Posts

கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part -1

தமிழக முதல்வர் கலைஞர் மு . கருணாநிதி அவர்கள் கொடுக்கின்ற அடைமொழிகள் அனைத்துமே நிலைத்துவிடுகின்றன . அவ்வகையில் , மலேசியாவில் மலையகத் தமிழர்களுக்காக அரும்பாடுபட்டு , அநேகத் தியாகங்களைச் செய்து , ஆங்கிலேயர்களால் நயவஞ்சகமாக நாணேற்றிக் கொல்லப்பட்ட ஒரு மாபெரும் மனிதருக்கு என்ன அடைமொழி கொடுக்கலாம் என்று முயன்று முயன்று சிந்தித்தாலும் , இறுதியில் கலைஞர் கொடுத்த அடைமொழியே பொருத்தமாகவும் , கருத்தாழம் உடையதாகவும் , உணர்வூட்டக் கூடியதாகவும் இருப்பதால் அந்த அடைமொழியோடு இங்கு அவரை ( கணபதியை ) அறிமுகப்படுத்தியுள்ளேன் . ஆம் , அவர் அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில்தான் இன்றைக்கு உள்ளார் . அவரைப் பற்றி இன்றைக்கு எத்தனைத் தமிழர்களுக்குத் தெரியும் ? 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , மலேசியாவில் தமிழ் , தமிழர் மீட்சிக்கும் எழுச்சிக்கும் பரப்புரை செய்ய பல இடங்களுக்கும் சென்றேன் . அவ்வாறு கோலாலம்பூரில் சென்று கொண்டிருந்தபோது , என்னுடன் காரில் பயணம் செய்த மலேசிய தோழர்கள் , ஒரு சிறைச்சாலையைக் காட்டி , இச்சிறையில் தான் மலேசியத் தமிழர்களின் ...