபா பூலே துணிந்து நின்றார். மனுஸ்மிருதிக்குச் சவால்விட்டார்.
என்னைப் பின்பற்றுங்கள்
இனியாவது தடுமாறாமல் இருங்கள்
மனுவின் கட்டளைகள் ஒழிக!
கல்வி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்
ஜோதி நம்பிக்கையோடு உங்களுக்குச் சொல்கிறேன்!
என்று உணர்வு பொங்க முழங்கினார்.
வைதீகக் கூட்டம் இதற்கு எதிராக,
வைதீகமே நமது மதம்!
நமது மதம் ஆபத்திலுள்ளது
ஜோதி ஒரு சமூக எதிரி!
அவர் ஒரு மனிதரேயல்லர்
அவர் பொருட்படுத்த வேண்டிய முக்கிய மனிதருமல்ல!
என்று குரல் கொடுத்தது.
ஜோதிபா பூலே செய்த இச்செயலை ஒரு நூற்றாண்டுக்கு முன் செய்திருந்தால்,
யானையின் காலடியில் வைத்து நசுக்கப்பட்டிருப்பார். ஆம், அப்போது தண்டனை
இதுதான். எனவே, அவ்வாறு தண்டனை கொடுத்துப் பழக்கப்பட்ட ஆரிய பார்ப்பனர்கள்,
பூலேவை கடுமையாக எச்சரித்தனர். பூனா நகரத்திற்கே அவமானம் வந்துவிட்டதாக
ஆத்திரப்பட்டனர்.
ஆனால், ஜோதிபாபூலே இதற்கெல்லாம் அஞ்சாது, மேலும் தன் பணியில்
தீவிரங்காட்டினார். எரியும் தீயில் எண்ணெய் விட்டாற்போல், பூலேயின்
செயல்பாடுகளில் வேகம் அதிகரித்தது. அடிக்க அடிக்க எழும் பந்துபோல பூலே
எழும்பினார்.
பள்ளி வேலைகளுக்கு தன்னுடன் துணைநிற்க யாரும் கிடைக்காமையால், தம்முடைய
மனைவியையே துணைக்கு வைத்துக் கொண்டார். தன் மனைவிக்கு வீட்டிலே நன்றாகக்
கல்வி கொடுத்தார். பூலேவின் மனைவி ஆசிரியப் பணியாற்றியதைக் கண்ட ஆரியப்
பார்ப்பனர்கள், ஒரு பெண் சமூகக் கட்டுப்பாட்டை மீறி ஆசிரியப் பணி செய்வதா?
என்று ஆத்திரப்பட்டனர்.
பூலேயின் மனைவி சாவித்திரியைப் பார்த்த அளவிலே கோபங் கொண்டனர். அவர்
பள்ளிக்குச் செல்லும்போது, அவர்மீது, சேற்றையும் கற்களையும் வீசினர்.
ஆனால், தன்னைத் தாக்கிய அந்தப் பார்ப்பன காலிகளைப் பார்த்து, நிதானமாகப் பேசினார் சாவித்திரி.
கடவுள் உங்களை மன்னிக்கட்டும்! நான் என் கடமையைத் தான் செய்கிறேன்.
கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்! என்று பெருந்தன்மையோடு நடந்து கொண்டு
ஆரியப் பார்ப்பனர்கள் வெட்கித் தலைகுனியும்படிச் செய்தார்.
ஏமாற்றம் அடைந்த பார்ப்பனர்கள், உடனே பூலேயின் தந்தையைச் சந்தித்து, உன்
மகன் மதத்தையும் சமூகத்தையும் அவமதித்து வருகிறான். வெட்கங்கெட்ட அவன்
மனைவியும், அப்படித்தான் நடந்து கொள்கிறாள். கடவுளுக்கு நீ வேதனை
தருகிறாய். இதை நிறுத்து அல்லது உன் மகனை வீட்டைவிட்டுத் துரத்திவிடு.
கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் நாங்கள் உனக்கு ஆணையிடுகிறோம்
என்று நெருக்கடித் தந்தனர்.
உயர்ஜாதியினர் சேர்ந்து சென்று கொடுத்த நெருக்கடியில் நிலைகுலைந்த
புலேயின் தந்தையார், அவர்களின் கட்டளையை விருப்பமின்றி வேறு வழியின்றி
ஏற்றார். தன் ஆசை மகனைப் பார்த்து, பள்ளியை மூடு அல்லது வீட்டைவிட்டு ஓடு!
என்று கூறினார்.
தன் தந்தையிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லி தன் செயலில் எத்தவறும் இல்லை.
நான் சமூகத் தொண்டுதான் செய்கிறேன் என்று கூறினார். ஆனால் தந்தையார் இவரின்
விளக்கங்களைக் கேட்கவில்லை.
நான் உயிரிழப்பதாக இருந்தாலும் சரி, என் இலட்சியத்தைக் கைவிடமாட்டேன் என்று இறுதியாக உறுதிபடக் கூறினார் பூலே.
அதிர்ச்சியடைந்த பூலேயின் தந்தை, அப்படியானால் நீயும் உன் மனைவியும்
வீட்டைவிட்டு வெளியேறுங்கள்! அவளை என் வீட்டில் வைத்திருக்க முடியாது!
என்றார்.
தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு நான் கல்வி கற்றுத் தந்ததன் காரணமாக எனது
சொந்த ஜாதியினரே என்னை வெறுத்தனர். என் தந்தை என்னை வீட்டைவிட்டே வெளியேறச்
சொல்லி விட்டார். என் வழியை நானே தீர்மானித்துக் கொள்ள எனக்கு முழு உரிமை
அளித்துவிட்டார். பொருளாதார நெருக்கடியால் பள்ளி மூடப்பட்டது. எனவே, எனது
திட்டங்களைச் செயல்படுத்த பொருளீட்ட முனைந்தேன்... என்று அடுத்தகட்ட
நடவடிக்கையை தொடருமுன் தன் உள்ளக் கொதிப்பைக் கொட்டினார் பூலே. கணவனின்
தூய்மையான, நேர்மையான மனிதநேயப் பணிக்கு எந்த இன்னலையும் ஏற்று என்
ஒத்துழைப்பைத் தர என்றைக்கும் தயாராக உள்ளேன் என்று அவரது மனைவியும் தளராது
பின் தொடர்ந்தார். தன் கணவரின் இன்னல்களைத் தாமும் பகிர்ந்து கொண்டார்.
உறுதியான இலக்கு கொண்டு திடமாகச் செயல்பட முனைந்த தியாகிகளுக்கு
இதுபோன்ற இன்னல்கள் எத்தனை வந்தாலும், அவர்களை எதுவும் செய்துவிட முடியாது
என்பதற்கு பூலேயும் அவரது மனைவியும் சான்றாக நின்றனர்.
1840-இல் பூனாவில் அமெரிக்கன் மெஷன் ஒரு பெண்கள் பள்ளியை தொடங்கியது.
பூனாவில் முன்னமே ஸ்காட் மிஷினரி ஒரு பெண்கள் பள்ளியை நடத்தியது. ஆனால்,
பெண்களுக்கென பள்ளியைத் தொடங்கிய முதல் இந்தியர் பூலேயாவர்.
கிறித்து பிறப்பதற்கு முன்போ அல்லது பின்போ இந்தியாவில் பெண்
ஆசிரியர்கள் இருந்ததாக தெரியவில்லை. சாவித்திரி பூலே ஆசிரியராக வந்தபின்
இந்தியப் பெண்கள் பொது வேலைகளில் பங்கெடுத்தனர் என்று கூறப்படுகிறது. -
(ஆதாரம்: இந்துப் பண்பாட்டில் பெண்கள் நிலை பக்கம் 41. ஏ.எஸ். அல்டேக்கர்)
ஆறுமாதங்களுக்கு மேல் பள்ளியை நடத்த முடியாமல் பூலே பள்ளியை மூடிவிட்டு,
புதிய பள்ளியைத் தொடங்க தன் நண்பர்களுடன் கலந்தாலோசித்தார். முதலில்
பள்ளியைத் தொடங்கி நடத்தபோதிய பொருளைத் திரட்ட வேண்டும். இரண்டாவது,
தங்களுடைய மனைவியர்கள் அனைவரும் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற வகையில்
அவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து அவ்விதமே
செயல்பட்டனர்.
1848இல், பூனாவில் ஒரு மராத்திய அரசுப் பள்ளியில், நவம்பர் மாதத்தில்,
ஆசிரியராக அமர்த்தப்பட்ட சிவராம் பாவல்கர் என்பவர் சாவித்திரிக்கு கல்வி
கற்பிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மேலும், ஆசிரியப் பணிக்குத்
தயார்படுத்தும் வகையில் ஒரு பெண் குழுவிற்கே கல்வி பயிற்சியளித்தார்.
பல்வேறு இன்னல்கள் முயற்சிகளுக்கு இடையே ஜோதிபா பூலே, மீண்டும்
பள்ளியைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டார். பள்ளிக்கு யாரும் இடம் தர
முன்வராத நிலையில் சதாசிவ கோவந்தே அவர்களை சந்தித்தார். அவர் பேத்ஜினாகஞ்ச்
என்ற இடத்தைப் பள்ளி நடத்த தந்தார். அந்த இடத்தில் ஜோதிபா பூலே பள்ளியைத்
தொடங்கினார்.
பள்ளி மாணவர்களுக்குத் தேவையான சிலேட்டுகளையும், ஒவ்வொரு மாணவருக்கும்
இரண்டு ரூபாய் வீதம் பணமும் கோவந்தே தந்து உதவினார். இதனால் மாணவர்களின்
எண்ணிக்கை உயர்ந்தது.
பொது நீர்தொட்டிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீர் தர மறுத்தனர். எனவே,
ஜோதிபா பூலே தன் சொந்த செலவில் மாணவர்களுக்குக் குடிநீர் வழங்கினார்.
மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே, ஓர் இஸ்லாமியரின் இடத்தை
வாடகைக்கு அமர்த்தி, பள்ளியை விரிவாக்கினார். பள்ளியை நடத்துவதில் வித்தல்
வல்வீகரும், தீரோ தோசரும் உதவி செய்தனர். மேஜர் கேண்டி என்பவர்
பள்ளிக்குத் தேவையான நூல்களைத் தந்து உதவினர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்தியாவில் முதன் முதலில் கல்விக்கண் திறந்து
விட்ட பெருமை பூலேவைச் சாரும். இக்காரணத்தினால்தான், காந்தியடிகள் 1933ஆம்
ஆண்டு மே மாதம் ஏர்வாடா சிறையில் இருந்த போது, ஜோதிபாவே ஓர் உண்மையான
மகாத்மா என்று சமூக புரட்சிக்கு வித்திட்ட பூலேவிற்குப் பொருத்தமான
பட்டத்தையும் பாராட்டையும் அளித்தார். - (ஆதாரம்: தீனபந்து - மகாத்மா பூலே
சிறப்பு மலர், 25, நவம்பர் -1949)
இரண்டாண்டுகள் பள்ளியை வெற்றிகரமாகவே நடத்திய பூலேவிற்கு, சிறந்த
அனுபவமும், ஆற்றலும் கிடைக்கவே , பெண்களுக்கென்று மற்றொரு பள்ளியை தொடங்கத்
திட்டமிட்டார். அதன் விளைவாய், 1851ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் நாள், புத்காவர்
பேத் என்ற இடத்தில் அன்னாசாகிப் சிப்ளங்கர் என்பவர் வீட்டில், ஒரு பெண்கள்
பள்ளியைத் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட ஜாதிப் பெண்கள் பள்ளியைத் தானே
கவனித்து வந்ததால், இப்புதிய பெண்கள் பள்ளிக்குத் தன் மனைவி சாவித்திரியைப்
பொறுப்பேற்கச் செய்தார். அவர் பொறுப்பேற்றுக் கற்பிக்கும் அளவிற்கு
அவருக்குக் கல்வியும், பயிற்சியும் அளித்தார் பூலே. வெறி (யீயளளடி) வீரியம்
(ளுயீசவை) ஆகிய இரண்டையும் ஒருங்கே பெற்ற ஜோதிபா பூலே, தன்
நண்பர்களுக்கும் அந்த வெறியும், வீரியமும், வரும்படித் தூண்டினார். ஓய்வு
இல்லாமல் இப்பணிக்காகப் பாடுபட்டார்.
பணிச்சுமையைப் பகிர்ந்து கொடுத்தால், பளு குறையும், விரைந்தும் வேலை
நடக்கும் என்றெண்ணிய பூலே, பள்ளியை நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழுவை
அமைத்தார்.
அக்குழுவில் ஜோதிபா பூலே, நிர்வாகப் பொறியியல் பள்ளியில் ஆய்வாளராகப்
பணியாற்றிய ஜெகனாத் சதாசிவ், மராத்திய அரசுப் பள்ளியில் பணியாற்றிய கேசவ்
சிவராம் ஜோசி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஜெகனாத் சதாசிவ இக்குழுவின்
செயலராகப் பணியாற்றினார்.
எட்டுச் சிறுமிகளோடு தொடங்கப்பட்ட பள்ளியில் நாற்பத்து எட்டுப் பேர்
சேர்ந்து படித்தனர். பள்ளியின் வளர்ச்சி விரைவு அடைந்தது. அதன்
தலைமையாசிரியராய் சாவித்திரி சிறப்புடனும் பொறுப்புடனும் பணியாற்றினார்.
இடையிலே பிறரால் தரப்பட்ட இன்னல்களுக்கெல்லாம் அஞ்சாது பணியாற்றினார்.
பூலே, இப்பள்ளியின் மேம்பாட்டிற்கு ஓய்வின்றி உழைத்தார். குறிப்பிட்ட
நேரத்தில் உண்ணவும் உறங்கவுங்கூட வாய்ப்பின்றி பணியில் மூழ்கினார்.
சிறுமிகள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை ஊக்கப்படுத்த அவர்களுக்கு பள்ளியில்
உணவு வழங்கப்பட்டது. பெண்கள் விளையாடுவதற்கு வசதியும் வாய்ப்பும்
வழங்கப்பட்டன. இலவசமாய் உடைகளும் சில சிறுமியர்க்கு வழங்கப்பட்டன.
1851இல் செப்டம்பர் 17இல் ராஸ்தா பேத் என்ற இடத்தில் ஜோதிபா பூலே
மற்றொரு மகளிர் பள்ளியைத் தொடங்கினார். 1852இல் விதல்பேத் என்ற இடத்தில்
மூன்றாவது பள்ளியைத் தொடங்கினார். இதுவும் பெண்கள் பள்ளிதான். புவியியல்,
கணிதம், மகாராட்டிரர் வரலாறு, ஆசியா, அய்ரோப்பா, இந்துஸ்தானம் ஆகியவற்றின்
வரைபடங்கள் மூலம் அவற்றின் இருப்பிடம் அறிதல், நீதிபோதனை, பேச்சுத் திறன்
வளர்ப்புக்குரிய வகுப்பு என பல்வேறு கற்பித்தல்கள் நடைபெற்றன. இதனால்
ஆய்விற்கு வந்த அலுவலர்கள் வியப்படைந்து பாராட்டிச் சென்றனர்.
பூனா கல்லூரியின் கண்காணிப்பாளரான மேஜர் கேண்டி, இப்பள்ளி மாணவிகளின்
அறிவுத்திறனையும், முன்னேற்றத்தையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று
பாராட்டினார்.
1852ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் நாள் ஜோதிபா பூலேயின் பள்ளி பொதுமக்கள்
முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு மேற்கொண்ட பாயுசாகிப் மேண்டே
என்பவர் - இங்கே கூடியுள்ளவர்கள் பெண்கல்வியின் கட்டாயத்தை இன்னும்
முழுமையாக உணரவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றார்.
பெண்கள் கல்வி கற்றால்தான் மகிழ்ச்சியும் நன்மையும் குடும்பத்திற்குக்
கிடைக்கும். இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிலராவது பூலேவைப் போன்று
பாடுபட்டால்தான் இந்த நாடும் மக்களும் உயர்வர். பூலேயின் துணிவும்,
முயற்சியும், தியாகமும் பாராட்டுக்கு உரியன என்று நீதிபதி பிரவுன்
பேசினார்.
ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக இருந்தது போலவே, சமூகப்
புரட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மற்றவர்களுக்கும் பாதுகாப்பாக
இருந்து அவர்களை ஊக்குவித்தார்.
தட்சணைக் கொள்ளைத் தட்டித் தடுத்தார்
தட்சணை என்பது ஆரியப் பார்ப்பனர்களுக்கு அளிக்கப்படும் நன்கொடை அல்லது
காணிக்கை என்ற வகையில் அளிக்கப்பட்டது. அவ்வாறு அளிப்பது புண்ணியம் என்றும்
அது மதம் சார்ந்த ஒரு செயல்பாடு என்றும் கொள்ளப்பட்டது.
1674இல் சிவாஜி முடிசூட்டிக் கொண்ட போது, இத்தட்சணையைத் தொடங்கி
வைத்தார். மத சடங்குகளுக்கு ஏற்ற மாதமான சிரவன் (ளுசயஎய) மாதத்தில் இது
தொடங்கப்பெற்றது. சமய அமைச்சராய் இருந்த பண்டிட்ராவின் கேள்விகளுக்குப்
பார்ப்பனர்கள் தரும் பதிலுக்கு ஏற்ப தட்சணை காசாகவோ தானியமாகவோ
வழங்கப்பட்டது. அதாவது மதக்கல்வியில் இவர்களுக்கு போதிய அறிவு உள்ளதா
என்பதறிய, எப்படிப்பட்ட அறிவை ஊக்குவிக்க இவர் இத்தொகையை பரிசாக அளித்தார்.
சிவாஜிக்குப் பின் அவரது வாரிசுகளான சாம்பாஜியும், ராஜாராமும் தட்சணை
தரும் வழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றினர். சாகு மன்னர் காலத்தில்
இவ்வழக்கம் தளபதி தாப்கேதேயின் பொறுப்பில் விடப்பட்டது. நான்கு லட்சம்
ரூபாய் வரை இதற்கென கொட்டிக் கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் நான்கு லட்ச
ரூபாய் என்பது எவ்வளவு பெருந்தொகை!
பேஷ்வா மாதவராவ் கல்வியில் தேர்ச்சி பெற்ற ஏழைப் பார்ப்பனர்களுக்கு
மட்டும் இத்தொகையை வழங்கினார். ஆனால் இரண்டாம் பாஜிராவ் ஆட்சியில் தட்சணை
வழங்கும் செயல் வரையறையில்லாமல் வாரி வழங்கும் வழக்கமாக ஆனது.
மத அறிவைச் சோதித்து, அதற்குப் பரிசாக வழங்கப்பட்ட இந்த வழக்கம்,
பார்ப்பனருக்குத் தட்சணை தந்தால் பலன்மிகக் கிடைக்கும்; இது ஒரு
மதத்தொண்டு, கடவுள் தொண்டு என்று கருதிச் செய்யும் அளவிற்குச் சீர்கெட்டது.
சிரவன் மாதத்தில் மட்டும் வழங்கப்பட்ட வழக்கம் மாறி, நீண்ட நாட்களுக்கு
வழங்கும் வழக்கமாக நீட்டிக்கப்பட்டது.
சாலிகிராம் என்பது ஒரு வழிபாட்டுக் கடவுள். ஒரு கருப்புக் கல்லை
விஷ்ணுவாக எண்ணி வழிபட்டனர். இக் கடவுளுக்கு எவ்வளவு தொகை
கொடுக்கப்படுகிறதோ அதே அளவு தொகையை ஆரியப் பார்ப்பனருக்குத் தட்சணையாக
இரண்டாம் பாஜிராவால் வழங்கப்பட்டது.
இரண்டாம் பாஜிராவ் சாலிகிராமை வணங்க வரும்போது, பார்ப்பனர்களுக்குத்
தட்சணை வழங்குவதை வழக்கமாகக் கொண்டார். காஞ்சி, திருவரங்கம், குடந்தை,
தஞ்சாவூர், காசி, கன்னோஜ், மதுரா என்று இந்தியாவின் எல்லாப்
பகுதியிலிருந்து ஆரியப் பார்ப்பனர்கள் இங்கு வந்து குவிந்து ஏராளமான பணத்தை
தட்சணையாகப் பெற்றனர்.
இவ்வாறு ஒரு ஆண்டில் தட்சணை பெற்றவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும்
மேல் ஆனது. பத்து லட்ச ரூபாய் அக்காலத்திலே இத்தட்சணையாகக் கொட்டிக்
கொடுக்கப்பட்டது. பீஷ்வாவின் ஆட்சி முடிவிற்கு வந்தது. தட்சணை பெற்ற
அறுபதாயிரம் ஆரியப் பார்ப்பனர்கள் அவர் பக்கம் நின்று போரிட்டிருந்தால்கூட
பீஷ்வாவின் ஆட்சி முடிவுக்கு வந்திருக்காது.
ஆரியப் பார்ப்பனர்கள் ஆதாயம் பெறுவார்களே தவிர, ஆயுதம் ஏந்தி போராடி
ஆதரிக்க மாட்டார்கள். பசு மாட்டோடும், பெண்களோடும் சேர்ந்து போரில்
விலக்குப் பெற்று பாகாப்புத் தேடிக் கொண்ட தந்திரசாலிகள் அல்லவா அவர்கள்?
பீஷ்வாவிற்குப் பின் ஆங்கில ஆட்சியில் சில ஆண்டுகள் தட்சணை வழங்கும்
முறை பின்பற்றப்பட்டது. ஆரிய பார்ப்பனர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே
ஆங்கிலேயர்கள் இதைச் செய்தனர். மற்றபடி, ஆரியப் பார்ப்பனர்களைத் தெய்வீகமாக
மதித்து இதை செய்யவில்லை.
மேலும், தட்சணைத் தொகையை அய்ம்பதாயிரமாகக் குறைத்தனர். இதிலிருந்து
இருபதாயிரம் ரூபாயை எடுத்து, இந்துக் கல்லூரிகள் செலவுகளுக்குக்
கொடுத்தனர். தட்சணை பெறும் பார்ப்பனர் பட்டியல் நீண்டுகொண்டே செல்வதறிந்த
ஆங்கில ஆட்சியாளர்கள், புதிய ஆட்களைப் பட்டியலில் சேர்ப்பதற்குத் தடை
விதித்தனர்.
லோகித்வாடி கோபால்ராவ் தேஷ்முக் என்பவர் 1849இல் இத்தட்சணை முறை
பயனற்றது. பொருள் புரியாமல் மனப்பாடம் செய்து ஒப்புவித்து ஆரியர்கள் ஆதாயம்
அடைகிறார்கள். எனவே, இதைத் தடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, தனது
அலுவலக உதவியாளர் மூலமே அரசுக்கு ஒரு விண்ணப்பம் தயாரித்தார். ஆரியப்
பார்ப்பனர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் தட்சணை தொகையிலிருந்து
மூவாயிரம் ரூபாயை ஒதுக்கி, மராத்தி மொழியில் எழுதப்பட்ட அல்லது மராத்தியில்
மொழி பெயர்க்கப்பட்ட நல்ல நூல்களுக்குப் பரிசளிக்க அத்தொகையைப் பயன்படுத்த
வேண்டும் என்று அவ்விண்ணப்பத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இவ்விண்ணப்பத்தில் முதன்மையான மனிதர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.
ஆசிரியர்கள் பலரும் இதில் கையொப்பம் இட்டனர். பலராம்கிரத் என்ற
தலைமையாசிரியர், இது மத விரோதச் செயல். எனவே இதில் கையொப்பம் இட முடியாது
என்று மறுத்ததோடு, அவ்விண்ணப்பத்தைப் பறிக்க முயற்சி செய்தார். ஆனால்,
கையொப்பம் பெற வந்தவர்கள், திறமையாக அதைச் சமாளித்து, விண்ணப்பத்தை
எடுத்துச் சென்றனர்.
பம்பாயின் ஆளுநருக்கு இவ்விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதைக் கண்டு
ஆத்திரமுற்ற ஆரியப் பார்ப்பனர்கள் இந்த விண்ணப்பம் தயாரித்தவர்களைக்
கடுமையாகத் தாக்க முடிவு செய்தனர். அவர்களைச் சமூகத்திலிருந்து புறக்கணிக்க
வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதனால், விண்ணப்பம் தயாரித்த சமூக நலத் தொண்டர்களுக்கு வேகம் பிறந்தது.
இதைத் தீவிரப்படுத்த எண்ணி ஜோதிபா பூலேவைச் சந்தித்து விவரம் கூறி ஆதரவு
வேண்டினர்.
ஆரியப் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தை ஒழிப்பதையே தன் நோக்கமாக கொண்ட பூலே
மகிழ்ச்சியோடு இதற்கு ஆதரவு தந்தார். விண்ணப்பதாரர்களுக்கு ஆதரவு மகர், மங்
ஜாதிகளில் இருந்து இருநூறு இளைஞர்களைத் தேர்வு செய்து, ஒரு பாதுகாப்புக்
குழுவை அமைத்து, சமூகக் சீர்திருத்தவாதிகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்படி
செய்தார்.
சீர்திருத்தக்காரர்களின் வேண்டுகோளை அரசு ஏற்றுக் கொண்டது. மராத்தியில்
எழுதப்பட்ட நல்ல கட்டுரைகளுக்கு அல்லது மராத்தியில் மொழி பெயர்க்கப்பட்ட
நூல்களுக்கு பரிசளிக்க தொகை ஒதுக்கப்பட்டது. ஜோதிபா பூலேயின் சீரிய
முயற்சியால் சீர்த்திருத்தக்காரர்கள் வெற்றி பெற்றனர். அப்போது ஜோதிபா
பூலேவிற்கு வயது 22 மட்டுமே என்பதே வியப்பிற்குரிய செய்தி! - (ஆதாரம்:
ஆர்.வி.பாருலேகர் - பம்பாய் அரசாங்கப் பதிவு - கல்வி - பகுதி 1 பக்கம் 67)
பெண்ணுரிமைப் போராளி என்றும், தாழ்த்தப்பட்டோர் காவலன் என்பதும், ஆதிக்க
எதிர்ப்பு தளபதியென்றும் ஜோதிபா பூலேயைப் பலதரப்பாரும் பாராட்டினர்.
பூனா அப்சர்வர், பாம்பே கார்டியின், டெலிகிராப் அன்ட் கூரியர் போன்ற பத்திரிகைகள் வெகுவாக இவரைப் பாராட்டி எழுதின.
பூலேயின் கல்விக் கழகத்திற்கு, உதவித் தொகை (ழுசயனே - யனை) வழங்கும்படி
மேஜர் கேண்டி பரிந்துரை செய்தார். அரசாங்கம் மாதம் 75 ரூபாய் வழங்க
அனுமதியளித்தது. தட்சணை நிதியிலிருந்தே இத்தொகை வழங்கப்பட்டது. இது
பூலேவிற்கு கிடைத்த இரட்டிப்பு வெற்றி, மகிழ்ச்சியாய் அமைந்தது.
ஜோதிபா பூலேயின் சமூகப் புரட்சி, அடித்தட்டு மக்களிடையே பெரும்
விழிப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தியதோடு, அவர்களின் அறிவையும்
ஆற்றலையும் வளர்த்தது.
ஜோதிபா பூலேயின் பள்ளியில் படித்த தீண்டத்தகாத மங் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுமி எழுதிய கட்டுரையே இதற்குப் போதிய சான்றாகும்.
வேதங்கள் தங்களுக்கு மட்டுமே உரிமையுடையது என ஆரியப் பார்ப்பனர்கள்
அறிவிக்கின்றனர். அவர்கள் மட்டும்தான் அவைகளைப் படிக்க முடியும் என்றால்
எங்களுக்கென்று எந்தப் புத்தகமும் மதத்தில் இல்லையென்றாகிறது. மதப்
புத்தகங்களைப் படிக்க உரிமையில்லை என்றால், எங்களுக்கு மதம் இல்லை என்றே
ஆகிறது. ஓ கடவுளே! ஆரிய பார்ப்பனர்களுக்கென்று ஒரு மதம் இருப்பதைப் போல,
உன்னிடமிருந்து உருவாகி நாங்கள் பின்பற்றக் கூடிய மதம் எதுவென்று நீ
சொல்வாயாக!
இரண்டாம் பாஜிராவ் ஆட்சி முடிந்துவிட்டது. ஆங்கில ஆட்சி எமக்குக்
கிடைத்துள்ளது. படிப்பதற்காகவோ, வீதியில் நடப்பதற்காகவோ ஆடையணிவதற்காகவோ,
எங்களை இனி யாரும் தூக்கிலிட முடியாது! உயிரோடு புதைக்க முடியாது! என்று
அச்சிறுமி அக்கட்டுரையில் உணர்வு பொங்கக் குறிப்பிட்டிருந்தார்.
ஆம். அடிமைப்பட்ட சமுதாயத்திற்குக் கல்வியைக் கொடுத்தால், அவர்களின்
அறிவும் திறமையும் எவ்வாறு பளிச்சிடும், அவர்கள் விழிப்புப் பெற்று எந்த
அளவுக்கு விடுதலைக்கும், உரிமைக்கும் குரல் கொடுப்பார்கள் என்பதற்கும்
இதுவே போதிய சான்றாகும்.
ஜோதிபா பூலேவின் ஓய்வில்லா உழைப்பிலும், அளவற்ற அன்பாலும், இடைவிடாத
கண்காணிப்பாலும் அவரது பள்ளிகள் மேலும் மேலும் உயர்ந்தன; அங்குப்
படித்தவர்களின் நிலையும் உயர்ந்தது. அரசாங்கம் நடத்தி வந்த சுதேசிப்
பள்ளிகளையும் விட இப்பள்ளிகள் உயர்தகுதி பெற்று விளங்கின.
இலண்டனில் உள்ள இயக்குநர் குழுவிற்கே பூலேவைப் பற்றிச் சிறப்பித்து
அறிக்கை அனுப்பினர். அரசாங்கம் அகம் மகிழ்ந்து இவரைப் பாராட்டிச்
சிறப்பித்தது. பெண்கல்விக்கும், பெண்ணுரிமைக்கும், தாழ்த்தப்பட்டோர்
எழுச்சிக்கும் பாடுபட்ட இவருக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள்
குவிந்தன.
இப்படிப்பட்ட புரட்சிப் பணிகளை பூலே செய்தபோது, சமூகப் சீர்திருத்த
இயக்கத்தின் காவலராக விளங்கிய கோபால் கணேஷ் அகர்கரும், இந்தியாவில் பெண்கள்
பல்கலைக்கழகத்தை நிறுவிய தோன்டே கேசவ் ஹார்வியும், பண்டிதர் ராமாபாயும்,
மகாத்மா காந்தியும், பிறக்கவே இல்லை என்பது இவரது பெருமையைப் புரிந்து
கொள்ள உதவும். எந்தவொரு முன்னோடி புரட்சியாளரும் இல்லாத நிலையில், தன்
உள்ளத்தில் எழுந்த மனிதநேய உணர்வுகளால் உந்தப்பட்டு, இந்த இணையற்ற
புரட்சிகளை, மதமும், சாஸ்திரமும், மடமையும் கோலோச்சிய காலத்தில் செய்தார்
என்றால் அவரது சிறப்பைச் செப்ப வார்த்தைகள் ஏது?
பூலே எழுப்பிய அறிவுப் புரட்சியும் சமத்துவப் புரட்சியும் நாட்டின் பல
பாகங்களிலும் எழுச்சியை ஏற்படுத்தியது. பல இடங்களில், பெண்கள் பள்ளிகள்
தொடங்கப்பட்டது. சூத்திரர்கள் சமத்துவம் பெறத் தொடங்கினர். அனைத்து ஜாதிப்
பிள்ளைகளுக்கும் பள்ளிகளில் இடம் தரப்பட்டன. புதிதாக இந்த நோக்கத்திற்குப்
பள்ளிகளைத் தொடங்க விரும்பியவர்களும், அரசினரும் பூலேவின் பள்ளியை
பார்வையிட்டு, அதைப் பின்பற்றி பள்ளிகளை அமைத்தனர்.
கல்வி என்பது உயர்ஜாதிக்காரர்களுக்கும், செல்வந்தர்களுக்குமே என்ற
நிலையை மாற்றி அனைவருக்கும் அது உரியது என்ற நிலையை அக்காலத்திலே
உருவாக்கியவர் பூலேயாவார். அது மட்டுமின்றி அவ்வாறு பெற முடியும், பெற
வேண்டும் என்ற துணிவையும் அடித்தட்டு மக்களுக்கும் பெண்களுக்கும்
ஏற்படுத்தியவர் பூலேயாவார்.
முர்ரேமிசெல் என்ற கிறித்துவர் நடத்திய பள்ளிக்கு ஜோதிபா பூலே ஒரு
தாழ்த்தப்பட்ட சிறுவனைப் படிப்பதற்கு அனுப்பினார். அவனுக்கு ஆங்கிலம்
கற்பிக்க கீழ்வகுப்பில் சேர்த்தார் முர்ரே மிசெல். அடுத்த சில நிமிடங்களில்
ஆரியப் பார்ப்பன அணியொன்று வந்தது. அவர்களின் கண்களில் கோபம்
கொப்பளித்தது.
நாங்கள் இப்பள்ளியை விட்டு விலகப் போகிறோம். இப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட
மகர் ஜாதிப் பையன் சேர்க்கப்பட்டுள்ளான்! என்று ஆத்திரத்தோடு கூறினர்.
ஒரு மகர்தானே இருக்கிறார்? முர்ரே கேட்டார்.
ஆமாம். ஒருவன் இருந்தாலும், பத்து பேர் இருந்தாலும் கேடு ஒன்றுதான்! என்றனர் ஆரியச் சிறுவர்கள்.
நான் அந்தப் பையனைத் துரத்தி விடவா? என்றார்.
அது எங்களுக்குத் தெரியாது. அவன் இங்கு படித்தால் நாங்கள் விலகிவிடுவோம் என்றனர்.
உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் நீங்கள் அவனைத் தொடவேண்டாம்.
நீங்கள் மேல்வகுப்பில் படிக்கிறீர்கள். அவன் கீழ்வகுப்பில் படிக்கிறான்.
அவன் வேறு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான். இதில் உங்களுக்கென்ன கேடு?
என்றார்.
நாற்காலியின் அடியில் பாய் போடப்பட்டு இருக்கிறது. அதன் வழியாக
எங்களுக்குத் தீட்டு வரும். நாங்கள் சாப்பிடுவதற்கு முன் இத்தீட்டைக்
கழுவியாக வேண்டும்! என்றனர்.
இந்தப் பாயை நான் எடுத்துவிடட்டுமா? என்றார் அவர்.
நாங்கள் இந்த வகுப்பில் இருக்கப் போவதில்லை என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்.
நான் இச்சிறுவனை வெளியே அனுப்ப முடியாது. உங்களையும் வெளியில் அனுப்ப விரும்பவில்லை. நாளை வரை பொறுத்திருங்கள்... என்றார்.
கோபம் ஆறாமல் அங்கிருந்து சென்றனர் ஆரியச் சிறுவர்கள்.
தங்களுக்கு நன்மை கிடைக்கும் போது சாஸ்திரங்களைத் தள்ளி வைத்துவிட்டுப்
பணம் சம்பாதிக்கும் ஆரியப் பார்ப்பனர்கள், அடுத்த ஜாதிக்காரன் படிக்க
வருகிறான் என்றதும் சாஸ்திர கோத்திரத்தை ஆத்திரத்துடன் பேசுகின்றனர்.
இவர்களது சாஸ்திரப்படி கிறிஸ்துவரான அயல்நாட்டவரிடம் ஆரியர்கள் கல்வி
கற்கலாமா? அதற்கு சாஸ்திரம் அனுமதிக்குமா? அதுவும் சாஸ்திர விரோதந்தானே?
மாட்டுக்கறி தின்னும் சூத்திரன் வேண்டாம் என்றால், மாட்டுக்கறி தின்னும்
அயல்நாட்டுக்காரரிடம் மட்டும் எப்படி கல்வி கற்கலாம்? அங்கே தீட்டு வராதா?
தனக்கொரு நீதி பிறர்க்கொரு நீதி என்ற பித்தலாட்டம் இங்கே பிளந்து
சிரிக்கிறது பாருங்கள்!
1852இல் கனரா பகுதியைச் சேர்ந்த நான்கு தாழ்த்தப்பட்ட பில்லவர்
(க்ஷடைடயஎயச) ஜாதியினர் மங்களூர் நீதிமன்றத்தில் வேலையில் சேர்ந்தனர்.
முறையாகத் தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்டே வேலைக்கு வந்தனர். அவர்களிடம்
அனைத்துத் தகுதியும் திறமையும் இருந்தன. என்றாலும், அவர்கள்
பணியமர்த்தப்பட்டதற்கு ஆரியப் பார்ப்பனர்கள் கடுமையான
எதிர்ப்புதெரிவித்தனர். அவர்களைப் பொறுத்தவரை தங்களின் முழுமையான
ஆதிக்கத்தில் பிற ஜாதியினர் பங்கு போட்டுக் கொள்வதை ஏற்றுக் கொள்ள
இயலவில்லை. பரம்பரை ஆதிக்கமல்லவா? பதறி குதித்தனர்!
பார்ப்பனரில் சிலர் இவர்களுக்கு கீழ் வேலை செய்ய நேரிடும். அதை ஏற்றுக்
கொள்ள இயலாது. மேலும் இவர்களுடைய தீட்டிற்குத் தினம் தினம் ஆளாக வேண்டி
வரும். எனவே, இவர்களைப் பணியமர்த்தக்கூடாது என்று வாதிட்டனர். தங்கள்
கருத்தை, கோரிக்கையை ஆண்டர்சனுக்கு அனுப்பினர். அவர் அதை நிராகரிக்கவே
ஆளுநரான ஹென்றி பாட்டின்ஜாரிடம் மேல் முறையீடு செய்தனர். ஆனால், ஆளுநர்
ஆண்டர்சனின் தீர்ப்பை ஏற்பதாகவும், அத்தீர்ப்பு பாராட்டப்பட வேண்டிய
தீர்ப்பு என்றும் எழுதினார்.
சடங்குகளை மீறுபவர்களில், சாத்திரங்களை மீறுகின்றவர்களை தட்சணை பெற்றுக்
கொண்டு மன்னிப்பளிக்கும் கேவலம் ஆரியப் பார்ப்பனர்களிடம் அதிகம்
காணப்பட்டது. பணக்காரனுக்கு ஒரு நீதி ஏழைக்கு ஒரு நீதி என்பதும் அவர்களால்
அமல்படுத்தப்பட்டது.
1851, மே 25இல் கொல்கத்தாவில் பார்ப்பனர்கள் ஒரு பஞ்சாயத்துக்
கூட்டத்தைக் கூட்டினர். தடை செய்யப்பட்ட உணவை உண்டதால், அவனை மீண்டும்
ஜாதியில் சேர்க்கலாமா? என்பதே பஞ்சாயத்து. ஆனால் 100 பசுக்களைப்
பார்ப்பனர்களுக்குத் தட்சணையாகக் கொடுத்தால், ஜாதிவிலக்கு தேவையில்லை என்று
பரிகாரம் கூறப்பட்டது. ஆரியப் பார்ப்பனர் பரிகாரம் பணத்தில்
பதுங்கியிருக்கும் சூட்சமம் அன்று பட்டவர்த்தனமாக வெளிவந்தது.
தீண்டத் தகாத பெண் வீட்டில் தங்கியிருந்த ஒரு பூனா பார்ப்பனருக்கு சமூக
விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், பெருமளவில் பணத்தைப் பார்ப்பனர்களுக்குக்
கொடுத்ததும் மீண்டும் தங்கள் ஜாதியில் சேர்த்துக் கொண்டனர் பார்ப்பனர்கள்.
மதமும், சாஸ்திரமும், சம்பிரதாயங்களும் தங்களின் சுயநலத்திற்காகவே
ஆரியப் பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டன என்பது இவற்றால் தெளிவாகும்.
இவற்றைக் கண்ட ஜோதிபா பூலேவிற்கு, பார்ப்பனர்களைக் கண்டிப்பதற்குரிய
வாய்ப்பு கிடைத்தது. பார்ப்பனர்களைக் கடுமையாகச் சாடினார். உங்கள்
ஜாதியும், சாஸ்திரமும், சம்பிரதாயமும், தீட்டும், புனிதமும் இவ்வளவுதானா?
பணம்தான் எல்லாம் என்றால் நீ எப்படி உயர்ந்தவன். பணம் இருப்பவன்தானே
உயர்ந்தவன்? என்று சரமாரியாக வினா எழுப்பினார்.
ஜோதிபாவின் பள்ளிகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்தன. பெருமளவில்
மாணவர்கள் சேர்ந்தனர். 1853 பிப்ரவரி 12ஆம் தேதி இவர் பள்ளியில் பயின்ற
மாணவர்கள் பொதுத் தேர்விற்குச் சென்றனர்.
அன்று மாலை 4 மணியளவில், மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளியின்
வளர்ச்சி பற்றிய அறிக்கை படிக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின் பெண்கள்
படிக்க வருவதில்லை, மாமனார் மாமியார் கட்டுப்பாட்டிலிருந்து அவர்களால்
வெளியில் வர இயலவில்லை. எனவே, குழந்தைத் திருமண வழக்கத்தை முற்றாக ஒழிக்க
வேண்டும். பெண்கள் கல்வியைத் தூண்டும் வகையில் உதவித் தொகைகள் அளிக்கப்பட
வேண்டும்.. என்று அறிக்கையில் சுட்டப்பட்டது.
பெண் கல்வியில் பெரிதும் விருப்பம் கொண்டவரும், தன் சொந்த வீட்டிலேயே
பெண்கள் பள்ளிக்கு இடம் தந்த துணிவு மிக்கவருமான அன்னாசாகிப் சிப்ளங்கர்
இந்நிகழ்ச்சியில், மராத்திய மொழியில் பெண்கல்வியின் கட்டாயம் பற்றியும்,
பெண்ணின் பெருமை பற்றியும் உணர்ச்சியுடன் பேசினார்.
கணவனுக்குக் கண்மூடித்தனமாகக் கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறையும்,
பெண்கள் படிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடும் நடப்பில் உள்ளன. இவை மிகவும்
கண்டிக்கத் தக்கவை. தன் கடமைகளைப் பெண்கள் சரியாகக் செய்யவும்,
பிள்ளைகளுக்கு முறையாகக் கற்றுத் தரவும் பெண்கல்வி மிகவும் அவசியம் என்று
பேசினார்.
ஏராளமாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில் ஜோதிபா பூலேயின் அறிக்கை
படிக்கப்பட்டது. பெண்கள் பள்ளி நடத்தப்பட்ட விதம் பற்றியும், வரவு செலவு
பற்றியும், பள்ளிகளால் ஏற்பட்ட விளைவு பற்றியும் அதில் கூறி, ஒத்துழைத்த
அனைவருக்கும் நன்றி கூறியிருந்தார். எங்கு பார்த்தாலும் பூலேவைப் பற்றி
மக்கள் பாராட்டிப் பேசத் தொடங்கினர்.
கொலை வெறி முயற்சியை எதிர்கொண்ட கொள்கை வீரர்
ஜோதிபா பூலேவால் தொடங்கப்பட்ட கல்விப் புரட்சி வேகமாக வளர்ந்தது. ஆங்கில
ஆட்சி நடந்ததால் அதற்குச் சாதகமான சூழல் நிலவியது. பெண்களுக்கும்
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பள்ளிகளைத்திறந்து, எதிர்ப்புகளை முறியடித்து,
வெற்றி கண்ட பூலேவைப் பின் பற்றி பல இடங்களிலும் பெண்கள் பள்ளிகளும்,
தாழ்த்தப்பட்டவர்களுக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டன.
1855இல் அகமத் நகரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பள்ளி திறக்கப்பட
வேண்டும் என்று மக்கள் விடுத்த வேண்டுகோள் ஏற்கப்பட்டு, பள்ளி
துவக்கப்பட்டது.
பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பள்ளியில் சேர மறுப்புச்
சொல்லக்கூடாது. அவர்களைச் சேர்க்க முடியாது என்று கூறக்கூடாது என்று
உத்தரவுகள் இடப்பட்டன. 1856ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தார்வார் பகுதியில்
ஒரு தாழ்த்தப்பட்டவரைச் சேர்க்கமுடியாது என தலைமையாசிரியர் மறுத்தபோது,
அவனுக்கு பள்ளியில் சேர அனுமதித்து இடம் அளிக்க வேண்டும் என்று அரசு
ஆணையிட்டது.
இப்பிரச்சினையின் அடிப்படையில், இலண்டனிலிருந்த இயக்குநர் குழு ஓர்
ஆணையை பிறப்பித்தது. அரசு கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையில் இடம்
மறுக்கப்படக்கூடாது. அது அனைத்து ஜாதியினருக்கும் பொதுவானது... என்று அந்த
ஆணையில் அழுத்தந் திருத்தமாகச் சொல்லப்பட்டிருந்தது.
- (ஆதாரம்: கல்விப் பயிற்சி இயக்குநரின் 1856-1857ஆம் ஆண்டிற்கான அறிக்கை பக்கம் - 88)
தாழ்த்தப்பட்ட மக்களும், பெண்களும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி,
சமத்துவம் பெற கல்வி ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்று ஜோதிபா பூலே
எண்ணினார்.
கால வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி வளர்ச்சி பெற வேண்டும் என்பதால், தன்னால்
நடத்தப்பட்ட அனைத்துப் பள்ளிகளையும் ஒரு நிர்வாகக் குழுவிடம் ஒப்படைத்து,
பெரும்பான்மையினரின் முடிவுப்படி பள்ளி செயல்பட வேண்டும் என்று கூறினார்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்று தருவதோடு
நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பலரும் கூறிய வேளையில், கல்வியின் நோக்கம்
எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வதோ, செய்திகளைத் தெரிந்து கொள்வதோ
மட்டுமல்ல, நல்லது கெட்டது எது? உண்மை எது, பொய் எது? ஏமாற்று எது? மோசடி
எது? என்று பகுத்தாய்ந்து விழிப்போடு வாழ்வை நடத்த துணை நிற்பதே கல்வியின்
நோக்கம் என்று ஜோதிபா பூலே வாதிட்டார்; வற்புறுத்தினார்.
பள்ளிகளைச் சிறப்பாக நிர்வகிக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டு, தாமும் தம்
மனைவியும் பள்ளிப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டனர். தனது குடும்ப
வருமானத்திற்கு ஒரு தையல் கடை நடத்தினார். தம் மனைவியின் துணை கொண்டு, சில
பெண்களை வேலைக்கு அமர்த்தி மெத்தைகள் தயாரித்து விற்பனை செய்தார்.
தந்தையால் விரட்டப்பட்டதால், மீண்டும் அவரிடம் பூலே செல்லவில்லை.
பூலே ஏற்றிய அறிவுச்சுடர் நாளுக்கு நாள் பெருகவே, பெண்களும்
தாழ்த்தப்பட்டவர்களும் மென்மேலும் விழிப்புப் பெற்றனர். ஆரியப் பார்ப்பன
ஆதிக்க ஆட்சி சாய்ந்தது. அவர்களின் ஏமாற்றை மக்கள் நம்பத் தயாராய் இல்லை.
கல்வி பெறப் பெற மக்கள் அறிவும் விழிப்பும் பெற்றனர். இதனால் ஆரியப்
பார்ப்பனர்களுக்கு சமுதாயத்தில் இருந்த உயர் மதிப்பு சரிந்தது. ஏமாற்றி
பறித்த வருவாய் நின்றது. சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும்
பாதிப்படைந்தனர். இத்தனைக்கும் காரணம் இந்த ஜோதிராவ் தானே, அவனைச்
சும்மாவிடக்கூடாது என்று கூறி வெறிக் கொண்டு நின்றனர்.
தகர்ந்து வரும் பழைமையைத் தாங்கவும், வீழ்ந்து வரும் ஆதிக்கத்தை நிலை
நிறுத்தவும், நொருங்கிவிழும் ஜாதிப் பிடிப்பைச் சரி செய்யவும் புதிய
விளக்கங்கள், கதைகள், தத்துவங்கள் என்று என்னென்னவோ செய்து பார்த்தனர்
ஆரியப் பார்ப்பனர்கள். ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டையாக இருந்த
பூனாவிலே பூலே தன் திறமைகளைக் காட்டி, அவர்களின் ஆதிக்கத்தை வீழ்த்தியதால்
அவர்களின் வேகமும் வெறியும் அதிகமாக இருந்தது. ஜோதிராவ் பூலேவைக் கொல்லத்
திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக இரண்டு பேர் கூலிக்கு அமர்த்தப்பட்டனர்.
ஒருவன் பெயர் ரோடி. மற்றொருவன் பெயர் தோன்திராம். இந்த இருவருமே
தாழ்த்தப்பட்டவர்கள்! இதுதான் வேடிக்கை இதுதான் வாடிக்கையும்கூட! எந்த
இனத்தின் மீட்சிக்கும், வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுகிறார்களோ
அவர்களைக் கொல்ல அந்த இனத்தவர்களே பயன்படுத்துவதுதானே இந்நாட்டின் நடப்பு.
இதனால் தானே பெரும்பான்மை இனம் வீழ்ந்தது, அடிமையானது. சொரணையும், சூடும்,
விழிப்பும், விவேகமும் இருந்திருந்தால் இவன் அடிமையாகி இருக்க மாட்டானே!
இந்த பலவீனத்தைப் பயன்படுத்த பார்ப்பனர்கள் முடிவு செய்து, தாழ்த்தப்பட்ட
இளைஞர்களையே கூலிக்கு அழைத்தனர். தன் விரலாலே தன் கண்ணைக் குத்துதல் என்பது
இதுதானே!
கூலிக்காகக் கொலை செய்ய கையில் கத்தியோடு நடு இரவில் புறப்பட்ட இந்த இரு
இளைஞர்களும் ஜோதிராவின் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது ஜோதிராவ்
படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தார். காலடி ஓசையும், முணுமுணுப்பும்
கேட்டதும், சட்டென்று படுக்கையை விட்டு எழுந்தார். விளக்கு வெளிச்சத்தில்
பார்த்தபோது இரண்டு உருவங்கள் நிற்பதைக் கண்டார்.
யார் அங்கே? யார் நீங்கள்? என்று கேட்டுக் கொண்டே விளக்கொளியை
அதிகப்படுத்தினர். பயந்து ஓடி வந்த மனைவி அதிர்ச்சியாலும் அச்சத்தாலும்
உளறியபடி அருகில் வந்தார்.
உங்களைக் கொல்ல நாங்கள் வந்திருக்கிறோம் என்று ஒருவன் கூற, உங்களைக் கொல்ல எங்களை அனுப்பியிருக்கிறார்கள் என்று இன்னொருவன் கூறினான்.
எதற்காக? நான் ஏதேனும் உங்களுக்கு கெடுதல் செய்தேனா? என்று ஜோதிராவ்
அச்சூழலிலும் அமைதியாய் கேட்டார். சற்று நேரம் கழித்து மீண்டும்,
உங்களுக்கு நான் என்ன பாவம் செய்தேன்! என்று கேட்டார்.
எங்களுக்கு நீங்கள் எந்த கெடுதலும் செய்யவில்லை. ஆனால் சிலபேர் எங்களை
இதற்காக அனுப்பியிருக்கிறார்கள்... என்று அவர்கள் பதில் கூறினர்.
இதனால் உங்களுக்கு என்ன இலாபம்? அந்த மனிதநேயர் கேட்டார்.
ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் கூலி தருவதாகச் சொல்லி உள்ளார்கள்! என்று உண்மையைக் கூறினர் கொலை செய்யவந்தவர்கள்.
எனது மரணத்தில் உங்களுக்கு இலாபம் இருக்கும் என்றால், இதோ நான்
உங்களுக்கு முன்னால்தானே இருக்கிறேன். எந்த ஏழைகளுக்காக நான் ஊழியம்
புரிந்தேனோ, இன்னும் ஊழியம் செய்ய விரும்புகின்றேனோ, அந்த மனிதர்களே
என்னைக் கொல்லுவது எனக்குக் கிடைத்த பெரும்பேறுதான். உடனே கொல்லுங்கள்.
ஏழைகளுக்காகவே எனது வாழ்க்கை. எனது மரணத்திலும் கூட ஏழைகளே பயனடைவார்கள்..
என்று உணர்வுடன் கூறினார் ஏழைப் பங்காளன்.
ஜோதிபா பூலேவின் முகத்தில் எந்தக் கவலையும், சலனமும் அதிர்ச்சியும்
இல்லை. அவரது அன்பொழுகும் முகத்தையும் கருணை வீசும் கண்களையும், பாசம்
பொங்கும் வார்த்தைகளையும் கண்ட அந்த இரு இளைஞர்களும், அவரது காலில்
வீழ்ந்து மன்னிப்பு வேண்டினர். தங்கள் தவற்றை உணர்ந்தவர்கள், அய்யா! உங்கள்
எதிரிகளை கொல்ல எங்களுக்கு அனுமதி தாருங்கள்! என்று மன்றாடினர்.
ஆனால், மனிதநேயத்தின் மறுவடிவாய் நின்ற ஜோதிபா பூலே, இங்கு நடந்ததை
யாரிடமும் சொல்ல வேண்டாம். என்னைக் கொல்ல உங்களை அனுப்பியவர்கள் மீது
எந்தப் பகையும் கொள்ள வேண்டாம்... என்று அவர்களுக்கு கட்டளையிட்டார்.
என்னைக் கொல்ல நினைத்தவர்கள் வாழட்டும்! என்று எதிரிகளையும் மன்னித்தார்.
உயர்ந்த ஜாதிக்காரன் என்று சொல்லிக் கொள்கின்ற ஆரிய பார்ப்பனரின்
பண்பாட்டிற்கும், அவர்களால் சூத்திரர்கள் என்று
கொச்சைப்படுத்தப்படுகின்றவர்களின் பண்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
உண்மையில் உயர்ந்தவர்கள் யார்? எல்லா வகையிலும் இழிந்தவர்கள் யார்?
என்பதை அன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் பறை சாற்றும் நிகழ்வாக இது
அமைந்தது.
கொல்ல வந்த இளைஞர்கள் இருவரும் அவரது சீடர்களானார்கள். ஜோதிராவின்
இரவுப் பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினர். அதுமட்டுமின்றி அவருக்குப்
பாதுகாவலர்களாகவும் ஆயினர்.
ஆரியப் பார்ப்பனர் அல்லாதாருக்கும் அறிவும் தெளிவும் கொடுத்துவிட்டால்,
அவர்களைப் போல ஆற்றலாளர்களை, விசுவாசிகளை, நேயம் மிக்கவர்களைப்
பார்க்கமுடியாது என்ற உண்மையும் இதன் மூலம் வெளிப்பட்டது.
எனவே, பார்ப்பனர் அல்லாதாருக்கு கல்வியும் விழிப்புமே உடனடித் தேவை என்பதை இந்நிகழ்வு உணர்த்தியது.
விதவைகள் துயருக்கு விடிவு:
கல்வியறிவைக் கொடுப்பதிலும், ஜாதியை ஒழிப்பதிலும் முழுக்கவனத்தையும்
செலுத்தி வந்த ஜோதிபா பூலே, மூட நம்பிக்கை ஒழிப்பு மற்றும் விதவைத்
திருமணம் போன்றவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இராஜாராம் மோகன்ராயின் அரும்பெரும் முயற்சியால் உடன்கட்டை ஏற்றுதல்
என்னும் கொடிய வழக்கம் ஒழிக்கப்பட்ட போதிலும், கணவனை இழந்த பெண்கள்,
விதவையாக்கப்பட்டு, வேதனையில் வேகும் கொடுமை ஒழிக்கப்படவில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை விதவைப் பெண்கள்
மொட்டையடிக்கப்பட்டனர். துறவிகளுக்கு மொட்டை அடிப்பதுபோல, விதவைகளும்
மொட்டையடித்துக் கொள்ள வேண்டும் என்பது வற்புறுத்தப்பட்டது. விதவை துறவு
வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் அடையாளமாக
மொட்டையடிக்கப்பட்டார்கள். அவர்களின் அழகு அழிக்கப்படவேண்டும், அதன் மூலம்
அடுத்தவரின் சபலத்திலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பதும் இலக்காக
இருந்தது.
விதவைகள் சுபகாரியங்களில் வரக்கூடாது. எதிரில் வரக்கூடாது. அவள் ஒரு
கெட்ட சகுனம் என்ற நம்பிக்கைகள் வலுவாக நின்றன. உணர்வுகளை ஒடுக்கி அல்லது
ஒழித்து, ஓர் மூலையில் முடங்கி தன் வாழ்வைக் கடத்திவிட வேண்டும் என்று
வற்புறுத்தப்பட்டது.
விதவை மறுமணம் பற்றிய விழிப்புணர்வு 1849ஆம் ஆண்டே மகாராட்டிரத்தில்
தொடங்கப்பட்டது. திரு. விஷ்ணு சாஸ்திரி அவர்கள் விதவை மணத்தின் முன்னோடி
என்று அழைக்கப்பட்டார். விதவை மணம் பற்றி நூல் ஒன்று வெளியிட்டார்.
பூனாவில் இது பற்றிய தீவிர முயற்சியில் இவர் ஈடுபட்டார். 1842இல்
பெல்காமில் இரண்டு பார்ப்பன விதவைகளுக்கும் திருமணம் நடந்தது.
1853ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் பம்பாயில் இந்துச்
சமூகத்தினரின் கூட்டம் நடைபெற்றது. விதவை மறுமணத்தை அறிமுகப்படுத்துவது
பற்றி இதில் விவாதிக்கப்பட்டது. வைதீக சாஸ்திரிகள் கடுமையான எதிர்ப்பின்
விளைவாக இக்கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. - (ஆதாரம்: பம்பே கார்டியன்,
28.10.1853)
1856ஆம் ஆண்டு ஜூலை மாதம் விதவை மறுமணச் சட்டத்தை அரசு இயற்றியது.
விருப்பப்படும் விதவைகள் திருமணம் செய்து கொள்ள இச்சட்டத்தில் வழி
செய்யப்பட்டது. ஏனைய இந்துக் குழந்தைகளுக்கு உள்ளதுபோல, இவர்களுக்குப்
பிறக்கும் குழந்தைகளுக்கும் உரிமைகள் அளிக்கப்பட்டன.
விதவைப் பெண்கள், கட்டுப்பாடு என்ற பெயரால், உணர்வுகளை அடக்கிக் கொண்டு,
இன்பசுகம் எதுவும் இன்றி உணர்வு ஒழிந்து வாழ வேண்டும் என்று
வற்புறுத்தப்பட்டதால், பெரும்பாலான விதவைகள் கள்ள உறவில் ஈடுபட்டனர்.
இதற்குப் பிறகும் அவர்களுடைய உணர்வுகளை மதிக்க மறுத்த ஆரியப்
பார்ப்பனர்கள், இப்படிப்பட்டவர்களுக்கு (கள்ள உறவில் ஈடுபட்ட விதவைகளுக்கு)
பரிகாரம் செய்த கேவலந்தான் இன்னும் மோசமானது.
1854இல் ஒழுக்கங்கெட்ட இளம் விதவைக்கு சங்கராச்சாரி பரிகாரம் கூறினார்.
தட்சணை என்ற பெயரில் ஏராளமான பணத்தைப் பெற்றுக் கொண்ட சங்கராச்சாரி, தன்
கால்களைக் கழுவும் புனிதச் செயலைச் செய்தபின், பசுமாட்டிலிருந்து
பெறப்படும் பால், மூத்திரம், சாணி போன்ற அய்ந்து பொருட்களால் அவ்விதவை
தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விதவையின் தந்தைக்கு
ஆணையிட்டார்.
அடுத்து அதைவிட மோசமான ஒரு நிகழ்வு நடந்தது. விதவைப் பெண் கள்ள உறவில்
ஈடுபட்டு கருவுற்று கர்ப்பிணியாக நின்றாள். அப்பெண்ணிற்குப் பரிகாரம்
வேண்டி சங்கராச்சாரியிடம் அவரது தந்தை வந்தார்.
அப்பெண்ணை ஒரு மரப்பொந்தில் வைத்து அதற்குத் தீயிடும் படியும், அதில்
அவர் உயிர் பிழைத்துக் கொண்டால், அவளது தலையை மொட்டையடித்து, ஆயிரம் ஆரியப்
பார்ப்பனர்களுக்கு விருந்து கொடுத்தால் பரிகாரம் கிடைக்கும். அவளை
மீண்டும் சமூகத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சங்கராச்சாரி ஆணையிட்டார்.
- (ஆதாரம்: பேரா. என்.ஆர்.பதக் - நீதிபதி எம்.ஜி.ரானடேயின் வாழ்க்கை வரலாறு)
இப்படிப்பட்ட கேவலமான செயல்களுக்குப் பரிகாரம் என்ற பெயர்; அதைச் செய்ய
ஆணையிடுபவர் கடவுளாக மதிக்கப்படும் சங்கராச்சாரி; அதை நிறைவேற்ற துணை
நிற்பவை சாஸ்திரங்கள்!
காட்டு மனிதர்களுக்கெல்லாம் கடவுள் தகுதி. கேட்டால் புண்ணிய பூமி,
உலகிற்கெல்லாம் உயர்ந்த தத்துவத்தைச் சொன்னது இந்துமதம் என்கிறான். எவ்வளவு
பெரிய அயோக்கியத்தனம்!
இப்படிப்பட்ட கொடுமைகளைக் கண்டு ஜோதிராவ் பூலே அவர்கள் கொதித்தார்.
விதவைகளின் நிலைகண்டு உருகினார். கட்டுப்பாடு என்ற பெயரில் கள்ள உறவில்
சீரழிவதைவிட, ஆண்களைப் போலவே பெண்களும் மறுமணம் செய்து கொள்வதே
நடைமுறைக்கும், இயற்கைக்கும் ஏற்றதாக இருக்க முடியும் என்று உறுதி கொண்டு,
விதவை மணத்தை தீவிரமாக ஆதரித்து அதை நடைமுறைப்படுத்தவும் முயற்சிகள்
மேற்கொண்டார்.
1860ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் பூனாவில் மனைவியை இழந்த ஒருவன் கணவனை
இழந்த ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்ள பூலே துணை நின்றார். 1864இல்
விஷ்ணு சாஸ்திரி பண்டிதர் அவர்கள் தன் வேலையிலிருந்து விலகி, முழுநேரப்
பணியாகக் கொண்டு விதவைத் திருமணத்தை நடைமுறைப்படுத்தினார்.
விதவைகளின் கள்ள உறவில் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும்
கொல்லப்பட்டன. இதற்கு மாற்று ஏற்பாடாக, அப்படிப்பட்ட குழந்தைகளை
வளர்ப்பதற்கென்று, இல்லங்களை பூலே ஏற்படுத்தினார். இச்செய்தியை துண்டு
அறிக்கைகள் மூலம் அறிமுகப்படுத்தினார்.
ஓ இளம் விதவைகளே! நீங்கள் கருவுற்றிருந்தால் யாருக்கும் தெரியாமல்
கமுக்கமாக (இரகசியமாக) இங்கு வந்து பிரசவம் பார்த்துக் கொள்ளுங்கள்!
நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை எடுத்துச்
செல்லலாம், விரும்பாவிட்டால் இவ்விடுதியிலே விட்டுச் செல்லலாம். உங்கள்
குழந்தைகளை இந்த விடுதியில் வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...
இச்சுவரொட்டிகள் நகரின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டு,
விளம்பரப்படுத்தப்பட்டது.
இதைக் கண்ட வைதீகப் பார்ப்பனர்கள் கடுமையாக ஆத்திரப்பட்டனர்.
மரப்பொந்தில் கொளுத்தச் சொல்லும் மடையர்களுக்கு, பூலேயின் நற்பணி எப்படி
பிடிக்கும்? காட்டுமிராண்டிகள் கடும் எதிர்ப்புக் காட்டினர். ஜோதிராவின்
பெயரைக் கேட்டாலே முகம் சுளித்தனர். ஆனால், இந்தக் காட்டுக்
கூச்சலுக்கெல்லாம் ஜோதிராவ் கலங்கவில்லை.
விதவைகளுக்கான விடுதியை விரிவுபடுத்தினார். இந்த அநாதை இல்லம்தான் இந்த
வகையில், இந்தியாவில் முதல் சேவை இல்லமாக அமைந்தது. ஆரியப் பார்ப்பனர்
அல்லாத ஜோதிராவால் நடத்தப்பட்ட இவ்விடுதியால் அதிகம் பயன்பெற்றவர்கள் கள்ள
உறவில் ஈடுபட்ட பார்ப்பன விதவைகளே ஆவர்! குழந்தைகள் கொல்லப்படுவதைத்
தவிர்க்கவும், விதவைகளைக் கொலைச் குற்றத்திலிருந்து காக்கவும் இவ்விடுதி
பெரிதும் பயன்பட்டது.
பள்ளிகளை நடத்தும்போது பார்ப்பனர்களின் துணையுடன் நடத்திய ஜோதிராவ்,
இவ்விடுதியை நடத்துகையில் அவர்களை கூட்டுச் சேர்க்கவில்லை. பார்ப்பன
கூட்டின் பாதிப்புகளை அனுபவப் பூர்வமாக அறிந்ததால், இந்த முறை தனித்தே
விடுதியை நடத்தினார். தந்தை பெரியார் அவர்கள் எச்சூழலிலும் ஆரிய
பார்ப்பனர்களை இணைத்து கொள்ளாது பணியாற்றியதன் உள்நோக்கம் இதுதான். ஊடுருவி
ஒழிப்பதுதானே பார்ப்பனத் தந்திரம். அதை பூலே உணர்ந்து நடந்தார். ஏராளமான
விதவைகள் இவ்விடுதியில் தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டனர்.
சமூகத் தொண்டாற்றிய பல மாமனிதர்கள் இதைப் பாராட்டினர்; ஆதரித்து நின்றனர்.
இந்நிலையில், ஜோதிராவின் தந்தை மரணப் படுக்கையில் இருந்தார். ஜோதிராவை
வீட்டை விட்டு விரட்டினாலும், அவரது உள்ளத்திலிருந்து விரட்ட முடியவில்லை.
ஆம் பாசத்தால் துடித்தார்.
ஜோதிராவிற்குக் குழந்தையில்லை என்பதால், இரண்டாம் திருமணம் செய்து
கொள்ளும்படி தந்தையார் மற்றவர்கள் மூலம் தொடர்ந்து வற்புறுத்தினார். ஆனால்,
ஜோதிராவ் பகுத்தறிவோடு சிந்தித்தார். குழந்தை பிறக்கவில்லையென்றால் கணவன்
இரண்டாம் திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. இது முட்டாள்தனம்.
குழந்தை பிறக்காமல் போவதற்குப் பெண் மட்டுமே காரணம் என்பது அறியாமை. ஆணும்
காரணமாக இருப்பதுண்டு. எனவே, தன்னிடம் குறையிருந்தால் இரண்டாம் மணத்தின்
மூலம் குழந்தை எப்படி பிறக்கும்? என்று கேட்டார்.
இரண்டாம் மணம் செய்து என் மனைவியை இழிவுபடுத்த நான் விரும்பவில்லை.
நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நன்றாகவே வாழ்கிறோம். எனவே,
இரண்டாம் திருமணம் எனக்கு வேண்டாம் என்று ஜோதிராவ் திட்டவட்டமாக மறுத்து
விட்டார்.
நோய்வாய்ப்பட்டிருந்த தந்தை இறந்து போனார். எந்த மூடச்சடங்குகளுமின்றி,
தன் பகுத்தறிவிற்கு உகந்த வகையில் அவரது உடல் அடக்கத்தை செய்து முடித்தார்.
இறந்தவர்களின் ஆன்ம திருப்திக்காக உணவு படைக்கும் செயலில் அவருக்கு
நம்பிக்கை இல்லை. மாறாக ஏழைகளுக்கு, ஊனமுற்றவர்களுக்கு உணவு அளித்தார்.
மாணவர்களுக்குப் பாடநூல்களை வழங்கினார். அநாதை இல்லக் குழந்தைகளை இவரது
மனைவி சாவித்திரி கருணையுடன் தாயாக இருந்து பாதுகாத்து வளர்த்தார்.
தன் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்து கொள்ள
ஆணுக்கு அனுமதி அளிக்கும் இச்சமுதாயம், இளம்வயதில் கணவனை இழந்தவள் காலம்
முழுவதும் காமதகனம் செய்து கொண்டு உணர்வொழித்து, மரக்கட்டையாய் கிடக்க
வேண்டும் என்பது கிறுக்குத் தனமான கொள்கை அல்லவா? அறிவுள்ள எவன் ஏற்பான்?
என்று ஜோதிராவ் வினா எழுப்பினார். விதவைகளின் கொடுமைக்கு ஒரு நிகழ்வையே
சுட்டிக் காட்டினார்.
ராவ் சாகேப் சதாசிவ புல்லல் கவுந்தே என்ற ஆரியப் பார்ப்பனர், தன்
வீட்டில் சமையல்காரியாக ஒரு விதவைப் பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார்.
பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். அவளிடம் சுகம் காண அந்தப் பார்ப்பான் பலமுறை
முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால், தொடர் முயற்சியாலும், அவளுக்கிருந்த
உணர்வுப் பசியாலும் அப்பெண் இவனிடம் உடலுறவுக் கொண்டாள். அதன் விளைவாய்
கருவுற்றாள். கருச்சிதைவு செய்ய நச்சு மருந்துகளைக் கொடுத்துச் சாப்பிடச்
சொன்னான். ஆனால் கருச்சிதைவு ஏற்படவில்லை. 9 மாதம் கழித்து காசிபாய் என்ற
அந்த விதவைப் பெண் அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தன்
அவமானத்தை மறைக்க, அக்குழந்தையைக் கத்தியால் குத்திக் கொன்று, கிணற்றில்
வீசினாள். இரண்டு நாள் கழித்து போலீசார் அவளைக் கைது செய்தனர். அவளுக்கு
கிடைத்தது ஆயுள் தண்டனை.
இதுதான் இந்துக் கலாச்சாரம் என்கிறான். இதைக் காக்க வேண்டும் என்று
தெய்வத்தின் குரல் (சங்கராச்சாரி குரல்) கூறுகிறது. இவர்கள்தான் நடமாடும்
தெய்வங்கள்.
ஆண் தவறு செய்கிறான். ஆனால், தண்டனை பெண்ணுக்கு, கணவன் இறந்தபின் மனைவி
மறுமணம் செய்யக்கூடாது என்ற கொள்கையின் முடைநாற்றம் கிணற்றில் வீசப்பட்ட
குழந்தையிலிருந்து வீசியது. இந்த நாற்றத்தை மாற்ற முயல்வோரை சாஸ்திர எதிரி
என்று கூறி சாகடிக்க முயற்சி செய்கின்றனர். இக்காலத்திலும் இதை ஏற்றுப்
போற்றுகிறான். அவனெல்லாம் இந்நாட்டில் மாமனிதன்!
ஆரிய மத நிறுவனம் செய்யும் இக்கொடுமையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
விதவைகள் மறுவாழ்வு பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். வயது முதிர்ந்த
ஆண் மறுமணம் செய்து கொள்ளும்போது, இளம் பெண் விதவை ஏன் செய்யக்கூடாது?
உணர்வைப் பொசுக்க முயற்சி செய்வது, வாழ்நாள் முழுக்க பாழ்நாளாய், மூலையில்
முடங்கி தவிக்கும் முனகல் நாளாய் ஆக்குவது அநியாயத்தின் உச்சம் அல்லவா?
என்று சீறினார் ஜோதிராவ்.
காசிபாய் என்ற அந்த விதவை 1873இல் மீண்டும் ஒரு குழந்தை பெற்றெடுத்தாள்.
அவளுக்கு சாவித்திரியே பிரசவம் பார்த்தார். ஜோதிராவும் சாவித்திரியும்
அக்குழந்தையை தங்கள் பிள்ளையாய் வளர்த்தனர்.
ஜோதிராவ் வற்புறுத்திய விதவை மறுமணம் செய்யும் பணியை விஷ்ணு சாஸ்திர
பண்டிதர் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, ஆர்வத்தோடும், அக்கறையோடும்
செய்தார். 1866ஆம்ஆண்டு ஜனவரி 28இல் விதவைகள் மறுமணத்திற்கென்றே ஓர்
நிறுவனத்தை அமைத்தார். அதன் கிளைகளை இரத்தினகிரி, ஆகமதாபாத், பூனா முதலிய
இடங்களில் அமைத்தார்.
விதவை மறுமணத்திற்கு வழி செய்தது போலவே, குழந்தை மணத்தைத் தடுக்க பூலே பெரும் முயற்சி மேற்கொண்டார்.
19 வயதுக்குக் குறைவாக ஆணுக்கும், 11 வயதுக்குக் குறைவாக பெண்ணுக்கும்
மணம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார். அப்படிச் செய்தால் தண்டனை
விதிக்க வேண்டும். அதில் கிடைக்கும் தண்டப் பணத்தை, கடைநிலை மக்களின்
கல்விப் பணிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கினார்.
தொழிலாளர் நலன் காத்த தூய தொண்டு:
அரசு கடக்வாசலா தடுப்பணை என்ற ஒரு பெரிய திட்டத்தைச் செயல்படுத்தியது.
இத்திட்டத்திற்குத் தேவையான கற்களை விற்பனை செய்ய ஓர் ஒப்பந்தம் செய்து
கொண்டார் ஜோதிராவ். இவரது உறவினர் ஞானபா கிருஷ்ணராவ் சகானி இவருக்குத்
துணையாக நின்றார். இந்த ஒப்பந்தப் பணியின் மூலம் தொழிலாளிகள், அதிகாரிகள்,
கடைநிலை ஊழியர்கள், பொறியாளர்கள் போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படவும் அதன்
வழி பல செய்திகளையும், அனுபவங்களையும் பெறவும் இவருக்கு வாய்ப்பு
ஏற்பட்டது.
தொழிலாளர்களின் நலனில் இவருக்கு இயல்பாகவே அக்கறை இருந்ததால், இயல்பாகவே
இவர் நேர்மையாளராக இருந்ததால், தொழிலாளர்களின் நலனில் அதிகம் கவனம்
செலுத்தினார். தொழிலாளர்கள் மத்தியில் அவர்களின் கடமைகள் பற்றியும்,
உரிமைகள் பற்றியும், இந்துமதம் அவர்கள் மீது சுமத்தியுள்ள அடிமைத்தனம்
பற்றியும், அதன் மனித எதிர் கொள்கை பற்றியும், அதிலிருந்து மீள என்ன வழிகள்
என்பது பற்றியும் அடிக்கடி விளக்கவுரையாற்றினார். தொழிலாளர்களை
ஒருங்கிணைத்து ஓரணியாக்கினார். அதன் மூலம் அவர்களின் உரிமைகளைப் பெற்று
அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க முயற்சி மேற்கொண்டார். குழந்தைகளின் கல்வி
மிகவும் கட்டாயம். பிள்ளைகள் படித்தால்தான், அடிமைத்தளையிலிருந்து மீண்டு
உயர்நிலை எட்ட முடியும் என்பனவற்றை விளக்கினார்.
தொழிலாளர்களின் வருகைப் பதிவேட்டில் தவறான பதிவுகளை மேற்கொண்டு,
இடைத்தரகர்கள் கொள்ளையடிப்பதைத் தடுத்தார். பெண் தொழிலாளர்களைத் தங்கள்
வீட்டு வேலைகளுக்கு உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதைக் கண்டித்தார்.
ஏரவுடா பால அமைப்புப் பணிக்குச் சுண்ணாம்பு வழங்கும் ஒப்பந்தத்தை
ஜோதிராவ் செய்து கொண்டார். ஒப்பந்தப்பணி, தொழிலாளர் நலப்பணி இவைகளுக்கு
இடையே, இரவு வேளையில் நூல்களை படித்தார். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை
தெளிவாக விளக்கிய துக்கராம் பட்டியா பத்வல் என்பவர் எழுதிய ஜாதி பத்
விவேக்சர் (ஜாதி நிறுவனம் மீதான பிரதிபலிப்புகள்) என்ற புத்தகத்தின்
இரண்டாம் பதிப்பை வெளியிட இசைந்தார். புத்தக ஆசிரியரான துக்கராம் பட்டியா
ஜோதிராவின் நண்பர். இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை யாரும் வெளியிட முன்
வராததால், ஜோதிராவே வெளியிட்டார். ஜோதிராவின் எல்லாச் செயல்களுக்கும்
பின்னால் ஒரு சமூகப் புரட்சியிருந்தது. வைதீகச் சார்புடைய மனித எதிர்
சிந்தனைகளையும், பிற்போக்காளர்களின் செயல்பாடுகளையும், ஜாதிய அடக்கு
முறைகளையும் எதிர்த்துப் போரிட்டதோடு, சமத்துவம், விடுதலை, பகுத்தறிவு
பெற்ற ஒரு சமூக அமைப்பை அமைப்பதே அவரது அசைவுகள் அனைத்திலும் காணப்பட்டது.
1968இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தன் சொந்தத் தண்ணீர் தொட்டியைத்
திறந்து விட்டார். இதனால் ஆரிய பார்ப்பனர்கள் ஆத்திரம் அடைந்தனர். பலர்
வாய்ப்பேச்சிலும், அறிக்கையிலும் புரட்சி செய்யும் நிலையில் ஜோதிராவ் தன்
புரட்சிகள் அனைத்தையும் செயலில் காட்டினார். அதுவும் தானே முன்னின்று
செய்து காட்டினார். இந்த வகையில் தந்தை பெரியாரும் அவரும் ஒரே வகையில்
நின்றனர். தந்தை பெரியாரின் முன்னோடியாகவும் ஜோதிராவ் பூலே நின்றார்.
நாட்டின் முதுகெலும்பாக நிற்கும் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக
இருப்பதை எண்ணி வருந்தினார். அவர்கள் கடன் சுமையிலும், வறுமையிலும்,
அறியாமையிலும் உழல்வதைக் கண்ட ஜோதிராவ் அதற்குத் தீர்வு காண முயற்சிகள்
மேற்கொண்டார்.
மனித நேயமற்ற ஆரியப் பார்ப்பனர்களின் கொடுங்கோன்மையிலிருந்து மக்களைக்
காக்கும்படியும், லஞ்ச ஊழல்களை ஒழிக்கும் படியும் விக்டோரியா மகாராணியிடம்
வேண்டுகோள் வைத்தார்.
ஆசிரியர்கள், நீதிபதிகள், எழுத்தர்கள் ஆகிய பதவிகளுக்கு ஆரியப்
பார்ப்பனர்களே நியமிக்கப்படுகின்றனர். எனவே, இதை மாற்றி மற்ற ஜாதியினரும்
பணி அமர்த்தப்பட வேண்டும் என்றும், அதன் மூலமே சமூகக் கொடுமைகளுக்குத்
தீர்வு காண முடியும் என்றும் ஜோதிராவ் வலியுறுத்தினார். அதற்கு மற்ற
ஜாதியினருக்குக் கல்வியைப் பெருமளவிற்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார். இதைத் தொழிலாளர்கள் நன்கு உணரும் படி அவர்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தினார்.
புரோகிதர்களுக்கு எதிராகப் போர்க்கொடி
சூத்திரர்களை ஈவு இரக்கமின்றி சுரண்டி வந்த ஆரிய பார்ப்பனர்கள் மீது
ஜோதிராவ் தொடுத்த தாக்குதல்கள் மிகக் கடுமையானவை; மிகவும் துணிவும்,
நேர்மையும் மிக்கவை. அவரது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சமுதாயப்
பிரச்சினைகளின், தேவைகளின், நியாயங்களின் உள்ளடக்கம் அதிகம் இருந்தது
நடப்பு நிலைகளையும், அதன் கேடுகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும்
அதற்குச் செய்ய வேண்டிய உடனடி நடவடிக்கைகள் பற்றியும் அவர் சொன்னார்.
எழுதினார், செய்தார்!
மூடநம்பிக்கை கொண்ட ஏதும் அறியா சூத்திரர்களிடம் ஆரிய புரோகிதர்கள்
அடித்த கொள்ளையை, பொருளாதார சுரண்டலை, புரோகிதர் சூழ்ச்சி அம்பலமாகிறது
என்ற தலைப்பில் கவிதைகள் எழுதி புத்தகமாக வெளியிட்டார். இன்றைக்குக்கூட
ஆரிய பார்ப்பனச் சுரண்டல் இருக்கும்போது அன்றைக்கு எந்த அளவிற்கு
இருந்திருக்கும் என்பதை இன்றைக்குள்ளவர்கள் உணர்ந்து தெளிதல் வேண்டும்.
ஜோதிராவ் கூறுகிறார்: ஓர் ஆரியப் பார்ப்பனர் சூத்திரனுக்குப் பிச்சையிட
மாட்டான். ஆனால், சூத்திரனிடம் பிச்சை பெற்றுக் கொள்வான். இதை மட்டும் அவன்
மதம் எப்படி அனுமதிக்கிறது?
ஒரு விவசாயியின் மனைவிக்குக் குழந்தை பிறந்தால், அதற்காக சடங்கு செய்ய
வேண்டும் என விவசாயியை அவன் (பார்ப்பான்) அச்சுறுத்துவான் அல்லது பிறக்க
போகும் குழந்தை பாதிப்பில்லாமல் பிறக்கச் சடங்கு செய்ய வேண்டும் என
அச்சுறுத்துவான். அதற்காக நீண்ட நேரம் கடவுளிடம் பிரார்த்தனைச் செய்ய
வேண்டும் என்பான். பூசைச் செய்ய வேண்டும் என்பான். பிள்ளையைக் காப்பது அவன்
நோக்கம் அல்ல; பிடுங்கித்தின்ன வேண்டும் என்பதே அவன் நோக்கம்.
திருமணச் சடங்குகளில் ஆரியப் பார்ப்பானே முன்னுரிமை பெறுகிறான். எஜமானன்
போல நடந்து கொள்கிறான். ஜோதிடம் சொல்லி ஏமாற்றுகிறான். இதனால் ஏற்படும்
பாதிப்புகள் ஏராளம். கிரகங்களைச் சாந்தப்படுத்த வேண்டும், பரிகாரம் செய்ய
வேண்டும் என்று பலபடச் சொல்லி பாமரர்களிடம் பணம் பறிக்கின்றனர்.
குழந்தைத் திருமணத்தை நடத்துகிறான். திருமணமான பின் அப்பெண்
பருவமடைந்தால், அதற்கு ஒரு சடங்கு செய்கிறான். அதற்கு விருந்து, படையல்
தட்சணை என்று ஏராளமான செலவு.
புது வீடு கட்டினால் அதில் புகுவதற்குச் சடங்கு. அதன் மூலம் ஆரியப்
பார்ப்பான் வருவாய் ஈட்டுகிறான். அவன் சடங்கு முடிக்கின்றவரை, அந்த
வீட்டைக் கட்டியவனும், அதன் சொந்தக்காரனும் வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து
வேடிக்கை பார்க்க வேண்டும். கடவுளோட தொடர்பு கொண்டு நன்மை
ஏற்படுத்துவதாகக் கதை அளக்கிறான்.
அறிவாளியான ஆரியப் பார்ப்பான் சூத்திர விவசாயி வீட்டில் அவன்
அறியாமையைப் பயன்படுத்தி அச்சுறுத்தி பல வகையில் பணம் பறிக்கிறான்.
அரசுக்கும் விவசாயிக்கும் இடையில் நின்று வரிவசூல் செய்வதால்
கொள்ளையடிக்கிறான். விவசாயியிடம் சுரண்டுவது வெளியில் தெரியாமல்,
அரசாங்கத்திடம் நல்ல பெயர் எடுத்துக் கொள்கிறான். வரி தராத ஏழை மீது
வழக்குத் தொடுப்பான். அவர்கள் கையூட்டுக் கொடுத்தால் பெற்றுக் கொண்டு
வழக்கிலிருந்து விடுவிப்பான்... என்று ஆரிய சுரண்டல்கள் பற்றி
அடுக்கடுக்காய் சொல்லிக் கொண்டே செல்லும் ஜோதிராவ், அவர்களின் சுரண்டலுக்கு
ஒரு கதையும் சொல்லியுள்ளார்.
ஏழை விவசாயி ஒருவன் இறக்கும் தருவாயில் இருக்கும் செய்தி, ஒரு ஆரியப்
புரோகிதனுக்குக் கிடைக்கிறது. உடனே அந்தப் புரோகிதன் வேதப் புத்தகத்தோடு
விவசாயியின் வீட்டிற்குச் சென்று, அவன் உயிரைக் காக்கப் போவதாகச் சொல்லி
வேதம் ஓதத் தொடங்கிவிட்டான். உன் கணவனின் உயிரைக் காப்பாற்றப் போகிறேன்.
அதற்குக் காணிக்கையாக ஒரு பசுமாட்டைப் பெற்றுக் கொள்கிறான். அக்காணிக்கை
இறைவனுக்குப் போகும் என்றான். எல்லாம் முடியும்போது விவசாயி இறந்து போவான்.
கடவுள் பிரார்த்தனையை ஏற்காது போனதேன்? தட்சணை போனது எங்கே?
சிலநாள் போனது அந்த விவசாயியின் மகனைப் பிடித்து சடங்கு என்ற பெயரில்
பிழிந்தெடுப்பான். விருந்து வேண்டும் என்பான். தனக்கு பசுமாடு, செருப்பு,
பட்டுத்துணி கேட்பான். விவசாயி மகனே கடனில் சிக்குவான். அவனிடம் பெற்றதை
அவனுக்கே கடனாகக் கொடுத்து அவனிடம் வட்டி வாங்குவான் ஆரியப் பார்ப்பான்.
பிறகு கடனைத் திருப்பித் தர இயலாத விவசாயிடம், பத்திரத்தில் கையொப்பம்
பெற்று அவன் நிலத்தைப் பெற்றுக் கொள்வான். விவசாயியின் குடும்பம்
நடுத்தெருவில் நாதி அற்று நிற்கும். வாலிழந்த பல்லியைப் போல் அந்த விதவைப்
பெண் வீட்டிற்குள் துடிப்பாள்... என்று கதையை முடிக்கிறார் ஜோதிராவ்.
ஆரியப் பார்ப்பனர்கள் பூணூல் அணிந்திருப்பர். ஆனால், குணத்தை மாற்றிக்
கொள்ள மாட்டார்கள். அடிக்கடி குளிப்பார்கள்; பிரார்த்தனை செய்வார்கள்;
நெற்றியில் பூசிக் கொள்வார்கள். ஒரு சுத்தமான சூத்திரனின் தலைமுடியைத்
தொடுவதைக்கூட தீட்டாகக் கருதுவார்கள். வேதம் ஓதுவதைக் கேட்பதற்குக் கூட
சூத்திரர்களுக்குத் தடை. ஆனால், அய்ரோப்பியர்களுக்கு வேதம் ஓதிக்
காட்டுவார்கள்! தங்களை இப்பூவுலகின் கடவுளாகக் கூறிக் கொள்வார்கள். ஆனால்,
விபசாரியின் காலடியில் வீழ்ந்து கிடப்பார்கள்.
தங்கள் கால்களைக் கழுவிய நீரைப் புனிதநீர் என்று சொல்லி சூத்திரனுக்குக்
குடிக்கக் கொடுப்பார்கள். ஆனால், இவர்களோ (ஆரியப் பார்ப்பனர்களோ) மிக மிக
தாழ்த்தப்பட்ட அல்லது மாற்று மதத்தைச் சேர்ந்த விபசாரிகளை முத்தமிட்டு
முடங்கிக் கிடப்பார்கள். கல்வி பெறாத சூத்திரன், அறிவின்மையால், பார்ப்பான்
காலை நக்கி நன்மை பெற முயல்கின்றான்... என்று ஆரிய ஆதிக்கத்தையும்
சூத்திரர் இழிவையும் சூடாகச் சுட்டிக்காட்டிய ஜோதிராவ், இந்நிலை மாற
வேண்டும் என்பதற்காக இடைவிடாது போராடினார்.
அப்படிப்பட்டவர்களின் போராட்டத்தின் விளைவுதான் இன்றைக்கு இழிவு ஒழிந்த,
ஒப்புமை பெற்ற, உரிமை கிடைத்தவர்களாய் நாம் வாழ முடிகிறது. இன்றைய
நடப்புகளை வைத்து பார்க்கின்றவர்கள் பழைய கொடுமைகளை உணர இயலாது என்பது
உண்மைதான் என்றாலும், வரலாற்றுக் கொடுமைகளைப் படித்து அறிவோமானால் அன்றைய
நிலையும் அதற்கு ஜோதிராவ் போன்றவர்கள் கொடுத்த விலையும் நன்றாக விளங்கும்.
இன்றைக்குக்கூட ஏமாந்தோம் என்றால் ஆரிய ஆதிக்கத்திற்கு அடிமையாகக்கூடிய
ஆபத்து உண்டு என்பதால்தான், இன்றைய தலைமுறைக்கும் இந்த வரலாறுகளைச் சொல்லி
எச்சரிக்க வேண்டி உள்ளது. எனவே, இப்போதெல்லாம் ஆரியப் பார்ப்பனர்களின்
ஆதிக்கம் கொடுமை இல்லை என்று எண்ணுகின்றவர்கள், அது நீறுபூத்த நெருப்பாகக்
கனன்று கொண்டுதானிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். மீண்டும் அந்த
ஆதிக்கம் தலைதூக்காமல் தடுக்க, இப்படிப்பட்ட சமுதாயப் போராளிகளின்
போராட்டங்களை அனைவரும் அறிதல் வேண்டும். அப்போதுதான் ஏமாறாமல்
எச்சரிக்கையாய் இருக்க முடியும்.
நீதிபதி எம்.ஜி. ரானடேயும் ஜோதிராவ் பூலேயும்
ஜோதிராவ் காலத்தில், அவருக்குப் பொருத்தமான கருத்துடைய புரட்சியாளராக
விளங்கியவர் எம்.ஜி.ரானடேயாவார். மற்றவர்களெல்லாம் சீர்திருத்தம் என்ற
பெயரில் ஆன்மீகச் சிந்தனைகளுக்கு முதன்மையளித்து வந்த நேரத்தில், மக்கள்
நலனுக்கும், சமத்துவத்திற்கும் போராடியவர்கள் இந்த இருவரும் ஆவர்.
சமூகச் சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றை
நிலைநிறுத்தவும், சமூக அநீதிகளைக் களையவும் ஜோதிராவ் தொடங்கிய புரட்சியை,
இயக்கத்தை ரானடே முழுமையாக ஏற்றுக் கொண்டார்.
மக்களின் எழுச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அன்றைக்கு ரானடே கூறிய
கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்துவனவாக உள்ளன என்பது வியப்பிற்குரிய
ஒன்றாகும்.
ஆம். அவர் கூறுவதைப் பாருங்கள்:
அரசியல் உரிமைகள் என்ற படிக்கட்டில் மிகத் தாழ்ந்த மட்டத்தில் நின்று
கொண்டிருக்கும் ஒருவனால், ஒரு நல்ல சமூக அமைப்பை உருவாக்க முடியாது. அல்லது
பகுத்தறிவு, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அமையாத ஒரு சமூக அமைப்பில்
ஒருவன் அரசியல் உரிமைகளையும், சலுகைகளையும் நுகர முடியாது. அரைகுறையான சமூக
அமைப்புகளை வைத்துக் கொண்டு, ஒரு நல்ல பொருளாதார அமைப்பை உருவாக்க
முடியாது. ஒரு சமூகத்தின் மத லட்சியங்கள் தாழ்வானவையாகவும், அடிமைத்தனமான
நிலையிலும் இருக்கும்போது, அது தன் சமூகப் பொருளாதார அல்லது அரசியல்
துறைகளில் வெற்றி காணமுடியாது... என்றார் ரானடே.
- (ஆதாரம்: நீதிபதி ரானடேயின் எழுத்துக்கள் பக்கம் 231-232)
ரானடேயின் எதிர்பார்ப்புக்கு ஏற்பச் செயல்பட்டார் ஜோதிராவ். எனவேதான்,
ஜோதிராவின் செயல்பாடுகளை ரானடே ஏற்றுச் செயல்பட்டார். ஆனால் இதே ரானடே
கொள்கைச் சோதனையில் பிற்காலத்தில் சோரம் போனார்.
ஜோதிராவின் செயல்பாடுகள் அனைத்தும் சமூக புரட்சிக்கான அடித்தளத்தை
அமைக்கும் இலக்குடைய தாகவே இருந்தது. அறியாமை, வெறுப்புணர்ச்சி, கல்லாமை,
ஜாதி உணர்வுகள் ஆகியவற்றிலிருந்தும், ஆரிய பார்ப்பன நுகத்தடியிலிருந்தும்
தாழ்த்தப்பட்ட மக்களை விடுவிக்கும் நோக்கோடும் ஜோதிராவ் நூல்களும்,
துண்டறிக்கைகளும் இருந்தன. தனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தபோதும், மூட
நம்பிக்கைகளை ஒழிப்பதிலும், சாஸ்திர சம்பிரதாயங்களைச் சாடுவதிலும், ஜாதிகளை
ஒழிப்பதிலும் அவர் முனைப்போடு நின்றார். ஆரியப் பார்ப்பன சாஸ்திரங்கள்
தன்மீது சுமத்திய விலங்குகளை தான் உடைத்துவிட்டதாகவும்,
அடிமைத்தளையிலிருந்து தான் விடுபட்டு விட்டதாகவும் அறிவித்தார்.
பிற்காலத்தில் வாழ்ந்த குன்றக்குடி அடிகளார், தேவநேய பாவாணர்,
பெருஞ்சித்திரனார் போன்றோரும், தற்காலத்தில் வாழும் பிரபஞ்சன் போன்றோரும்
இறை நம்பிக்கையிருந்த போதிலும், இன உணர்வு, மூடநம்பிக்கை, ஆரியப் பார்ப்பன
ஆதிக்க ஒழிப்பு இவற்றில் முதலில் நின்றதைப் போல, நிற்பதைப் போலத்தான்
ஜோதிராவும் சமூகப் புரட்சிகளைச் செய்தார்.
ஆரிய சாஸ்திரக் கொடுமைகளை அம்பலப்படுத்துதல்
அனைத்து ஆரியப் பார்ப்பன சாஸ்திரங்களையும் கடுமையாகச் சாடினார். தன்
நாட்டில் பிறந்தவனாயினும், தன்னை இழிவுபடுத்துகின்றவனை ஏற்க முடியாது
என்றும், தன்னைச் சமமாக மதிக்கும் அந்நியரைக்கூட நான் சகோதரனாக ஏற்பேன்
என்றும் ஜோதிராவ் அறிவித்தார். இவை அவரிடம் இருந்த கொள்கைத் தெளிவைச்
சரியாகத் தெரிவித்தன.
ஜோதிராவின் புரட்சிச் சிந்தனைகளை வெளியிட எந்தப் பத்திரிகையும்
முன்வராதபோது, கோலாப்பூரிலிருந்து வெளிவந்த சுபவர்த்தமானா என்ற கிறித்துவ
பத்திரிகை இவரது கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டது.
இந்தியப் பேரரசில் ஆரியப் பார்ப்பனப் போர்வையின் கீழ் அடிமைத்தனம் என்ற
தமது நூலில் அவர் பல அறிக்கைகளை எழுதியிருந்தார். இந்நூல் 1873 ஜூனில்
வெளியிடப்பட்டது.
விடுதலை பெறாத ஒவ்வொரு மனிதனுக்கும் விடுதலை அளிப்பதே மனிதனாகப் பிறந்த
ஒவ்வொருவரின் கடமை அவ்வாறு மீட்டளிப்பதே மிகப் பெரிய வெற்றியாகும்!
தன்மானத்தை விரும்பும் எவரும் இதைச் செய்யவே விரும்புவர். ஒவ்வொருவரின்
மகிழ்ச்சிக்கும் அவர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளே முதன்மையானவை. தங்கள்
உயிரைக் கொடுத்தாவது மற்றவர்களுக்கு உரிமையை மீட்டுத் தர உழைப்பவர்களே
உண்மையான மக்கள் தொண்டர்கள்... என்றார் ஜோதிராவ் பூலே.
ஆரியப் பார்ப்பன சாஸ்திரங்களில் ஆரியர் அல்லாதாருக்கு இழைக்கப்பட்டுள்ள
இழிவுகளையும் கொடுமைகளையும், அதே நேரத்தில் ஆரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள
சலுகைகளையும், மேன்மைகளையும் தெள்ளத் தெளிவாக மக்களுக்கு விளக்கினார்.
சூத்திரன், ஒழுக்கங்கெட்ட பார்ப்பன பெண்ணுடன் தொடர்பு கொண்டால் அவனுக்கு
மரண தண்டனை. ஆனால், பார்ப்பான் சூத்திரன் மனைவியுடன் உடலுறவு கொண்டால்
அவனுக்கு எந்த தண்டனையும் இல்லை.
ஆரியர் அல்லாதார் கொலை செய்தால் மரண தண்டனை. ஆனால் ஆரியர் கொலை செய்தால் அவன் தலைமயிரில் ஒன்றைச் சிரைத்தால் போதும்.
என்பன போன்ற ஆரிய சாஸ்திரங்களின் அநீதிகளை, அயோக்கியத்தனங்களைப் பிட்டுப் பிட்டு வைத்துப் பிரச்சாரம் செய்தார்.
இடஒதுக்கீட்டு ஏற்பாடு
அரசு நிர்வாகங்களில் ஆரியப் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கத்தை
அகற்றுவதற்கு மற்ற ஜாதிகளிலிருந்து, அரசுப் பணிகளுக்குப் பணியாளர்களைச்
சேர்க்க வேண்டும் என்று அரசாங்கத்தை ஜோதிராவ் வற்புறுத்தினார். இன்றைய இட
ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அன்றைக்கே அவர் குரல் கொடுத்தார் என்பதுதான்
வியப்பளிக்கும் செய்தியாகும்.
ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியில்
சேர்வதை இவர் எதிர்க்கவில்லை. அந்தந்த ஜாதி மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப
பங்கு வேண்டும் என்றார். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு உரிய
பயிற்சி அளித்து அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றார்.
1881-82ஆம் ஆண்டு வரை மகாராட்டிரத்தில் எந்தவொரு பள்ளியிலும் அல்லது
கல்லூரியிலும் ஒரு ஆதிசூத்திர (ஆதிதிராவிட) மாணவன் கூட சேரவில்லையென்ற
சமுதாயக் கொடு நிலையே ஜோதிராவின் கடுமையான போராட்டத்திற்குக் காரணமாயிற்று.
ஆரியப் பார்ப்பன ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்று
இவர் வற்புறுத்தினார். அப்போதுதான் மற்ற சமூகத்தினர், குறிப்பாக
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் படிக்க இயலும். காரணம்
பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் சேர அனுமதிக்க மாட்டார்கள் என்று
உளவியல் ரீதியில் உரைத்தார். ஆங்கிலேயர் ஆட்சி இந்நாட்டில் இருக்கும்
காலத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி பயின்று விட வேண்டும் என்றார்.
காரணம் விடுதலைக்குப்பின் ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் நிலவி கல்வி
மறுக்கப்படலாம் என்று அஞ்சினார்.
இந்த நாட்டின் உயிரும் உடலும் சூத்திரர்களே. அனைத்துமே அவர்களுடையதே.
ஆரியப் பார்ப்பனர்களுக்கு உரியதல்ல. எனவே, சூத்திரர்களுக்குள்ள அனைத்து வகை
இடர்ப்பாடுகளையும் களைந்து அவர்களைக் கரையேற்ற வேண்டும் என்றார்.
வரலாற்று அறிவுநுட்பம்
ஜோதிராவ் ஓர் ஆய்வாளரோ, அல்லது மொழியறிஞரோ அல்லர். என்றாலும் அவர்
கூறியிருந்த கருத்துகள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஏற்புடையதாக இருந்தன.
சூத்திரர்கள் உண்மையில் சத்திரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜோதிராவ்
கூறியதை அம்பேத்கர் அவர்கள் ஏற்றுக் கொண்டு அதை உறுதி செய்தார்.
இந்தியாவின் பழைய வரலாறு என்பது, ஆரியப் பார்ப்பனர்களுக்கும், ஆரியப்
பார்ப்பனர் அல்லாதாருக்கும் (திராவிடருக்கும்) இடையிலான போராட்டத்தைத்
தவிரவேறு இல்லை என்று ஜோதிராவ் கூறியதை வரலாற்று அறிஞர்கள் உறுதி
செய்கின்றனர்.
சித்பவன் பார்ப்பனர்கள் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை
ஓரத்திலிருந்தோ அல்லது ஈரானிலிருந்தோ அல்லது எகிப்திலிருந்தோ அல்லது
பாலஸ்தீனத்திலிருந்தோ வந்திருக்க வேண்டும் என்று ஜோதிராவ் கூறினார். இதை
எந்த வரலாற்று ஆய்வாளராலும் மறுக்க இயலவில்லை. மாறாக, வரலாற்று அறிஞர்கள்
இவர் கருத்தை உறுதி செய்துள்ளனர்.
வில்லியம் டெய்லர் என்பவர் ஜோதிராவின் கருத்தையே உறுதி செய்தார். எனவே,
எதையும் கூர்ந்து நோக்கி உண்மை காணும் ஆற்றல் இவருக்கு இருந்ததை இவை உறுதி
செய்கின்றன.
உண்மை நாடுவோர் சங்கம்
தன்னுடைய இத்தனை போராட்டங்களையும், எதிர்ப்புகளையும், முயற்சிகளையும்
ஓர் அமைப்பு ரீதியாகச் செயற்படுத்தினால் தான் ஆரிய ஆதிக்கத்தை வீழ்த்த
முடியும் என்ற முடிவு செய்த ஜோதிராவ், அத்தகு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த
முனைந்தார்.
1873ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் தன் ஆதரவாளர்கள் அனைவரையும்
பூனாவிற்கு அழைத்தார். மகாராட்டிரத்தின் முதன்மைப் பகுதிகளிலிருந்து அறுபது
பேர் கூடினர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஜோதிராவ் சத்திய சோதக்
சமாஜ் (உண்மை நாடுவோர் சங்கம்) என்ற அமைப்பின் மூலம் தங்களது செயல்
திட்டங்களை இனி செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதில் குறிப்பிடத்தக்க செய்தி ஒன்றும் உண்டு. இச்சங்கத்தை
உருவாக்குவதில் மூன்று பார்ப்பன நண்பர்கள் (1.வினாயக் பாபுஜி பண்டார்கர், 2
வினாயக் பாபுஜி டெங்கில், 3. சீத்தாராம் சக்காராம் டாடர்) உதவியாக
நின்றனர்.
தாய்மொழி வழிபாடு
கடவுளை அவரவர் மொழியில் வேண்டலாம் என்று ஜோதிராவ் கூறினார். இதற்கு
எதிர்ப்புத் தெரிவித்த ஆரியப் பார்ப்பனர்கள் வேறு மொழியில் வேண்டினால் அது
கடவுளைச் சென்றடையாது என்றனர். ஆனால் ஜோதிராவோ, அவரவர் மொழியில் வேண்டுதல்
நடத்தினால் அது கடவுளைக் கட்டாயம் சென்று சேரும். கடவுள் மனித அறிவை
அறிவார். எந்த மனிதனின் வேண்டுகோளையும் புரிந்து கொள்பவர்தானே கடவுளாக
இருக்க முடியும்? இலத்தின், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில்
வேண்டுகின்றவர்களின் வேண்டுகோள் கடவுளை அடைகிறதல்லவா? அப்படியிருக்க
தாய்மொழியில் வேண்டல் கடவுளை எப்படி அடையாமல் போகும்? என்றார்.
உண்மை நாடுவோர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டாம் என்று ஆரிய
பார்ப்பனர்கள் மக்களை தடுத்தனர். அவ்வாறு சேருவோரைத் தங்கள் செல்வாக்கைப்
பயன்படுத்தி பதவி நீக்கம் செய்தனர். பலரை இடம் மாற்றினர்.
சுயமரியாதைத் திருமணம்
ஜோதிராவின் கடையில் பணியாற்றிய அவரது உறவினருக்கு திருமணம் உறுதி
செய்யப்பட்டது. உண்மை நாடுவோர் சங்கவிதிமுறைப்படி திருமணம் நடத்த முடிவு
செய்தார். வைதீக மந்திரம், ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் இல்லா திருமணமாக அதை
நடத்த ஏற்பாடு செய்தார். இத்திருமணம் பற்றிய செய்தி பல கிராமங்களுக்கும்
பரவியது. ஆரியப் பார்ப்பனர்கள் ஆத்திரத்துடன் எதிர்த்தனர். இது சமூக
அவமதிப்பாகும். இதனால் கேடு உண்டாகும். கடவுளுக்கு அடுக்காது என்று
பொதுமக்களைத் தூண்டிவிட்டதோடு, பெண்ணின் தந்தையையும் அச்சுறுத்தி
ஓடத்தூண்டினர். ஆனால் மணப்பெண்ணின் தாயார், சாவித்திரி பூலேயின் தோழி
என்பதால் உறுதியுடன் இருந்தார். 1873 டிசம்பர் 5ஆம் நாள் அத்திருமணம்
நடந்தேறியது. மணமக்கள் ஜோதிராவின் உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர்.
வந்திருந்தோர் மணமக்களை வாழ்த்தினர். ஆரியப் பார்ப்பனப் புரோகிதர்
ஒருவர்கூட இல்லாமல் இத்திருமணம் நடந்தேறியது வரலாற்றில் முதன்மையான
இடத்தைப் பெற்றது.
ஆரியப் பார்ப்பனப் புரோகிதர் இன்றி ஒரு இந்துத் திருமணம் என்ற தலைப்பில்
பத்திரிகைகள் இத்திருமணச் செய்தியை வெளியிட்டிருந்தன. இச்செய்தி எல்லா
மாவட்டங்களுக்கும் பரவ, ஆரியப் பார்ப்பனர்கள் ஆத்திரமும், அச்சமும்
அடைந்தனர். தங்கள் ஆதிக்கம் வெகுசீக்கிரத்தில் வீழ்ந்து விடுமோ என்று
கலங்கினர். ஆனால் ஆரியர் அல்லாதாருக்கு இத்திருமணம் ஒரு புதிய உற்சாகத்தை
அளித்தது.
உண்மை நாடுவோர் சங்கத்தின் கிளைகள் பல இடங்களிலும் அமைக்கப்பட்டன.
பம்பாயில் தொடங்கப்பட்ட சங்கத்தின் தொடக்க விழாவிற்கு ஜோதிராவே சென்றார்.
செல்வாக்கும், உயர்படிப்பும் உள்ள உயர்ந்த மனிதர்கள் பலர் இச்சங்கத்தில்
உறுப்பினர் ஆயினர்.
ரானடேயுடன் எதிர்ப்பு
தொடக்கத்தில் தன் கொள்கையில் ஒத்து நின்ற ரானடே, நாள் செல்லச் செல்ல கோழையாகிப் போனதால், ஜோதிராவ் அவர்மீது நம்பிக்கையிழந்தார்.
னடேயுடன் எதிர்ப்புஆனால் ரானடே, தன் தந்தை வருத்தப்படுவார். பூனேயில்
உள்ள பார்ப்பனர்கள் தன்னை ஜாதியிலிருந்து விலக்கி விடுவர். என்று பதில்
கூறினார்.
உடனே ஒளிவு மறைவு இன்றி பேசும் இயல்புடைய ஜோதிராவ், இனிமேல் நீங்கள்
சமூகச் சீர்திருத்தவாதி என்று நடிக்க வேண்டாம். உங்கள் வேடம் இனி எடுபடாது!
என்றார் கோபத்தோடு.
ஆரியப் பார்ப்பனப் புரட்சி என்பதன் போலித்தனம். ரானடே வழியில் வெட்ட வெளிச்சமானது.
அது மட்டுமல்ல, 1873இல் அக்டோபர் மாதம் எம்.ஜி.ரானடேயின் மனைவி இறந்து
போனார். 32 வயதான ரானடே, 16 வயது சிறுமியை இரண்டாம் திருமணம் செய்து
கொண்டார். அரைகுறையாக அவரை நம்பியவர்களும் அறவே வெறுத்தனர். ரானடேயின்
சாயம் வெளுத்தது.
இன்னொரு சீர்த்திருத்தவாதியான லோகித்தவாடி கோபால்ராவ் தேஷ்முக்
உயர்படிப்பிற்காக தன் மகளை இங்கிலாந்துக்கு அனுப்பியதற்கு ஒரு பரிகாரச்
சடங்கு நடத்தினார். மேலும், தனக்கு இங்கிலாந்து செல்ல (நீதிக்குழுவின்
சார்பில் செல்ல) வாய்ப்புக் கிடைத்த போது, சாஸ்திர விரோதம், தன்னை
ஜாதிவிலக்குச் செய்து விடுவர் என்று அயல்நாடு செல்ல மறுத்தார். ஆரியப்
பார்ப்பன புரட்சியாளர்கள் வெறும் புஸ்வாணங்கள் என்பது பொறித்தெறிக்கப்
பளிச்சிட்டது.
சிப்ளங்கர் எதிர்ப்பு
எழுத்தாற்றலும், ஏளனமாக எதிரியைக் குத்தக்கூடிய எழுத்து நுட்பமும், மணலைக் கயிறாக திரிக்கும் மகா திறனும் கொண்டவர் சிப்ளங்கர்.
தமிழகத்து கண்ணதாசன் போல் மராட்டியத்தில் சிப்ளங்கர், பழைய, ஒவ்வாத
நடைமுறைக்கெல்லாம், மயக்குகின்ற புது விளக்கம் அளித்து, முடைநாற்றம் எடுத்த
சாஸ்திரக் குப்பைகளுக்கெல்லாம் நறுமணம் ஊட்ட முனைந்தார்.
இவரது எழுத்துக்கள் உண்மைக்கும், நடப்புக்கும், நீதிக்கும் சற்றும்
தொடர்பில்லா, வார்த்தை லாவகங்களாகவே அமைந்தன. சமுதாயப் புரட்சியில்
தீவிரமாக நின்ற ஜோதிராவைத் தாக்கி எழுதத் தொடங்கினார்.
இச்சமயத்தில் கிருஷ்ணராவ் போல்கர் என்ற இளைஞர் தினபந்து (ஏழையின்
உடன்பிறப்பு) என்ற மராத்திய வார இதழை 1877இல் தொடங்கினார். உண்மை நாடுவோர்
சங்கத்தின் கொள்கைப் பரப்பு ஊடகமாக இது பயன்பட்டது. தன் சொந்த
நாட்டுக்காரனால் நம் மக்கள் சுரண்டப்பட்டனர். சூத்திரனாக்கப்பட்டு இழிவை
சுமந்தனர். ஆனால், ஆங்கில ஆட்சியாளர்கள்தான் அடித்தட்டு மக்களுக்குக்
கல்வியும் விழிப்பும் கொடுத்தனர் என்று தேசியம் பேசிய பார்ப்பனக்
கூட்டத்திற்குப் பதிலடி கொடுத்தது தினபந்து.
தினபந்தின் தாக்குதலுக்கு உள்ளான சிப்ளங்கர் ஆரியப் பார்ப்பனரின்
பெருமையை ஆணவத்தோடு எழுதினார். ஆரியப் பார்ப்பனர்கள் கையில் தான் அறிவின்
திறவுகோல். அவர்கள் உதவி இல்லாமல் மற்ற ஜாதியினர் அறிவின் வாயிலை அடைய
முடியாது என்று எழுதினர்.
வாயிலை அடைத்த பின்தான் திறவுகோலுக்கே வேலை என்ற சிற்றறிவுகூட இல்லை
எழுதுகோலைப் பிடித்த சிப்ளங்கருக்கு. ஆரிய அறிவு என்பது அரைவேக்காடானது
என்பதற்கு இது ஒரு பதம்.
சிப்ளங்கர் வழி நடந்த திலகர்
புரட்சியாளரைப் போல் காட்டிக் கொண்டு பூணூல் வேலைகள் புரிவதில் திலகர்
புகழ்பெற்றவர். எனவே, இதே வழியில் நடந்த சிப்ளங்கர் வழியைச் சிக்கெனப்
பிடித்தார் திலகர்.
மகாராஷ்டிரத்திலிருந்த சீர்திருத்த இயக்கங்களை யெல்லாம் கடுமையாகச்
சாடினார். அதற்குத் தன் அறிவையும் திறமையையும் முழுமையாகப் பயன்படுத்தினார்
சிப்ளங்கர்.
மனித எதிர் கொள்கைகளான சாஸ்திரம், ஜாதி தர்மம், மதம் போன்றவற்றைத்
தூக்கிப் பிடிக்க சிப்ளங்கர், திலகர் போன்றவர்கள் புதிதாய் வரவே,
ஜோதிராவும் தன் அணுகுமுறையைப் புதிதாய் மாற்றினார்.
கொள்கைகளைப் பரப்ப, விவாத அரங்குகள், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி
என்று புதிய வழிமுறைகளைப் பின்பற்றினார். பல்வேறு தலைப்புகள் வழங்கப்பட்டு
இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் மக்களை ஆர்வத்துடன் பங்கு கொள்ளச்
செய்து, கொள்கையை ஆழமாக உள்ளத்தில் ஊன்ற வழி கிடைத்தது.
நிவாரணப் பணிகள்
இயற்கை பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகும் போதெல்லாம் துயர் துடைப்பு
பணிகளை ஜோதிராவ் மேற்கொண்டார். மக்களுக்கு, உணவு, உடை, மருந்து, வாகன வசதி
கிடைக்கப் பெரிதும் பாடுபட்டார். நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசை
வற்புறுத்தி தினபந்து இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.
குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாகி வருவதை அறிந்த ஜோதிராவ் அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தொழிற்சங்கவாதியாகத் துவளாப் பணி
ஜோதிராவ் சமூகப் பணிக்காக அடிக்கடி பம்பாய் சென்று வந்ததால், ஆலைத் தொழிலாளர்களின் துயரங்களைப் பற்றி அவர் அதிகம் அறிந்தார்.
உணவு நேரம் போக தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும், குறைந்த
கூலி கொடுத்து அதிகம் வேலை வாங்கப்படுவதையும் அறிந்தார். தொழிலாளிக்குப்
போதிய உணவு வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி இல்லாத நிலை பற்றியும்
கேள்விப்பட்டார்.
ஆனால் இந்த வேதனைகளை வெளிப்படுத்த உரிய அமைப்பு இல்லாமைதான்
இதற்கெல்லாம் காரணம் என்று கருதினர். சமூகப் பிரச்சினையில் பல்வேறு
இடர்ப்பாடுகளைத் தாங்கி, வெற்றி கொண்ட ஜோதிராவிற்கு, இது மிகப்பெரிய
பணியாகத் தோன்றவில்லை.
1857-இல் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு முழுக்க முழுக்க ஆலை அதிபர்களை
உறுப்பினராகக் கொண்டது. எனவே, இக்குழு தொழிலாளர்களின் இன்னல் தீர்க்கப்
பயன்படவில்லை.
இந்நிலையில் ஜோதிராவால் உருவாக்கப்பட்ட போராளியான லோகந்தி என்பவர்
தினபந்து ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று ஆலைத் தொழிலாளர்களின் அவலங்களை
வெளியிட்டார். அதே போல, விவசாயிகளின் நலன் காக்க ஜோதிராவின் தோழர்
கிருஷ்ணராவ் பேல்கர் பாடுபட்டார்.
குறிப்பிட்ட வேலை நேரம், நியாயமான ஊதியம், குழந்தைத் தொழிலாளர்களை
வதைக்கக்கூடாது என்ற கோரிக்கை, பெண் தொழிலாளர்களுக்குரிய பாதுகாப்பு போன்ற
பல்வேறு வேண்டுகோள்கள் தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டன.
நாதியற்றுக் கிடந்தத் தொழிலாளர்களுக்கு ஜோதிராவ் மற்றும் அவர்களது
தோழர்கள் மூலம், தங்கள் குறைகளைக் கூறி நிவாரணம் பெற வாய்ப்பு
ஏற்படுத்தப்பட்டது.
நகராட்சி உறுப்பினராய் நற்பணிகள்
மக்கள் நற்பணியின் ஓர் அங்கமாக நகராட்சிப் பணிகளில் ஜோதிராவ் தீவிரமாக
ஈடுபட்டார். நகராட்சி உறுப்பினர் என்ற முறையில் ஏழைகள் நலன் காப்பதில்
உறுதியாய் இருந்தார். வைஸ்ராயின் வரவிற்காக நகரை அலங்கரிக்க நகராட்சிப்
பணம் ஒதுக்கப்பட்ட போது, அதைக் கடுமையாக எதிர்த்தவர் ஜோதிராவ் மட்டுமே.
அத்தொகையை ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்
என்றார்.
மது எதிர்ப்பு
மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்தபோது, மது
மக்களின் எதிரி. அது அவர்களை வெகுவாகப் பாதிக்கும் என்று சொல்லி அம்முடிவை
எதிர்த்தார். மதுக்கடைகள் திறக்கப்பட்டதனாலேதான் மக்கள்
குடிப்பழக்கத்திற்கு ஆளானார்கள். அதற்கு முன் மக்களை இப்பழக்கம் அதிகம்
பாதிக்கவில்லை என்பதை நடைமுறை உண்மையோடு விளக்கினார்.
நகராட்சி நிர்வாகத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கவும், சுட்டிச் சொல்லவும் ஜோதிராவ் தயங்கவில்லை.
கல்விச் சீர்திருத்த கருத்துக்கள்
தொடக்கப் பள்ளியையும், உயர்நிலைப் பள்ளியையும் அடித்தட்டு மக்கள்
பயனடையும் வகையில் அமைக்க வேண்டும். அடித்தட்டு மக்களைப் பற்றி
கவலைப்படாது, அறிவார்ந்த மக்களின் கல்விக்கு வழிவகுக்கும் கல்வித் திட்டம்
மாற்றப்படவேண்டும். மேல்தட்டு மக்களின் கல்விக்கே அதிகம் முனைப்பு காட்டும்
அரசின் கொள்கை மாற்றப்பட வேண்டும். உயர்தட்டு மக்கள் மட்டுமே தொடர்ந்து
கல்வி பெறும் போக்குதான், கல்வியாலும், வேலை வாய்ப்பாலும் முழுக்க முழுக்க
அவர்களே ஆதிக்கம் செலுத்துவதற்கும், அடித்தட்டு மக்கள்
புறக்கணிக்கப்படுவதற்கும் காரணம் என்றார்.
விவசாயிகளும், ஏழைகளும் தங்கள் தொடக்கக் கல்வியைத் தாங்களே ஏற்பாடு
செய்து பெறும் தகுதியற்றவர்கள். தங்களின் சூழலால் தங்களின் குழந்தைகளைத்
தங்களுடனே வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். எனவே, அக்குழந்தைகள் பயில போதிய
கல்வி உதவி வழங்கப்பட வேண்டும். 12ஆம் வயது வரை கட்டாயக் கல்வி அளிக்கப்பட
வேண்டும்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூனா நகரில் ஒரேயொரு பள்ளி மட்டும்தான்
உள்ளது. அதில் 30 சிறுவர்கள்தான் படிக்க முடிகிறது. எனவே பள்ளிகள்
எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிக அளவில்
தனியாகப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.
வேலைக்குச் சென்று ஊதிய பெறும் நோக்குடையதாக இப்போதைய கல்வி
முறையிருப்பதால், அது ஏழைகளின், ஒடுக்கப்பட்டோரின் விழிப்பிற்கும்,
விடிவிற்கும் பயன்படவில்லை. எனவே அதற்கேற்ப கல்வி முறை மாற்றப்பட வேண்டும்.
கணக்கு, வரலாறு, அடிப்படையறிவு, நல்லொழுக்கக் கல்வி, சுகாதாரம் போன்றவை
கல்வித்திட்டத்தில் இடம் பெற வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்குப்
பாடச்சுமை குறைவாக இருக்க வேண்டும். ஆனால், நடைமுறைக் கல்வியை
குறைக்கக்கூடாது.
ஆய்வாளர்கள் அடிக்கடிச் சென்று கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு,
அவ்வப்போது குறைகளைச் சரி செய்ய வேண்டும். ஒடுக்கப்பட்டோர் உள்ளத்தில்
உள்ளதைத் துணிவாகச் சொல்ல அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
உள்ளூர் வரித்தொகையில் பாதியைக் கல்விக்குப் பயன்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கல்வி மானியம் அளிப்பதன் மூலம்
நகராட்சிப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். பள்ளி நிர்வாகத்தை
நகராட்சிகளிடம் ஒப்படைக்கக்கூடாது. அரசாங்கம் கல்வித் துறையைத் தனது
கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அரசு வேலைகளையே எதிர்நோக்காமல் சுயதொழில் தொடங்கும் அளவிற்கு கல்வி
திட்டம் அமைய வேண்டும். பெண் கல்வி பெரிதும் தூக்கி நிறுத்தப்பட வேண்டும்.
கல்வி வளர்ச்சியில்லாத ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கென்று சில சிறப்பான
கல்வி உதவித் தொகையை அரசு தர வேண்டும். போட்டியின் மூலம் தேர்வு செய்து,
அவர்களுக்கு உதவுவது மேலோட்டமாக பார்க்கும் போது நியாயமாகப்படலாம். ஆனால்,
அது அடித்தட்டு மக்களுக்கு பயன்படாமல் போகும்.
விவசாயிகளின் விடியலுக்கு வித்திடல்
விவசாயிகளின் சாட்டை என்ற நூலை 1883ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எழுதி,
கையெழுத்துப் படியாக இருக்கும்போதே பலரிடமும் படித்துக் காட்டினார்.
இந்நூலை முழுமையாக எழுதி முடித்த பின்பு 1883 ஏப்ரல் மாதம் பம்பாயில் ஒரு
கட்டத்தில் இந்நூலைப் படித்துக் காட்டினார். இதன் படிகளை மன்னருக்கும்,
ஆளுநருக்கும் அனுப்பி வைத்தார்.
ஆரியச் சடங்குகளால் சூத்திர விவசாயிகள் சுரண்டப்படுவது பற்றியும்,
பள்ளிப் படிப்பிற்குக் கூடப் பிள்ளைகளுக்குச் செலவழிக்க முடியாமல் விவசாயி
படும்பாடு, நிலச்சிதைவு, வேளாண் கடன் கிடைக்காமல், அதிக வட்டிக்குக் கடன்
பெற்று கவலையுறும் அவலம், வரிச்சுமை மற்றும் இடைத்தரகர் சுரண்டல் ஆகிய
இன்னல்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
விவசாயிகளின் மீதான நெறுக்குதலைத் தவிர்க்க கண்காணிப்புக்குழுக்களை
அமைக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் பணத்தை யாரும் மோசடி செய்யாமல்
தடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
அளவுகளில் மோசடி, எடையில் மோசடி, விலையில் மோசடி என்று விவசாயிகள்
சுரண்டப்படுவதை முழுமையாக தடுக்க வேண்டும் என்றும், வேளாண் சம்பந்தப்பட்ட
விவரக் கையேடுகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், பருவமழையை
நம்பியே வாழும் விவசாயிகளுக்கு, நீர்ப்பாசன வசதி செய்துதர வேண்டும்.
அணைகள், கால்வாய்கள் மூலம் மழைநீரைச் சேர்த்துப் பகிர்ந்தளிக்க வேண்டும்...
என்று அரிய பல கருத்துக்களை விவசாயிகள் மேம்பாட்டிற்குள், விவசாய
மேம்பாட்டிற்கும் வழங்கினார்.
இன்றையச் சூழலுக்குக்கூட இவரது சிந்தனைகள், பரிந்துரைகள் எந்த
அளவிற்குப் பொருத்தமுடையவையாக இருக்கின்றன என்பதே இவரது
அறிவுநுட்பத்தையும், ஆய்வு நுட்பத்தையும் காட்டுகின்றன. மேலும் வேளாண்மையை
நம்பி வாழும் நலிந்த மக்களின் மேம்பாட்டில் அவர் கொண்டிருந்த அக்கறையும்,
அனுதாபமும், ஆர்வமும் இவை மூலம் வெளிப்படுகின்றன.
காங்கிரஸ் இயக்கமும் ஜோதிராவும்
இந்திய வரலாற்றில் 1885ஆம் ஆண்டு மிக முதன்மையான ஆண்டாகும். அந்த
ஆண்டில்தான் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஒன்றுபட்ட விடுதலைப்
போராட்டத்தின் முதல் முயற்சியாக இது அமைந்தது. காங்கிரஸ் தலைவர்கள் மீது
ஜோதிராவிற்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் நலனிலும்,
விவசாயிகள் நலனிலும் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை என்பது இவரின்
குற்றச்சாட்டு. பார்ப்பனர் ஆதிக்கத்தில்தான் காங்கிரஸ் இருக்கும் என்பதால்
அதன் வழி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு வராது என்று நம்பினார். அதையே
பிறருக்கு எச்சரிக்கையாகவும் அறிவித்தார். அனைத்து மதத்தினரையும்
உள்ளடக்கிய அமைப்பாக காங்கிரஸ் அமைக்கப்பட வேண்டும் என்று இவர் கருத்துத்
தெரிவித்தார்.
மகாத்மா அடைமொழி பெற்ற போராளி
1887ஆம் ஆண்டு ஜூன் மாதம் உண்மை நாடுவோர் சங்கத்தின் தொண்டர்கள் அழைப்பை
ஏற்று, பூனா மாவட்டத்தைச் சேர்ந்த டேலிகான் கிராமத்தில், பார்ப்பனர்களின்
கடுமையான எதிர்ப்பையும் மீறி, ஒரு நாவிதரின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆரியப் பார்ப்பனர்கள், ஜோதிராவிற்கு எதிராக சிலரைப்
பணம் கொடுத்துத் தூண்டி விட்டனர். ஆனால், ஜோதிராவ் பக்கம் மக்கள் பெருமளவு
ஆதரவு தந்து நின்றதால், பார்ப்பனர் எதிர்ப்பு பயனற்றுப் போயிற்று.
இதன் விளைவாக நாவிதர்கள் பார்ப்பனர்களுக்குச் சவரம் செய்வதில்லை என்று
முடிவு செய்தனர். அதனால் பார்ப்பனர்களே தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சவரம்
செய்து கொண்டனர். பார்ப்பனர்கள் சவரப்பையுடன் வீதியில் செல்லும்
கட்டாயத்தினை ஜோதிராவின் செயல்பாடுகள் உருவாக்கின. ஜோதிராவிற்கு 60 வயது
நிரம்பியது. இவரது அயராத போராட்ட வாழ்வைச் சிறப்பிக்க அனைத்துத் தரப்பு
மக்களும், தலைவர்களும் முடிவு செய்தனர். 1888ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் நாள்
இவரைச் சிறப்பிக்க, ஒரு பெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய
முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு அழைப்புகளும்
அனுப்பப்பட்டன. அறிவிப்புகளும் பல வகையில் செய்யப்பட்டன.
11.05.1888 அன்று மண்ட்வி பகுதியிலிருந்த கோவிவாடா அரங்கில் ஏழை
விவசாயிகளும், ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும், ஆண்களுமாய் நிரம்பி
நின்றனர். அவர்களின் கண்களின் நன்றியுணர்வும், பாசமும், மரியாதையும்
பளிச்சிட்டன.
ஒரு எளிய குடியில் பிறந்து மக்கள் தலைவரான ஒருவருக்கு இப்படிப்பட்ட ஒரு பெரும் பாராட்டுக்கூட்டம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த நாற்பதாண்டு காலமாக இவர் ஆற்றிய அரும் பணிகளைப் பாராட்டி, பல
தலைவர்கள் உணர்வுப் பெருக்குடன் உரையாற்றினர். அறியாமை, ஆதிக்கம்,
ஏற்றத்தாழ்வு, ஜாதிக் கொடுமை இவற்றை ஒழித்து தாழ்த்தப்பட்டோர் கல்வி
வளர்ச்சி, பெண்கல்வி, விதவை மணம், தொழிலாளர் நலம், விவசாயி நலம்,
இடஒதுக்கீடு என்று எல்லா பரிமாணங்களையும் தனி நபராய் நின்று போராடி
வெற்றியும் பெற்ற ஜோதிராவ் பூலேவிற்கு, நன்றியும் மரியாதையும் தெரிவிக்கும்
வகையில், கூட்டத்தினரின் அரங்கதிர்ந்த கைத்தட்டல்களுக்கிடையே மகாத்மா என்ற
பட்டம் அளிக்கப்பட்டது. அடித்தட்டு மக்கள் தன்மீது காட்டிய அன்பையும்,
நன்றியையும் மரியாதையும் கண்ட ஜோதிராவ் நெகிழ்ந்து போனார்.
இவருக்குப் பின்னால், சிஸ்சிகுமார் கோஸ், சுவாமி சிராத்தானந்தர்,
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆகியோர் மகாத்மா பட்டம் பெற்றனர். என்றாலும்,
முதன்முதலில், இயற்கையாய், எளியவருக்கு, எந்தவித செல்வாக்கும்,
பரிந்துரையும் இன்றி இயல்பாய் மக்களிடம் தோன்றிய நன்றிப் பெருக்கின்
விளைவாய் மகாத்மா பட்டம் அளிக்கப்பட்டது ஜோதிராவிற்குத்தான்.
தந்தை பெரியாருக்குப் பெரியார் பட்டத்தைப் பெண்கள் மாநாடு அளித்ததுகூட இவ்வகையான ஓர் இயற்கை வெளிப்பாடு தான்!
உடல்நலக் குறைவடைந்தார் உத்தமத் தலைவர்
வாழ்நாள் முழுக்க ஓய்வறியாது உழைத்த, மனிதநேயங் கொண்ட மாமனிதர்,
அறிவுநுட்பம் கொண்ட பேரறிஞர், துணிவுமிக்க தூய தொண்டர், ஆதிக்கம் அழித்த
போராளி ஜோதிராவிற்கு 1888ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாரடைப்பு ஏற்பட்டு, இவரது
உடலின் வலதுபுறம் செயலிழந்தது. மருத்துவர் வி.ஆர்.கோகலே மருத்துவம்
பார்த்தார். உடல்நலம் ஓரளவிற்கு தேறி வந்தது. என்றாலும் அவரது வலக்கை
செயற்படவில்லை.
அந்நிலையிலும், ஆற்றல்மிகு எழுத்தாளரான ஜோதிராவால், எழுதாமல் இருக்க
முடியவில்லை. நன்னடத்தைகள் பற்றி ஒரு நூல் எழுத முடிவு செய்து, இடது கையால்
எழுதத் தொடங்கி, எழுதி இந்நூலை 1888ஆம் ஆண்டு இறுதியில் முடித்தார்.
1888 டிசம்பர் வரை ஜோதிராவ் படுக்கையிலேயே கிடந்தார். அப்போதுகூட, இவர்
ஞானபாசகேனிக்குக் கடிதம் எழுதி கருத்துக்களை வெளியிட்டார். வாய்மையே
வெல்லும் என்ற உறுதிபாட்டை அவர் ஆழமாக வெளியிட்டார். தான் தவறாய்
முடிவெடுக்கும்போது மனைவியிடமே மன்னிப்புக் கேட்டவர் ஜோதிராவ் அவர்கள்.
இத்தகு உன்னத மனிதர் 1888 டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் மீண்டும்
நோய்வாய்ப்பட்டார். பின்னர் தமது குடும்பத்தவரின் அன்பான பராமரிப்பில்
மீண்டும் உடல் நலம் பெற்றார். தம் குடும்பத்திருமணங்களை, புரோகிதர்
இல்லாமல், தமது கொள்கைப்படியே நடத்தினார்.
1890ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி, நீதிபதி சார்லஸ் சர்ஜண்டும், நீதிபதி
கே.டி.டெலாங்கும் அளித்த தீர்ப்பின் படி ஜோதிராவின் கொள்கைப்படி
நடத்தப்பட்ட திருமணங்கள் அனைத்தும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இது
உண்மை நாடுவோர் சங்கத்திற்கும், ஜோதிராவின் உண்மையை உழைப்பிற்கும்
புரட்சிக்கும் கிடைத்த வெற்றியாகவும், ஒப்பளிப்பாகவும் அமைந்தது.
பிற்காலத்தில் தந்தை பெரியார் செய்த சுயமரியாதைத் திருமணங்களை அறிஞர்
அண்ணா அவர்கள் சட்டம் இயற்றி ஏற்பளித்ததை இங்கு ஒப்பிட்டுப் பார்த்தால்
வரலாற்று ஒற்றுமைகள் விளங்கும். பூலேவின் வழிகாட்டலும் புரியும்.
நோய்வாய்ப்பட்ட ஜோதிராவ் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில்,
அவரது தொண்டர்கள் மக்களுக்குப் போராடி அவரது கொள்கைகள் ஒவ்வொன்றையும்,அவர்
போராட்டம் ஒவ்வொன்றையும் வெற்றியடையச் செய்து கொண்டிருந்தனர்.
1890ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் வியாழக்கிழமை ஜோதிராவின் உடல்நிலை
மிகவும் மோசமடைந்தது. என்றாலும் அவர் சுயநினைவுடனும், முகமலர்ச்சியுடனும்
காணப்பட்டார். குடும்பத்தார் அனைவரையும் படுக்கையருகே அழைத்தார்.
மக்களுக்குரிய கடமைகளை உண்மையோடும், நீதியோடும், தன்னலமின்றியும் தொடர்ந்து
செய்து வருமாறு கேட்டுக் கொண்டு , அனைவருக்கும் வாழ்த்துக் கூறினார்.
அன்று இரவு சுயநினைவுடனே இருந்த அவரது கண்கள் திடீரென மூடிக் கொண்டன.
அமைதியான நிலையில் அவர் உயிரிழந்தார்.
ஜோதிராவ் இறந்த செய்தி விரைந்து பரவியது. ஏழைகளும் விவசாயிகளும், பெண்களும் ஆண்களுமாய் அவர் வீட்டிற்கு வந்து குவிந்தனர்.
வீட்டின் முன்புறம் ஒரு பெஞ்ச்சில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
கூடியிருந்த மக்கள் வடித்த கண்ணீருக்கு அளவே இல்லை. எல்லாம் பறிபோன
தவிப்பில் மக்கள் ஏங்கி நின்றனர்.
நவம்பர் 28-ஆம்நாள் காலை 10 மணியளவில் அவரது உடல் பன்னீரால்
குளிப்பாட்டப்பட்டது. அவர் வழக்கமாக அணியும் ஆடையில் ஒன்று அவருக்கு
அணிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மலர்மாலைகள் வைத்து மரியாதை
செலுத்தப்பட்டது. நெருங்கிய உறவினர்கள் உடலை சுமந்து செல்ல, ஆயிரக்கணக்கில்
ஆண்களும் பெண்களும் தொடர்ந்து சென்றனர். இரண்டு மணிநேரம் நடந்து சென்று
இடுகாட்டை அடைந்தனர்.
ஜோதிராவின் உடல் விறகின்மேல் வைக்கப்பட்டது. அவரது வளர்ப்பு மகன்
யஷ்வந்த் உடலுக்குத் தீவைத்தார். ஜோதிராவ் ஜோதியில் கலந்தார். அவர்
வாழும்போதும் ஜோதி இறந்த பின்னும் ஜோதி; எனவே அவருக்கு ஏது மரணம்?
அவர் வகுத்த அடித்தளத்தில்தான் இன்றைய செயல்பாடுகள் செல்கின்றன. அவர்
தொடங்கி வைத்த போராட்டங்கள்தான் இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட, மக்களின் போராட்டங்களாகவும், பெண்ணுரிமைப்
போராட்டங்களாகவும் விரிந்து பயனளித்துக் கொண்டுள்ளன.
அனைத்து புரட்சி செயல்பாடுகளிலும், மனித நேயச் செயல்பாடுகளிலும்
ஜோதிராவ் பூலே வாழ்கிறார். அவர் என்றைக்கும் வாழ்வார். அவரால் இந்த மனித
இனம் சமத்துவம் பெற்று வாழும்; வளரும்.
வாழ்க ஜோதிராவ் பூலே.!
நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment