கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part-2
போதைக்கு மக்கள் அடிமையாகி அழியக்கூடாது என்பதற்காக போதை ஒழிப்பு , நடவடிக்கைகளையும் , மக்கள் மது அருந்தக் கூடாது என்ற பிரச்சாரத்தையும் மேற்கொண்டார் . திருட்டு , கொள்ளை , கொலை போன்ற சமூக எதிர்ச் செயல்களைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்திய கணபதி , அவை நிகழாமல் தடுக்க , மக்களைப் பாதுகாக்க பாதுகாப்புப் படைகளை உருவாக்கினார் . இந்திய தேசிய இராணுவத்தில் இருந்தவர்களையும் , முற்போக்காளர்களையும் , பகுத்தறிவுச் சிந்தனையாளர்களையும் இப்பாதுகாப்புப் படையில் சேர்த்தார் . இப்படையின் முக்கியப் பணிகளாகக் கீழ்க்கண்டவற்றை வரையறுத்தார் . 1. தொழிலாளர்களிடையே ஒற்றுமை , வர்க்க உணர்வு , தேசிய உணர்வு , நாடு தன்னாட்சி பெற ...