தமிழீழத் தந்தை செல்வா (கி.பி. 1898 - 1977)
மலேசிய
நாட்டில் பிறந்தவர், தமிழீழத் தந்தை
என்று அழைக்கப்படும் தகுதியைப் பெற்றார் என்றால், அதில் உள்ளடக்கியிருக்கும்
செய்திகள் ஓராயிரமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை. ஆம் தந்தை
செல்வாவைப் பொறுத்தவரை அது உண்மை. உண்மையிலும் உண்மை!
மலேசிய
நாட்டில் ஈப்போ பகுதியில் பிறந்த, சாமுவேல் ஜேம்ஸ்
வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற பெயருடையவரே பின்னாளில் செல்வா என்று எல்லோராலும் அறியப்பட்டவர் ஆவார்.
இவரது
தாய்நாடு இலங்கைதான். ஆனால் பிறந்தது, வளர்ந்தது எல்லாம்
மலேசியாவில் உள்ள ஈப்போ மாநிலத்தில்தான்.
இவரது
தந்தை வேலுப்பிள்ளை மலேசியாவில் வணிகத்துறையில் இருந்தார். ஆனால், செல்வா
இளம் வயதாக இருக்கும்போது, இவரது தந்தை இறந்து போனார். அதன் காரணமாக
இவர் மீண்டும் இலங்கைத் திரும்ப வேண்டியதாயிற்று.
மலேசிய
மொழியில் ஈப்போ என்பதற்கு தூய்மை என்ற பொருள். தான் பிறந்த
மண்ணின் தன்மைக்கு ஏற்பவே இவர் வாழ்நாளெல்லாம் தூய்மையாக இருந்தார்.
இவர்
1898ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31ஆம் நாள் பிறந்தார். தந்தையார் மறைவிற்குப்
பின் இலங்கைக்குச் சென்றவர். யாழ்ப்பாணத்தில் தூய யோவான்
கல்லூரியில் பயின்றார். பின் யாழ்ப்பான
கல்லூரியில் பயின்று இளங்கலை அறிவியல் (பி.எஸ்சி) பட்டம் பெற்றார். அதன்பின், தாமஸ் கல்லூரியிலும், வெஸ்லி கல்லூரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்து பிறகு சட்டக் கல்லூரியில் பயின்றார். ஆசிரியத் தொழிலில்
அடியெடுத்து வைத்தவர், தன் தடத்தை
உடனடியாக மாற்றிக் கொண்டு வழக்கறிஞர் பணியாற்ற விரும்பி சட்டம் பயின்றார். சிறப்பாகக் கற்றவர்
வழக்கறிஞராகவும் (Civil
Lawyer) ஆனார்.
ஆனால், நீதிமன்றத்தில் வழக்காடி, வருவாய் ஈட்டி
தன் வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்ற வழக்கமான வழக்கறிஞராக செல்வா இல்லாமல், சமுதாய வழக்கறிஞராக
தமிழின வழக்கறிஞராக குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கான வழக்கறிஞராக மாறினார்.
சுயநலமற்றத்
தலைவனை சூழ்நிலையே உருவாக்கிவிடும் என்ற இயல்பிற்கேற்ப உருவான சுதந்திரத் தலைவர்தான் செல்வா அவர்கள்.
ஆம். தனது 40ஆம் வயது வரை அவர் அரசியல் பக்கமே வரவில்லை. அவர் பிறந்தது
1898ஆம் ஆண்டு. அவர் தீவிர
அரசியலுக்கு வந்தது 1947இல்தான். அதாவது அய்ம்பதாவது
வயதில்தான். 40 வயது முதல் 50 வயது வரையிலான அவரது 10 ஆண்டுகால வாழ்க்கைப் பணிகள் அவரை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியது.
தொடக்க
காலத்தில் சிங்களர்களின் வல்லாண்மையை (ஏகபோகத்தை) எதிர்ப்பதில்தான் தன் பணியைத்
தொடங்கினார் செல்வா. தமிழினத்தின் மீது
அவர்கள் செலுத்துகின்ற ஆதிக்கத்தையும், அத்துமீறலையும் பேரினப் போக்கால், இரண்டாந்தர மக்களாகத்
தமிழர்களை அவர்கள் நடத்திய கொடுமைகளையும் செல்வா தீவிரமாக எதிர்த்ததோடு, அவை பற்றிய விழிப்புணர்வையும் தமிழர்களிடையே ஏற்படுத்தினார்.
இனவுணர்வற்று
சுயநலத்தில் சுழன்ற தமிழர்களைத் தட்டி எழுப்பி உணர்வூட்டாமல், சிங்கள வல்லாண்மையை வன்கொடுமையை வீழ்த்த இயலாது என்று இவர் உறுதியாக நம்பினார்.
அரசு
வேலை கிடைத்தாலே அனைத்தும் கிடைத்தது போன்ற ஒரு மயக்கத்தில் தமிழர்கள் அரசுப் பணி என்ற மோகத்தில் வாழ்ந்தார்கள். ஆடு மேய்த்தாலும் அரசாங்கத்தில் மேய்க்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு அவர்களுக்கு அரசுப் பணியில் ஆர்வம் இருந்தது
அரசுப்
பணிதான் அந்தஸ்த்தின் அடையாளம் என்று அவர்கள் எண்ணினர். அரசுப் பணியில்
சேர வேண்டும்; அழுக்குப்படாமல் வருவாய் ஈட்ட
வேண்டும்; கல்யாணம் செய்து
கொண்டு பிள்ளைகளோடு மகிழ்வாக வாழ வேண்டும் என்கின்ற சுயநல வட்டத்திலே தமிழர்களின் சிந்தனைகள் சுழன்று கொண்டிருந்தன.
மாறாக, தன் இனம், தன் மொழி, தன் பண்பாடு, தன் உரிமை, தன்மானம், இனத்தின் வளர்ச்சி, மொழியின் வளர்ச்சி, இனத்தின் பாதுகாப்பு, மொழியின் பாதுகாப்பு என்ற இனக் கண்ணோட்டம் இம்மியளவும் இன்றி இருந்தார்கள் தமிழர்கள்.
ஜாதி, மத வேறுபாடு, பகை,
உயர்வு தாழ்வு என்ற இனத்தின் உட்பூசல்களுக்கும் அவர்களிடையே குறைவில்லை.
எனவே, செல்வா அவர்கள், இந்த இழிநிலையிலிருந்து
தமிழர்களை மீட்க வேண்டும் என்ற பணியில் முதலில் ஈடுபட்டார்.
பயிற்சியில்லாத
படைவீரர்களைக் கொண்டு பகை வெல்ல முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதேபோலத்தான் பக்குவமில்லா இனமக்களைக் கொண்டு இனப் பகையை வெல்ல முடியாது. இதை நன்கு
உணர்ந்த செல்வா முதலில் தமிழ் இனத்திற்கு விழிப்பூட்டும் பணிகளை முதலில் செய்தார்.
இன
ஒற்றுமையை ஏற்படுத்திய ஏந்தல்
தான்
கிறிஸ்தவராக இருந்தாலும் அந்த உணர்வை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. அவரிடமிருந்த உணர்வு தமிழன் என்ற உணர்வே. அதனால்தான், சிறுபான்மை
கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவராக செல்வா இருந்தபோதிலும் சிவநெறியைப் பின்பற்றிய பெரும்பாலான தமிழ் மக்களின் தலைவராக அவரால் உயர முடிந்தது.
யாழ்ப்பாணத்தான், வன்னியான், திரிகோண மலையான், மட்டக்களப்பான், மலையகத்தான் என்று தமிழன், மாநில அடிப்படையில்
பிரிந்து கிடந்த நிலையை மாற்றி, ஒரு குடையின்கீழ்
கொண்டு வந்த பெருமை தந்தை செல்வாவையே சேரும்.
ஓர்
இனம் மாற்றானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமானால், முதலில் அந்த இனத்திலுள்ள வேறுபாடுகள், கூறுபாடுகள் ஒழிக்கப்பட்டு இன ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும் என்ற முதன்மையான உண்மையை செல்வா சரியாக உணர்ந்திருந்ததால்தான் இனத்தின் ஒற்றுமையை ஏற்படுத்தும் பணிக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்டார். செயல்பட்டதோடு அதைச் செய்தும் முடித்தார். அதற்குரிய ஆளுமைத் திறன் அவரிடம் இருந்தது.
பேச்சுத்
திறன்
செல்வா
ஆற்றல்மிகு பேச்சாளராகவும், மக்களை ஈர்க்கின்ற சொல்லாட்சிக்கு உரியவராகவும், அலங்காரமில்லா பொருள் பொதிந்த பேச்சின் ஊற்றாகவும் அவர் திகழ்ந்தார்.
மக்களின்
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மாண்பு
அவர்
சொல்லும் வழியெல்லாம் செல்ல மக்கள் காத்துக் கிடந்த காலத்திலும், அவர் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ளவில்லை. மக்களின் உணர்வுகள் என்ன என்பதை அறிந்து, அவர்களின் கருத்துக்களை
மதித்துக் கேட்டு, அவற்றையும் சிந்தனையில்
சலித்து, உரிய வழிகளை, உகந்த வழிகளைத் தேர்வு செய்து செயல்பட்டார். மக்கள் உணர்வுகளை மதித்து நடக்கின்றவன்தான் மக்கள் தலைவனாக இருப்பதற்குத் தகுதியுடையவன் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப செல்வா இருந்தார்; இயங்கினார்.
நடந்து
காட்டல்
மக்களை
வழிநடத்துகின்ற தலைவர்கள் பலர், சொல்லும் வகையான்
நடப்பதில்லை. அதனால்தான், பல தலைவர்களை ஏற்றுக் கொள்ள மக்கள் முன்வருவதில்லை. ஆனால், செல்வா அவர்கள்
சொல்வது போலவே நடந்தும் காட்டினார்.
தொலைநோக்குப்
பார்வை
அரசியலுக்கு
வருகின்ற பலர், பதவியை நோக்கமாகக்
கொண்டே நுழைகின்றனர். அவர்கள் மக்களுக்காக உழைப்பவர்கள் போல் காட்டிக் கொள்வார்களேயன்றி உண்மையில் சுயநலத்திற்காகவே சுழன்று கொண்டிருப்பார்கள்.
ஆனால்
செல்வா அவர்கள், எதிர்காலத் தலைமுறையின்
எதிர்காலம் பற்றியே சிந்தித்தார். அதற்கான செயல் திட்டங்களையே வகுத்தார். அந்த வழியிலேயே
செயல்பட்டார். அதனால்தான் அவர் அரசியல்வாதியாக குறுகிப் போகாமல், இனத்தலைவராக உயர்ந்து
நின்றார்.
ஆங்கில
ஆட்சியிலிருந்து விடுதலை
இந்தியாவைப்
போலவே இலங்கையும் ஆங்கில ஆட்சியிடமிருந்து விடுதலை பெற்றது. ஆட்சியில்தான் இரண்டு
நாட்டிலும் விடுதலை கிடைத்ததேயன்றி, ஆதிக்கத்திலிருந்து மண்ணின் மைந்தர்களுக்கு; நாட்டின் உண்மையான சொந்தக்காரர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை.
இந்தியாவில்
ஆங்கில ஆட்சி அகன்றபின் ஆரியர் ஆட்சியும் ஆதிக்கமும் ஏற்பட்டது.
இலங்கையில்
ஆங்கில ஆட்சி அகன்றபின் சிங்களர் ஆட்சியும், ஆதிக்கமும் ஏற்பட்டது.
ஆனால், ஒரு வேறுபாடு.
இலங்கையில்
சிறுபான்மை தமிழர்களை பெரும்பான்மை சிங்களர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், இந்தியாவில் சிறுபான்மை
ஆரியர்கள், பெரும்பான்மையானவர்களை ஆதிக்கம் செலுத்தினர்.
ஆனால், ஒரு ஒற்றுமையுண்டு.
இந்தியாவிலும்
நாட்டிற்கு உரிமையுள்ள பூர்வீக மக்களை வந்தேறிகளான ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இலங்கையிலும் மண்ணுக்கு உண்மையான தமிழர்களை வந்தேறிகளான சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
இந்திய
வம்சாவழித் தமிழர்களுக்கான போராட்டம்
1948ஆம் ஆண்டு இந்தியா வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில்
ஒரு வஞ்சகமான சட்டம், அன்றைய (பிரதமர்) தலைமையமைச்சர் டி.எஸ்.செனநாயகாவினால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இப்போது
இந்திய வம்சாவழித் தமிழர்களின் கழுத்தில் கத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இதே நிலைதான் வரும். எனவே,
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நின்று, 65 விழுக்காடு வருவாயை ஈட்டித் தரும் வகையில் உழைத்து உழைத்து உருக்குலையும், இந்திய வம்சா வழித் தமிழ் மக்களை அநாதையாக்குவதற்கு நான் என்றும் உடந்தையாக இருக்க மாட்டேன் என்று உரிமைக்குரல், ஆதரவுக் குரல் எழுப்பியதோடு, 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் நாள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமையை, வாக்குரிமையை மீண்டும் பெற்றுத்தர என் வாழ்நாள் முழுவதும் போராடுவேன்... என்று செல்வா அவர்கள் கூறியதுபோலவே, தன் வாழ்நாள் முழுவதும் அதற்காகவே பாடுபட்டார்.
இலங்கையில்
வாழ்ந்த தொன்மைத் தமிழ்க்குடி மக்களுக்கும், இந்தியாவிலிருந்து வந்த இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கும் இடையே பிளவை உண்டாக்கி, பகையூட்ட முயற்சி
செய்தவர்களின் சூழ்ச்சியை முறியடித்து, தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எடுத்து விளக்கி, தமிழர்களிடையே பிளவு
வராமல் காக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். அன்றைக்கு அவர் இட்ட அடிப்படையும், ஊட்டிய விழிப்பும், ஏற்படுத்திய ஒற்றுமையுமே பிற்கால போராளிகளுக்கு அடிச்சுவடுகளாக அமைந்தன.
பொன்னம்பலம் - பின் அம்பலம்!
ஆங்கில
ஆட்சி அகன்றபின் இலங்கையில் சிங்களர் பேரின ஆதிக்கம் தலைதூக்கி நின்றபோது, தன்னுடைய ஆங்கிலப்
புலமையாலும், சொல்லாற்றலாலும் சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்து, எழுச்சிக் குரல்
கொடுத்தவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள். ஆனால், அவர்
காலப்போக்கில், சிங்களர்கள் காட்டிய பதவி, பட்டம் இவற்றால்
மயங்கி, சுயநலத்தில் ஆர்வம்
கொண்டு தன் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழினத்தையே சிங்களர்களிடம் அடகு வைக்க முற்பட்டபோது விழிப்புடன் வீறுகொண்டு எழுந்து, அச்சதிச் செயலை
முறியடித்து, தமிழினத்திற்கு தலைமையேற்றவர் தந்தை செல்வா அவர்கள்.
நம்பிய
தலைவர் பொன்னம்பலம் நடு ஆற்றில்விட்டபோது, நானிருக்கிறேன் என்று தத்தளித்த தமிழினத்த் தாங்கிப் பிடித்தவர் செல்வா.
பொன்னம்பலத்தாரின்
சுயநலம் அம்பலம் ஆனது. தமிழன் வாழ்வு
காலங்காலமாக வீழ்ந்ததற்குக் காரணமே இராஜ ராஜ சோழன்களும் எட்டையப்பன்களும் விபீஷணர்களும் என்பதுபோல, பொன்னம்பலங்கள் என்ற புது
மரபும் அவரால் தோன்றியது. இலங்கை என்பதால்
விபீஷணனின் வழியைப் பின்பற்றினார் போலும் பொன்னம்பலம். ஆனால், விபீஷ்ண பொன்னம்பலத்திடமிருந்து
விழிப்புடன் தமிழினத்தை மீட்டார் செல்வா.
இணைப்பாட்சித்
திட்டத்தை ஏற்றல்
பொன்னம்பலத்திடமிருந்து
தமிழினத்தை மீட்டவர், சிங்கள ஆதிக்கத்திலிருந்து
தமிழ் மக்களை மீட்டு, தமிழர்களுக்கு உரிய
உரிமையைப் பெற்றுத் தர பல்வேறு வழிகளை ஆராய்ந்தவர் செல்வா. ஒற்றுக்கு மேற்பட்ட
மொழி, இனம்,
பண்பாடு என்று வேறுபட்டு அடையாளங்களைக் கொண்ட நாட்டில், ஒற்றையாட்சி முறை
ஒத்து வராது. அது பேரினத்தின்
பிடியில்தான் இருக்கும். பேரினத்துக்கு ஆதரவாகச்
செயல்பட்டு, அதன் வளர்ச்சி, நலன்,
உரிமைகளுக்காகவே துணை நின்று சிறுபான்மை இனத்தை அடிமையாக்கி ஆதிக்கம் செலுத்தும். எனவே, எல்லா மக்களுக்கும்
உரிய உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைக்க இரண்டு இனங்களும் பங்குபெறும் இணைப்பாட்சியே ஏற்றது என்று முடிவு செய்தார்.
இணைப்பு
ஆட்சியின்கீழ் தமிழரின் தனித்தன்மைகளைக் காத்தல் என்ற நிலைப்பாட்டை உறுதியுடன் கொண்டிருந்த செல்வா அவர்கள், இரு இனத்தின்
இணைந்த ஒற்றுமையின் மூலம், இன்பமான வாழ்க்கைக்கு
வழிவகுக்கலாம் என்று எண்ணினார்.
இந்த
இணைப்பாட்சித் தத்துவப்படி, மாநில தன்னாட்சி, பிரதேச சபை, மாவட்ட சபை, அதிகாரங்களைப்
பன்முகப்படுத்தல் அல்லது அதிகாரங்களைப் பகிர்தல் என்ற கொள்கை அடிப்படையில் சிங்களத் தலைவர்களிடமும், சிங்கள மக்களிடமும் ஒத்து வாழ, இணைந்து
வாழ தந்தை செல்வா பலமுறை முயற்சித்தார்.
ஆனால், இப்படிப்பட்ட முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றால், இரு இனத்தாரும்
வெளிப்படையாக கள்ளம் கபடம் இல்லாமல் வெள்ளை உள்ளத்தோடு, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும். இல்லையேல் அது
பயன் தராது.
என்றாலும், நல்ல நோக்கத்திற்காக செல்வா அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தார். அம்முயற்சியின் விளைவாக 1957இல்
செல்வநாயகம் - பண்டார நாயகா ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
1965இல் செல்வநாயகம் - செனநாயகா ஒப்பந்தமும் 1970இல் செல்வநாயகம் - சிறிமாவோ உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டன. ஆனால், இன்றைக்கு நடப்பது
போலவே, சிங்கள ஆதிக்கவாதிகள்
இவ்வொப்பந்தங்களை மதிக்கவில்லை. ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட ஒரு சில நாட்கள் கூட அதற்குச் சிங்களர் மதிப்பளிக்கவில்லை. ஒப்பந்தங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தங்கள் ஆதிக்கங்களை, தமிழர்கள் எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால், தந்தை செல்வா
இனி ஒருங்கிணைந்த சிங்களர்களோடு வாழ்வதென்பது இயலாது. அதற்காகச் செயல்படும்
முயற்சிகளெல்லாம் வீண்தான் என்று உறுதியாக நம்பினார்.
தனி
ஈழமே தீர்வு தந்தை செல்வா முடிவு
எனவே, தந்தை செல்வா அவர்கள் மாற்று வழி பற்றி தீவிரமாகச் சிந்தித்தார். 1948இல் இலங்கை ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றாலும் 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் சிங்கள ஆதிக்கத்திலிருந்து தமிழர்கள் விடுதலை பெற முடியவில்லை. மக்களாட்சி என்ற பெயரில், தமிழர்களை ஒடுக்குகின்ற, ஒழித்துக் கட்டுகின்ற வேலையைத்தான் சிங்கள வல்லாண்மை அரசு செய்து வருகிறது. பாராளுமன்ற மக்களாட்சியின்படி
பெரும்பான்மையே ஆள முடியும். எனவே,
என்றைக்கும் சிறுபான்மையாக உள்ள தமிழினம் ஆட்சியில் முதன்மைப் பங்கு பெற முடியாது. எனவே,
தமிழர்க்குள்ள உரிமையையும், வாய்ப்புகளையும், மதிப்பையும் பெறவே முடியாது என்பதால், தமிழர்களுக்கென்று தனி ஈழம்
உருவாக்கப்படுவது ஒன்றே உகந்த வழி என்று முடிவு செய்தார்.
1956இல் ஏற்பட்ட இனக்கலவரம், 1958இல் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் எல்லாம் நடந்த பின்பும், 1970 வரையில் அமைதி வழியிலே செல்வா தமிழர்க்குரிய கோரிக்கையை வைத்துப் பார்த்தார். ஆனால், சிங்கள வெறியர்கள்
கபட நாடகம் நடத்திக் கொண்டே, தமிழினத்தை ஒழிக்கின்ற
முயற்சியிலேதான் தொடர்ந்து ஈடுபட்டனர். 1971இல் தமிழர்களுக்கு எதிராகத் தீவிரத் தாக்குதல் நடத்தினர் சிங்கள வெறியர்கள். இதனைத் தடுத்து நிறுத்த தமிழகத் தலைவர்களின் உதவியையும் நாடினார் செல்வா.
தமிழகம்
வந்த தந்தை செல்வா
1972இல் தந்தை செல்வா அவர்கள் தலைமையில் ஒரு குழுவினர் தமிழகத்திற்கு வந்து, தந்தை பெரியார், கலைஞர் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தனர்.
கடல்
கடந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் இன்னல் போக்கவும், கண்ணீர் துடைக்கவும், அயராது உழைக்கும் தலைவர் செல்வா அவர்களைக் கலைஞர்மு.கருணாநிதி அவர்கள்
அன்புடன் அணைத்து ஆதரவுக்கரம் நீட்டினார்.
செல்வாவின்
உள்ளத்திற்கு உரமேற்றும் வகையில் உறுதிகளை கலைஞர் அளித்தார். தமிழகத்திலிருந்து செல்வா திரும்பும்போது
புதிய நம்பிக்கையுடனும், தெம்புடனும் சென்றார்.
அதன்பின்
செல்வாவிற்கும் கலைஞருக்கும் இடையே கடிதப் பரிமாற்றங்கள் நிறைய நடந்தன. இனநலம் குறித்த
கருத்துக்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.
1976இல் சிங்கள வெறியர்கள் தமிழர்கள்மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பின்புகூட, 1976இல் ஆறு அம்சக் கோரிக்கையை செல்வா அவர்கள் தமிழர்களின் சார்பில் வைத்தும், அக்கோரிக்கைகள் சிங்கள ஆட்சியாளர்களால்
மறுக்கப்பட்டதனால், செல்வா ஆவேசம் கொண்டார்.
1976இல் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையில் எம் இழந்த இறைமையை, எம் இழந்த
விடுதலையை, மீண்டும் நிலைநாட்டினால்
அன்றி, எமக்கு வாழ்வு
இல்லை என்று திட்டவட்டமாக, முடிவாக அறிவித்தார் தந்தை செல்வா அவர்கள்.
1948இல் இலங்கை விடுதலையடைந்தது முதல், ஈழத் தமிழர்களுக்கு
வாக்குரிமை, குடியுரிமை, நிலவுரிமை, மொழியுரிமை, கொடியுரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை, மத உரிமை என்று எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு, தமிழினமே தடம் தெரியாமல் அழிக்கப்படுகின்ற முயற்சி தொடர்ந்து நடைபெறுவதால், இனி இரு இனமும் கூடி வாழ இயலாது. அவ்வாறு இனி
கூடி வாழ முயல்வது தமிழினத்தின் தற்கொலைக்குச் சமம் என்று முடிவு செய்த செல்வா, 19.11.1976இல் தான் இறப்பதற்கு முன், உள்ளம் உருக
உருக, உணர்ச்சித் ததும்பத்
ததும்ப கீழ்க்கண்டவாறு இலங்கை நாடாளுமன்றத்தில், கேட்போர் நெஞ்சை உருக்கும் வகையில் பேசினார்.
தமிழ்
பேசும் மக்களின் இழந்த உரிமைகளை மீட்பதற்காக, நாங்கள் ஒரு காலக்கட்டத்தில், கூட்டாட்சி இயக்கத்தைத் தொடங்கினோம். ஆனால், கூட்டாட்சி மூலம்
தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது இனி இயலாது என்பதைக் கடந்த கால கறைபடிந்த கசப்பான அனுபவங்களின் மூலம் உணர்ந்து கொண்டு விட்டோம். இந்த அனுபவங்களின்
அடிப்படையில், நாங்கள் தனியாகப் பிரிந்து வாழ வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்து விட்டோம். இதை நாங்கள்
செய்யாவிட்டால், தமிழினம் தமது இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்டுக் கொள்ள முடியாது.
எங்கள்
முன்னோர்கள், அறிவாளிகள், திறமைசாலிகள், அவர்கள் தங்களுக்கென்று தனி ஆட்சியை வைத்திருந்தனர். இலங்கையின் வரலாற்றில் அவர்களுக்கென்று ஓர் இடம் இருந்தது. எங்கள் இயக்கம்
நாட்டைப் பிரிக்கும்படி கேட்கவில்லை. இழந்த எங்கள் உரிமையான அரசை மீள அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலை.
தனித்
தமிழ் ஈழத்தை நிறுவும் இலட்சியத்தை நோக்கி, எங்கள் இயக்கம்
முன்னேறுகிறது. தனித்தமிழ் ஈழம் நிறுவுவது எளிதான காரியமல்ல என்பதும் மிகவும் கடினமானதென்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால், ஒன்று
சிங்களவரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வெளியேற வேண்டும். அல்லது அழிந்துபோக
வேண்டும்! எனவே,
நாங்கள் போராடி தனி ஈழத்தை நிறுவியே தீருவோம். நாங்கள் கூட்டாட்சிக்
கோரிக்கையை அடியோடு கைவிட்டு விட்டோம். எங்கள் தனி
நாட்டிற்கான இயக்கம் அஹிம்சை அடிப்படையிலேயே நடைபெறும் என்று உணர்வுப்பூர்வமாக நின்று உரையாற்றினார் செல்வா.
எந்த
இனத்திற்கும் சொந்தத் தாயகம் வேண்டும்
ஓர்
இனமானது, தன் மொழி, உரிமை உட்பட பலவற்றை இழந்தாலும் அதை மீண்டும் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெற்றும் விடலாம். ஆனால், ஓர் இனம்
தன் தாயகத்தை, தன் வாழ்வகத்தை, தன் பரம்பரைப் பகுதியை இழந்தால், பறி கொடுத்தால், அந்த இனத்திற்கு எதிர்காலமே இல்லை!
ஓர்
இனம் தன்னைத்தானே வெளிக்காட்ட அதற்குக் கட்டாயம் ஒரு தாயகம் வேண்டும் என்று ஆணித்தரமாக அறிவித்து, வலியுறுத்தினார் செல்வா அவர்கள். வேறு எந்தத தலைவரும் இந்த அளவிற்கு இக்கருத்தை அப்போது வலியுறுத்தவில்லை.
இவரது
இத்தகைய முழக்கங்களால், எதிர்காலம் பற்றிய இவரது அக்கறையால், இனத்தின்மீதுள்ள பாதிப்பை இவர் தெளிவுபடுத்தியதால், ஈழத் தமிழினம் விழிப்பு பெற்றது. வீறுகொண்டது. வீரம்
காட்டியது.
தமிழ்
ஈழம் தமிழர்தம் உயிர்மூச்சு
இலங்கைத்
தமிழ்மக்கள், தங்களுக்குப் பாதிப்பு வரும்போது, தங்கள்மீது தாக்குதல்
நடத்தப்படும்போது, அவர்கள் தப்பித்து ஓடி பாதுகாப்புத் தேடிக் கொள்ளும் பகுதியாக உள்ளவையே இன்றைக்குத் தமிழ் ஈழப் பகுதி என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்
ஈழம் என்ற தனி நாட்டுக் கோரிக்கை இனி மாற்ற முடியாத முடிவாகும். இது வெறும் பேரம் பேசுவதற்கான கோரிக்கை அல்ல. (Our demand for a
separate state is an irrevolcable decision. It is not just made for bargaining
purpose) இலங்கையை
ஆண்ட தமிழினம் ஈழத்தைக் கேட்பது புதிய கோரிக்கையல்ல. இழந்ததை மீண்டும் கேட்கும் போராட்டம் என்பதே உண்மை! அந்த ஈழத்தை
தனி நாட்டை தனி அரசைப் பெற உறுதிபூண்டுவிட்டோம்... என்று போர்க் குரலும், உரிமைக்குரலும் எழுப்பினார் செல்வா
அவர்கள்.
போர்
புரிந்தே பெற வேண்டும்!
தமிழினத்தின்
உரிமைப் போராட்டத்தில் இரத்தம் சிந்தியும், சிறையேற்றும், பொருளை இழந்தும், உயிர் துறந்தும்
அல்லல் அடைந்துள்ளோம். என்றாலும் இதுவரை வெற்றி கிட்டவில்லை. ஆனால், வெற்றி கிடைக்கும்
நாள் வெகுதூரத்தில் இல்லை.
இறுதி
வெற்றி தமிழினத்திற்கே! இதில் அய்யம் அறவே இல்லை! அதற்கு முழுமையான
வெற்றி கிட்டும் வரை போர் புரிந்தேயாக வேண்டும். தோல்வி மனப்பான்மை
வரவே கூடாது! என்று தீர்க்கமாகவும்
தீவிரமாகவும் கூறினார் செல்வா அவர்கள்.
நடுங்கும்
யாக்கை, நடுங்காக் கொள்கை
வயது
முதிர்வால், உடல் தளர்வால் செல்வாவின் உடல் நடுக்கமுற்றது. நா தடுமாறியது. ஆனால் அவர் உள்ளம் எஃகு என உறுதியாய் நின்றது. தந்தை பெரியார்
போன்றே தந்தை செல்வாவும் இருந்தார்.
இதனை
இலங்கை மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த கவிஞர் அக்கரைச் சக்தி என்பவர் அழகுற கூறியுள்ளார்.
நடுநடுங்கும்
கைகால்கள்; நடுங்காக் கொள்கை
நாவெடுத்துப்
பேச முடியாவிட்டாலும்
சிடுசிடுப்பு
இல்லாது சீராய் நேராய்ச்
செந்தமிழர்
வாழ்விற்கே சேர்ந்த சொற்கள்
அடுத்தடுத்து
வருவதனை அழகு ஈழம்
ஆர்வத்தோ
டெதிர்பார்த்து அதனைக் கேட்கும்!
நடுநிலைமை
தவறாத நல்ல நோக்கு
நம்
தமிழர் மூதறிஞர் செல்வா நாக்கு
பஞ்சடைந்த
இரு கண்கள்! ஆனால், அந்தப்
பார்வைதான்
தமிழ்மகனைப் பலவானாக்கும்!
வெஞ்சிறையுள்
புகுதற்கும் விரலை ஈனும்
வேகத்தைத்
தீவிரத்தை மேலும் கூட்டும்
அஞ்சாமை
மந்திரத்தை அகத்தில் ஓதும்
ஆயிரமாய்த்
தியாகிகள் ஆக்கப் போகும்
நஞ்சுகளை
அமுதாக்கி நமக்கு நல்கும்
நாற்பது
லட்சம் தமிழர் நாட்டை மீட்கும்!
நடுநடுங்கும்
ஒல்லியான உடலோடு, விரைவாக நாவைச்
சுழற்றி பேச இயலாத நிலையிலேகூட, வீரமான மொழிகளைத் தமிழர்க்குச் சொல்லி, அவர்களை விழிப்பூட்ட
அவர் தவறியதில்லை.
1977ஆம் ஆண்டு, உடல் நலிவுற்றிருந்த
செல்வா அவர்கள், தெல்லிப்பளை - யாழ்ப்பாண இல்லத்தில்
நடக்கும்போது இடறி விழுந்துவிட்டார். தலையில் பலத்த காயம் அடைந்தார். அதன் விளைவாய்
செயலிழந்த செல்வாவை, யாழ்ப்பாணம் மருத்துவமனையில்
சேர்த்தார்கள்.
இனத்துக்காகப்
போராடும் இணையற்ற தலைவர், உயிருக்குப் போராடும்
நிலையறிந்ததும் கலைஞர் மு.கருணாநிதி
அவர்கள் அதிர்ச்சியும் கவலையும் கொண்டார். அப்பெருமகனாரை, எப்படியாவது
காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில், தமிழகத்தின் தலைசிறந்த நரம்பியல் வல்லுநர் மருத்துவர் இராமமூர்த்தி அவர்களை வானூர்தி மூலம் இலங்கைக்கு உடனடியாக அனுப்பி சிகிச்சை அளிக்கும்படி செய்தார். தொலைபேசி வழியாக
அடிக்கடி தொடர்பு கொண்டு உடல்நிலை கேட்டறிந்தார்.
கலைஞர்
அவர்கள் பெரும் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், செல்வாவின் உயிரைக்
காப்பாற்ற இயலவில்லை. 1977ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் நாள் தந்தை செல்வா அவர்கள் மரணமடைந்தார்கள்.
அவர்
மறைந்தாலும் அவர் ஊட்டிச் சென்ற உணர்வுகள் மறையவில்லை. மாறாக மடங்குகள் பலவாக வளர்ந்துள்ளன.
நெருக்கடி
காலத்தில் இலங்கைத் தமிழினத்திற்குக் கிடைத்த ஒரு மாபெரும் தலைவர் இவர் (A
Leader in Crisis) தமிழீழக்
கோட்பாட்டிற்கு முதன்முதலில் வித்திட்ட பெருமை இவரையே சாரும். அவர் எடுத்த
முடிவுதான் இன்றைக்கு இறுதி நிலைப்பாடாக நிற்கிறது. உண்மை நிலைகளை
உற்று நோக்குகின்றவர்களுக்கு இது சரியாய் விளங்கும்.
தமிழீழம்
முடிந்த முடிவு என்றார் தந்தை செல்வா. அமைதி வழிநாடிய
அவராலே அந்த முடிவுதான் இறுதி முடிவாகக் கொள்ளப்பட்டது என்றால் அதைத் தவிர்க்க முடிவேது? இலங்கைத் தமிழ்
மக்களுக்கு விடிவேது?
வாழ்க
செல்வாவின் புகழ்!
நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment